இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016-னின் பக்: வோல்க்ஸ்வேகன் பீட்டிலின் கேலரி
published on பிப்ரவரி 11, 2016 07:37 pm by அபிஜித் for வோல்க்ஸ்வேகன் பீட்டில்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒரு கச்சிதமான சேடனை, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்வதாக இருந்தால், அது உங்களை அவ்வளவாக கவர வாய்ப்பில்லை. ஆட்டோ எக்ஸ்போ 2016-க்கான அதன் தயாரிப்பு வரிசை நிச்சயம் அதை செய்துள்ளது. இந்நிலையில், இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளருக்கு இந்த முறை, அதன் உயர்தர கார்களை மட்டுமே காட்சிக்கு வைக்க முடிந்தது. அமியோ மற்றும் புதுப்பிக்கப்பட்ட வென்டோ ஆகியவற்றை தவிர, சந்தையில் பிரபலமான எந்த தயாரிப்பும் வெளியிடப்படவில்லை. பாஸ்அட் பிளெக்-இன் ஹைபிரிடு, டிகுவான், வோல்க்ஸ்வேகன் வென்டோ கப் வாகனம் மற்றும் ஜாலி கார், பீட்டில் உள்ளிட்ட கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
உண்மையைக் கூறினால், அந்த பழைய பீட்டிலிற்கு நானும் ஒரு ரசிகன். ஆனால் புதிய பீட்டிலின் படங்களை நான் பார்த்த போது, பீட்டிலின் மீதான என் ரசனை சரிவை கண்டு மொத்தமாக கவிழ்ந்துவிட்டது. ஆட்டோ எக்ஸ்போவில் இருந்த இந்த நவீன மறுஉருவாக்கத்தை பார்வையிட்ட போது, இந்த புதிய மூட்டைப் பூச்சியின் (பக்) மீதான எனது எண்ணங்கள் உடனடியாக மறைந்தது. பீட்டிலை சுற்றிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு, அந்த காருக்குள் நுழைவதற்கான வாய்ப்பு தங்களுக்கு எப்போது கிடைக்குமோ என்ற ஆசையோடு காத்திருந்தனர். சில உள்புற படங்களை பிடிக்கும் வகையில், மற்றவர்களை போல நானும் அந்த வரிசையில் நின்றேன். நான் அமைதியாக பின்னணியில் நின்ற போது, காரின் பெயிண்ட் மற்றும் அதன் பினிஷிங் ஆகியவை என் கண்களை கவர்ந்தது. வளைந்த மத்திய பகுதியில் மூடப்பட்ட நிலையிலான லைன்களை கொண்ட பாடியின் அமைப்பு, லேசரால் துல்லியமானதாக தோற்றம் அளித்தது. மேலும், ஆர்ச்சுகளை சரியாக நிரப்பும் டையர்கள் மற்றும் அதை சுற்றிலும் மூடியதாக காணப்படும் அதன் டைமண்ட் கட் வீல்கள் ஆகியவற்றை கொண்டிருந்தது.
கடைசியாக, நானும் காருக்குள் சென்ற போது, அதே நிலையில் அமைந்த ஜெர்மன் தரத்தை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். வெளிப்புற நிறத்தை உள்ளே உள்ள டேஸ்போர்டிற்கும், மற்ற பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆதரவாக அமைந்த சீட்களை பெற்றுள்ளதோடு, இது ஒரு 3-டோர் ஹேட்ச்சாக இருப்பதால், ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டாலும் எல்லாமே உங்களுக்கு அருகிலேயே அமைந்திருப்பதால், ஒரு பாதுகாப்பான உணர்வு ஏற்படுகிறது. ஒருவருக்கு இறுதியாக, பின்புற சீட்கள் மற்றும் இரண்டு டோர்கள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்து செயல்பட முடிகிறது.
பீட்டிலை படம்பிடிக்க நான் முயற்சி செய்தேன். இது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
0 out of 0 found this helpful