வோல்க்ஸ்வேகன் இந்தியா, டிசம்பர் 19 ஆம் தேதி பீட்டலை மறுஅறிமுகம் செய்கிறது
published on டிசம்பர் 11, 2015 04:18 pm by raunak for வோல்க்ஸ்வேகன் பீட்டில்
- 13 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
வோல்க்ஸ்வேகன் பீட்டல் காரில், 1.4-லிட்டர் TSi டர்போ பெட்ரோல் மோட்டாரை நேர்த்தியான முறையில் பெற்று, மினி கூப்பர் S, ஃபியட் அபார்த் 595 கம்பெட்டிசியோன் ஆகியவை உடன் மெர்சிடிஸ்-பென்ஸ் A-கிளாஸ் மற்றும் BMW 1 சீரிஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
ஜெய்ப்பூர்: ஒரு சுருக்கமான இடைநிறுத்தத்திற்கு பிறகு, இம்மாதம் (டிசம்பர்) 19 ஆம் தேதி இந்திய சந்தையில் பீட்டல் காரை, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மறுஅறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய பீட்டல் காருக்கு ரூ.1 லட்சம் முன்பணத்தை செலுத்தி முன்பதிவு செய்யும் பணிகள், ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னே துவங்கியது. அவை நாடெங்கிலும் உள்ள வோல்க்ஸ்வேகன் டீலர்ஷிப்களின் மூலம் அளிக்கப்பட உள்ளது. அது ஒரு CBU (முழு கட்டமைப்பு கொண்ட தயாரிப்பு – கம்ளிட்டிலி பில்ட் யூனிட்ஸ்) இறக்குமதி என்பதால், இதன் விலை ஏறக்குறைய ரூ.30 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த புதிய பீட்டல், வோல்க்ஸ்வேகனின் 1.4-லிட்டர் TSI – அதாவது டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் ஒரு 7-ஸ்பீடு DCT டயல்-கிளெச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்று இயக்கப்படும். இந்த மோட்டார் மூலம் 150 PS ஆற்றல் பெறப்படுகிறது. மேலும், R16 அலாய் வீல்கள் மூலம் 205 / 60-களைப் பெற்று, ஆட்டோ ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் மற்றும் பிரேக் எனர்ஜி ரிஜெனரேஷன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதை தவிர, இதில் தரமான 6-ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்டு ஃபங்ஷன் உடன் ESC (எலக்ட்ரோனிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல்), ABS (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்), ASR (ஆன்டி-சிலிப் ரெகுலேஷன்), EDL (எலக்ட்ரோனிக் டிஃப்பரன்டியல் லாக்) மற்றும் EDTC (என்ஜின் ட்ராக் டார்க் கன்ட்ரோல்) ஆகியவற்றை கொண்டுள்ளன.
இதில் உள்ள அம்சங்களை குறித்து பார்க்கும் போது, டர்ச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், பை-ஸீனன் ஹெட்லைட்கள் உடன் கூடிய LED டேடைம் ரன்னிங் லைட்கள் (DRL), LED டெயில்லேம்ப்கள் பனோராமிக் சன்ரூஃப், ஆட்டோ ரெயின் லைட் சென்ஸர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், உயரம் சீரமைக்கும் அமைப்பு கொண்ட முன்பக்க சீட்கள் மற்றும் லம்பர் சப்போர்ட் உடன் கூடிய ஹீட்டிங் தேர்வு உள்ளிட்ட பல அம்சங்களை அளிக்கின்றன. ORVM-ன் கீழ் பவர்-அட்ஜஸ்டபிள், மடக்கக் கூடிய (ஃபேல்டபிள்) மற்றும் ஹீட்டடு ஆகியவற்றை கொண்டுள்ளது.
மேலும் வாசிக்க