கச்சிதமான கார் பிரிவில் மஹிந்திராவின் அடுத்த தயாரிப்பு: TUV300
published on ஆகஸ்ட் 19, 2015 03:30 pm by அபிஜித்
- 19 Views
- 5 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
கச்சிதமான (காம்பேக்ட்) கார் பிரிவில் இதுவரை பல வெளியீடுகளை நாம் பார்த்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர், மாருதி எஸ் கிராஸ் மற்றும் ஹூண்டாய் க்ரேடா ஆகியவை வாகன தொழிற்துறையில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு குறுகிய காலத்தில் கச்சிதமான SUV மற்றும் கச்சிதமான சேடன் ஆகிய இரு பிரிவுகளிலும் அதிகளவில் புதிய வாகனங்கள் வெளியாகி, தங்கள் பிரிவில் உள்ள போட்டியை அதிகரித்து உள்ளன. கவனிக்கத்தக்க இந்த நேரத்தில், கச்சிதமான கார் பிரிவில், நாமும் ஒரு கை பார்க்கலாம் என்ற முயற்சியில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. கச்சிதமான SUV பிரிவை குறிவைத்து, அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக TUV300-யை (300 என்பதை 3 டபுள் ஜீரோ என்று உச்சரிக்க வேண்டும்) வெளியிடுகிறது. இந்த கார் நம்பிக்கை அளிப்பதாக காட்சியளிக்கிறது.
எனவே கச்சிதமான கார் பிரிவில் ஒரு சிறந்த அனுபவம் பெறாத மஹிந்திராவுக்கு, இது எந்த வகையில் உதவும் என்பதை பார்ப்போம்.
TUV300 குறித்து நாம் பார்ப்பதற்கு முன், கச்சிதமான கார் பிரிவில் மஹிந்திராவின் நிலை எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் திரும்பி பார்ப்போம். முதலில் ரெனால்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து லோகன் காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால் அது நீண்டகாலத்திற்கு தாக்குபிடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, கூட்டு முயற்சியை கைவிட்டு இருவரும் பிரிந்த நிலையில், லோகனின் அடையாளத்தை மறைக்கும் வகையில் வெரிட்டோ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் லோகன் பெற்ற வெற்றியை கூட வெரிட்டோவினால் பெற முடியாத நிலையில், லோகன் இன்னும் மிக குறைந்த எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இதேபோல, ஹாட்ச்பேக்காக வெளி வந்த வெரிட்டோ வைப் கூட எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அடுத்தபடியாக, கச்சிதமான SUV அல்லது கிராஸ்ஓவர் பிரிவில் குவான்ட்டோ வெளியானாலும், அது பார்வைக்கு அப்படி தெரியவில்லை. சைலோவில் ஆங்காங்கே சிறிய மாற்றங்களை செய்தது போல காட்சியளித்தது. 4 மீட்டருக்கு உட்பட்டு அமையும் வகையில், அதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இந்த பிரிவிற்கு எப்படியோ ஒரு தயாரிப்பை அளித்துவிட்டனர். ஆனால் இதற்கான போட்டியாளர்கள் வரும் வரை, குறைந்த விலையில் பெரிய காரை எதிர்பார்ப்போருக்கு, இது ஒரு சிறந்த தேர்வாகவே இருந்தது.
காலப்போக்கில் மஹிந்திரா நிறுவனம் காலத்திற்கேற்ப மேம்படுத்தல்களை அளித்தும், இப்பிரிவில் போட்டியாளர்களாக வந்த ஈகோ ஸ்போர்ட், டஸ்டர், க்ரேடா, எஸ்-கிராஸ் ஆகியவற்றால், இப்பிரிவில் இதற்கு இருந்த கொஞ்ச மதிப்பும் இழந்தது.
