சோதனைக்காக, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வோல்க்ஸ்வேகன் 1.0L போலோ TSI
nabeel ஆல் டிசம்பர் 01, 2015 03:54 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சமீபகாலமாக வோல்க்ஸ்வேகன் ஹாட்ச்களை குறித்து அதிகளவில் செய்திகள் வெளியாகின்றன. மார்க்-7 கோல்ஃப் அல்லது போலோ GTI ஆகியவை, ஆட்டோமொபைல் தளங்களின் தலைப்புச் செய்திகளில் எப்போதும் இடம் பெறுகின்றன. இந்நிலையில், வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் மூலம் இப்போது ஒரு 1.0 லிட்டர் போலோ TSI-வை, சோதனை நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 1.2L MPI, 3-சிலிண்டர் இன்-லைன் பெட்ரோல், 1.5L TDI 4-சிலிண்டர் இன்-லைன் டீசல், 1.2L TSI மற்றும் 4-சிலிண்டர் இன்-லைன் பெட்ரோல் (GT TSI) ஆகியவற்றின் வரிசையில் இதுவும் இணைக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி ரூ.20.44 லட்சம் மதிப்பில் சோதனை நோக்கங்களுக்காக இந்த கார், ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள 1.0 லிட்டர் போலோ TSI மூலம் 109bhp ஆற்றல் உடன் 200 Nm முடுக்குவிசையை வெளியிடுகிறது. மேலும் இந்த என்ஜின், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல ஒரு ப்ளூமோஷன் 1.0 லிட்டர் போலோ TSI மூலம் 94 bhp மற்றும் 160 Nm முடுக்குவிசையை அளித்து, ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்பது தெளிவு இல்லாத பட்சத்தில், எந்த பவர்டிரையினை இது பின்தொடருமோ.
சமீபத்தில் இந்தியாவில், புனே நகரின் சாகனில் உள்ள இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளரின் தலைமை தயாரிப்பு தொழிற்சாலையின் அருகே, மார்க்-7 வோல்க்ஸ்வேகன் கோல்ஃப் கார் வேவுப் பார்க்கப்பட்டது. இடதுகை ஓட்டுநர் கட்டமைப்பை கொண்ட இந்த கார், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒரு கச்சிதமான சேடனை நம் நாட்டில் அறிமுகம் செய்ய இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். போலோ ஹாட்ச்பேக்கின் பிளாட்பாமை, இந்த புதிய கச்சிதமான சேடன் பகிர்ந்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வோல்க்ஸ்வேகன் போலோவில் உள்ள உதிரிப் பாகங்கள் மற்றும் ஆற்றல் தேர்வுகளில் சிலவற்றையும், இந்த புதிய கச்சிதமான சேடன் பகிர்ந்து கொள்ளக் கூடும்.
இதையும் படியுங்கள்