இனோவா மற்றும் ஃபார்ச்யூனர் ஆகியவற்றில் பெட்ரோல் பதிப்புகளை டொயோட்டா அறிமுகம் செய்ய வாய்ப்பு
published on ஜனவரி 06, 2016 01:11 pm by sumit for டொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும், தங்கள் தயாரிப்புகளை காப்பாற்ற, கார் தயாரிப்பாளர்கள் சில மாற்று வழிகளை கண்டுபிடிக்க துவங்கியுள்ளனர். அதற்காக சில வாகன தயாரிப்பாளர்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் மீது தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர்; மற்றவர்கள் பெட்ரோல் என்ஜின் மீது தங்களின் முயற்சிகளை செலுத்தி வருகின்றனர்.
இதன்படி டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், தனது அதிக விற்பனையை கொண்ட இரு வாகனங்களான இனோவா மற்றும் ஃபார்ச்யூனர் ஆகியவற்றின் விற்பனையை இழந்துள்ளது. இந்த வாகனங்களின் பிரபலத் தன்மையை கருத்தில் கொண்டு, இவற்றின் பெட்ரோல் வகைகளை அறிமுகம் செய்வது குறித்து இந்த ஜப்பான் நிறுவனம் ஆழ்ந்து சிந்தித்து (அறிமுகம் செய்யலாமா?) வருகிறது. இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் துணை நிர்வாக இயக்குனர் (கமர்ஷியல்) TS ஜெய்சங்கர் கூறுகையில், “இனோவாவின் விற்பனையை ஆரம்பித்த போது, ஒரு பெட்ரோல் பதிப்பையும் நாங்கள் அளித்து வந்தோம். ஆனால் டீசல் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கவே, அதன் தயாரிப்பை கைவிட்டோம். தற்போதைய நிலையை பார்த்து, அது தேவைப்படும் பட்சத்தில், அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்” என்றார்.
தடை உத்தரவின் எதிர்கால திருத்தம் குறித்த தனது நம்பிக்கையின்மையை வெளியிட்ட திரு.ஜெய்சங்கர் கூறுகையில், இதற்கான சில மாற்று வழிகளிலும் நிறுவனம் செயல்பட வேண்டியுள்ளது, என்றார். அவர், இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில், NCR பகுதியில் நடைபெறும் விற்பனை 14% பங்கு வகிக்கிறது என்பதை விளக்கினார். அவர் மேலும் கூறுகையில், “உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் திருத்தம் செய்யுமா என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நாம் சில மாற்று வழிகளையும் செயல்படுத்த வேண்டும். இந்த தடை உத்தரவு அமலில் வந்ததில் இருந்து, டெல்லியில் விசாரிப்போரின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. நமது மொத்த விற்பனையில் NCR 14% பங்கு வகிக்கிறது. சில மாற்று தேர்வுகளாக, இனோவா மற்றும் ஃபார்ச்யூனரில் பெட்ரோல் பதிப்புகளை கொண்டுவர ஆலோசித்து வருகிறோம்” என்றார். டெல்லியில் காற்று மாசுப்படுதலை தடுக்க வேண்டும் என்ற துணிச்சலான முடிவின் விளைவாக இந்த தடை உத்தரவு உடனடியாக கொண்டு வரப்பட்டது. ஏனெனில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் சமீபகால ஆய்வின்படி, நாட்டின் தலைநகரத்தில் வாழும் வாழ்க்கை, ‘ஒரு வாயு அறைக்குள் வாழ்வதற்கு’ நிகரானது என்று ஒப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க