2016 டொயோட்டா இனோவா, வீடியோவில் விளக்கப்படுகிறது
published on நவ 16, 2015 05:40 pm by அபிஜித் for டொயோட்டா இனோவா
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
2016 இனோவா மீண்டும் ஒரு முறை உளவுப்படத்தில் சிக்கியுள்ளது. இந்த முறை ஒரு இந்தோனேஷிய டீலர்ஷிப்-பில் வைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிமியம் MPV-யின் உள்புறம் மற்றும் வெளிப்புற அமைப்புகளை இதில் தெளிவாக காண முடிகிறது. இதற்கு முன்னதாகவே, இந்த காரை குறித்து முக்கிய குறிப்புகளை கொண்ட ஒரு வீடியோவை டொயோட்டா இந்தோனேஷியா வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில், இந்த கார் இந்தியாவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரபல MPV, சாலையில் சோதனை ஓட்டம் மற்றும் சிற்றேடு மூலம் பல முறை உளவுப்படங்களில் சிக்கியுள்ளது. இந்நிலையில் வரும் (நவம்பர்) 23 ஆம் தேதி இந்த காரின் உலக அளவிலாக அறிமுகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த MPV-யின் உளவுப்படங்களின் மூலம் வெளிப்புறம் மற்றும் உள்புறம் குறித்த முழுவடிவத்தையும் பெற முடிந்தாலும், முக்கிய வெளிப்புறம், உள்புற மேம்பாடுகள், அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் காரியங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவின் மூலம் ஒரு விரிவான விளக்கம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நவீன வடிவமைப்பு தத்துவத்தின் கீழ் வரிசைப்படுத்துள்ள 2016 இனோவா காரின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும், அடுத்த தலைமுறை ஃபார்ச்யூனர் மற்றும் தற்போதைய கொரோலா ஆகியவற்றை எளிதில் தொடர்புபடுத்த முடிகிறது.
அடுத்து வரவுள்ள 2016 இனோவாவில், ஒரு சிறப்பான ஸ்கீரின் ரெசலூஷன் உடன் கூடிய இந்த பிராண்டிற்கு புதிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒரு புதிய செதுக்கப்பட்ட டேஸ்போர்டு, புதிய ஸ்டீயரிங் வீல், அம்பியண்டு லைட்டிங், கேப்டன் சீட்கள், ஒரு குழுவாக அமைந்த சிறப்பான பொருட்கள் வைப்பு பகுதிகள் மற்றும் கப்ஹோல்டர்கள் ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது. மற்றொருபுறம் வெளிப்புறத்தில், LED DRL-களுடன் கூடிய இரட்டை பேரல் பிரஜெக்டர் ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய பகுதிகளை பெற்று ஆக்ரோஷமான முன்புற அமைப்பையும், கிரிலில் பெருத்த கிடைமட்டமான கிரோம் பார்கள், முக்கியத்துவம் கொண்ட வீல்களின் ஆர்ச்சுகள், இந்த காலத்திற்கு அதிகமாக ஒத்துப் போகும் பின்புறம், புதிய அலாய்கள் மற்றும் மேலும் பலவற்றை கொண்டுள்ளது.
முந்தைய டீசல் மோட்டார் மேம்படுத்தப்பட்டு, ஒரு புதிய மற்றும் அதிக திறன் கொண்ட 2.4-லிட்டர் டர்போசார்ஜ்டு நேரடி இன்ஜெக்ஷன் என்ஜினை கொண்டு, 149 bhp ஆற்றலையும், 342 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் வெளியிடும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், அடுத்த தலைமுறை இனோவாவில் ஒரு 2.0-லிட்டர் VVT-i பெட்ரோல் மோட்டார் மற்றும் டீசலையும் பெற்று காணப்படும்.
இதையும் படியுங்கள்