வோல்க்ஸ்வேகன் இந்தியா போலோ ஹேட்ச் கார்களை விநியோகிக்க வேண்டாம் என்று தனது டீலர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
published on அக்டோபர் 08, 2015 07:03 pm by அபிஜித் for வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தனது டீலர்களிடம் போலோ ஹேட்ச்பேக் வகை கார்களின் விநியோகத்தை உடனே நிறுத்தும் படி ஒரு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன என்பது சொல்லப்படவில்லை என்றாலும் இப்போதைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் இரண்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வோல்க்ஸ்வேகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் , “ எந்த போலோ கார்களையும் (அனைத்து வேரியன்ட்கள் ) வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதை எங்கள் நிறுவனத்திடம் இருந்து இது சம்மந்தமான அடுத்த தகவல் வரும்வரை உடனடியாக நிறுத்துமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம் .” திரு. பங்கஜ் ஷர்மா , விற்பனை நடவடிக்கை தலைவர் மற்றும் ஆஷிஷ் குப்தா , ஏப்டர் சேல்ஸ் பிரிவு, VW நிறுவனத்தின் இந்த இரண்டு மூத்த அதிகாரிகளும் இந்த அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளனர். இந்த அறிக்கை வோல்க்ஸ் வேகன் டீலர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்டு இருக்கிறது. நாம் முன்பு சொன்னதைப் போல் இந்த நடவடிக்கைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே எமிஷன் பிரச்சனை வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தை சூழ்ந்துள்ள நிலையில், இந்த செய்தி அந்த பிரச்சனை சம்மந்தமான ஏதோ ஒரு நடவடிக்கை என்றே வாடிக்கையாளர்களை நினைக்க வைக்கிறது.
இந்த தகவலை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் உறுதி செய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கைக்கான காரணம் பின்னர் சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் எமிஷன் மென்பொருள் விஷயத்திற்கும் இந்த நடவடிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று வோல்க்ஸ்வேகன் தெளிவு படுத்தி உள்ளது. மேலும் எமிஷன் விஷயத்தில் பெரிய சங்கடங்களை வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தந்த EA189 என்ஜின் மற்றும் எமிஷன் மென்பொருள் ஆகியவற்றிற்கும் இந்த நடவடிக்கைக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்று இன்னும் விவரமாக இந்த அறிக்கையில் வோல்க்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.