ஆனால், கடினமானது எப்போதும் நகர்ந்துக் கொண்டே இருக்கும் என்பது போல ஆனது மஹிந்திராவின் கதை. SUV-களை உருவாக்குவதில் தாங்களே சிறந்தவர்கள் என்பதை அந்நிறுவனம் உணர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனவே தான் அந்த வரிசையில் TUV300 கொண்டு வருகிறது. ஏனெனில் மஹிந்திராவிடம் இருந்து வெளியாகி, மிகவும் வெற்றியடைந்த 4 கார்களும் SUV-கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னொன்றும் இந்த வரிசையில் சேரக் கூடாது என்றில்லை. இப்பிரிவை சேர்ந்த தி தார், ஸ்கார்பியோ, XUV500, போலேரோ ஆகியவை இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
எது தான் இல்லை TUV 300 வாகனத்தில் !
இது ஒரு வெட்டி-ஒட்டும் வேலை அல்ல: இதில் வடிவமைப்போ, சோதனையோ அல்லது என்ஜினோ இருக்கட்டும், மஹிந்திரா ஒரு புதுமையை புகுத்தி உள்ளது. பின்னின்ஃபாரினாயின் சில வடிவமைப்பு உள்ளீடுகளை கொண்டுள்ள இந்த கார், சென்னையில் உள்ள மஹிந்திரா ரிசர்ச் வேல்லி- aka MRV-வில் வைத்து உள்ளக வளர்ச்சி (இன்-ஹவுஸ் டெவலப்மெண்ட்) அடைந்துள்ளது.
இதுதான் TUV 300!
இது முழுக்க முழுக்க ஒரு கச்சிதமான காராக இருக்கும் என்பதால், ஒரு சிறிய காரை போல வாகனத்தை கையாளும் ஒருவரின் விருப்பத்தை, இது பூர்த்தி செய்யும். அதே நேரத்தில், சி-பிரிவு சேடன் உடன் ஒப்பிட்டால், இதில் இடவசதி அதிகமாக காணப்பட்டு, ஒரு SUV-யை போல காட்சியளிக்கிறது.
பின்புற கதவில் மேலேறி செல்லும் வகையிலான ஸ்பேர் வீல் (டெயில்கேட்-மெளன்ட்டு ஸ்பேர் வீல்), நேர்த்தியான கேரக்டர் லைன்கள், காம்பேட் டேங்க்-கில் இருக்கும் சதுர வடிவ கட்டங்களை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்து, கடல் மெல்லுடலியின் (ஸீ ஷேல்) உட்புறம் மறைந்திருக்கும் தோற்றத்தை போல காட்சியளிக்கிறது. இதனால் உருவத்தில், ஒரு காம்பேட் டேங்க்-கை சார்ந்தது என்று கூறலாம்.
உட்புறத்தை பொறுத்த வரை, நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான நவீன வசதிகளான சமகால டேஷ் மற்றும் பேனலிங், காருக்குள் பொழுதுபோக்கு அமைப்பு (இன்-கார் எண்டர்டேய்னிங் சிஸ்டம்) மற்றும் தரமான பொருட்களை கொண்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான காரியங்களை சற்று ஆழ்ந்து பார்க்கையில், இது எம்ஹாக் 80 மோட்டாரை கொண்டிருக்கலாம் என்பதால், 1.5-லிட்டர் டீசல் மில் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் 80bhps கிடைக்கும் என்று தெரிகிறது.
கடைசியாக, TUV300 ஒரு 4 மீட்டருக்கு உட்பட்ட வாகனம் என்பதால், இதன் விலை நிர்ணயம் நன்றாக இருக்கும் பட்சத்தில், இதன் போட்டியாளர்களுக்கு ஒரு சரிவை ஏற்படுத்தலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அதன் போட்டியாளர்களுக்கு இது ஒரு கெட்ட செய்தியாக இருக்கும். ஏனெனில், இந்தியாவில் மஹிந்திராவிற்கு மிகவும் வலுவான டீலர்கள் பிணைப்பு இருப்பதை நாம் அறிவோம்.