இந்தியாவில் வெளியானது Toyota Taisor: விலை ரூ.7.74 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
published on ஏப்ரல் 03, 2024 01:23 pm by rohit for டொயோட்டா டெய்சர்
- 250 Views
- ஒரு கருத்தை எழுதுக
அர்பன் க்ரூஸர் டெய்சர் 5 வேரியன்ட்களில் கிடைக்கும். மாருதி ஃபிரான்க்ஸ் உடன் ஒப்பிடும் போது வெளிப்புறத்தில் சில மாற்றங்களை பார்க்க முடிகின்றது.
-
இது மாருதி ஃப்ரான்க்ஸ் காரை அடிப்படையாகக் கொண்டது. மாருதி மற்றும் டொயோட்டா இடையே ஆறாவது பகிரப்பட்ட கார் ஆகும்.
-
ஃப்ரான்க்ஸ் உடன் ஒப்பிடும் போது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட கிரில், முன்புற மற்றும் பின்புறம் LED லைட்டிங், மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது.
-
கேபின் ஃபிரான்க்ஸ் போலவே உள்ளது. பிளாக் மற்றும் மெரூன் தீம் கொண்ட இன்டீரியர் கொடுக்கப்பட்டுள்ளது.
-
9 இன்ச் டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் உட்பட அதே வசதிகளுடன் வருகிறது.
-
டொயோட்டா இதை ஃபிரான்க்ஸ் காரில் உள்ளதை போலவே 1.2-லிட்டர் N/A மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் வழங்குகிறது.
-
அர்பன் க்ரூஸர் டெய்சர் காரின் விலை ரூ.7.74 லட்சம் முதல் ரூ.13.04 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருக்கும்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இது மாருதி ஃப்ரான்க்ஸ் அடிப்படையிலான டொயோட்டாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாகும். இதன் மூலம் டொயோட்டா சப்-4m எஸ்யூவி பிரிவில் மீண்டும் நுழைந்துள்ளது. டொயோட்டா இதை 5 வேரியன்ட்களில் வழங்குகிறது.
வேரியன்ட் வாரியான விலை
வேரியன்ட்கள் |
1.2 லிட்டர் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
சிஎன்ஜி |
E |
ரூ. 7.74 லட்சம் (MT) |
விவரம் இல்லை |
ரூ. 8.72 லட்சம் (MT) |
S |
ரூ. 8.60 லட்சம் (MT)/ ரூ 9.13 லட்சம் (AMT) |
விவரம் இல்லை |
விவரம் இல்லை |
S+ |
ரூ. 9 லட்சம் (MT) / ரூ 9.53 லட்சம் (AMT) |
விவரம் இல்லை |
விவரம் இல்லை |
G |
விவரம் இல்லை |
ரூ.10.56 லட்சம் (MT)/ ரூ.11.96 லட்சம் (AT) |
விவரம் இல்லை |
V |
விவரம் இல்லை |
ரூ.11.48 லட்சம் (MT)/ ரூ.12.88 லட்சம் (AT) |
விவரம் இல்லை |
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை
டாப்-ஸ்பெக் V வேரியன்ட்களும் ரூ.16000 கூடுதலாக டூயல்-டோன் எக்ஸ்ட்டீரியர் பினிஷிங்கில் கிடைக்கின்றன.
CarDekho India (@cardekhoindia) -ல் ஷேர் செய்யப்பட்ட பதிவு
எக்ஸ்ட்டீரியர் விவரங்கள்
டெய்சர் ஆனது ஃபிரான்க்ஸ் போன்ற அதே பாடி அமைப்பை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் டொயோட்டா நிறுவனம் இதை ஃபிரான்க்ஸில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக தனித்துவமான ஸ்டைலிங்கில் நிறைய விஷயங்களை கொடுத்துள்ளது. புதிய வடிவிலான கிரில், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்டுள்ள LED DRLகள் மற்றும் டெயில்லைட்டுகளுக்கான புதிய வடிவமைப்பு மற்றும் வித்தியாசமான பாணியில் 16-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றை இந்த காரில் பார்க்க முடிகிறது.
புதிய கேபின்
மாருதி ஃபிரான்க்ஸின் அதே கேபின் மற்றும் டேஷ்போர்டு அமைப்புடன் இந்த கார் வருகின்றது. ஸ்டீயரிங் வீலில் டொயோட்டா பேட்ஜிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஐடென்டிக்கல் பிளாக் மற்றும் மெரூன் கேபின் தீம் இன்ட்டீரியரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வசதிகள்
9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை ஃபிரான்க்ஸை போலவே டெய்சரிலும் கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க: டாப்-ஸ்பெக் Toyota Innova Hycross காரின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மீண்டும் தொடக்கம்
பவர்டிரெய்ன் விவரங்கள்
டொயோட்டா நிறுவனம் டெய்சரில் ஃப்ரான்க்ஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ள அதே பவர்டிரெய்ன்களை பயன்படுத்துகிறது அவை:
விவரங்கள் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2-லிட்டர் பெட்ரோல்+சிஎன்ஜி |
பவர் |
90 PS |
100 PS |
77.5 PS |
டார்க் |
113 Nm |
148 Nm |
98.5 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT 6-ஸ்பீடு AT |
5-ஸ்பீடு MT |
போட்டியிடும் கார்கள்?
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்ஸர் காரானது மாருதி ஃபிரான்க்ஸ் -க்கு போட்டியாக இருக்கும். மேலும் கியா சோனெட், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் புதிதாக வரவிருக்கும் ஃபேஸ்லிஃப்ட் மஹிந்திரா XUV300 ஆகியவற்றுடனும் போட்டியிடும்.
0 out of 0 found this helpful