Toyota Innova EV 2025: இந்தியாவுக்கு வருமா?
டொயோட்டா இன்னோவா EV கான்செப்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2025 இந்தோனேசியா -வில் நடைபெற்று வரும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
டொயோட்டா இன்னோவா EV கான்செப்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தற்போது நடைபெற்று வரும் 2025 இந்தோனேசியா சர்வதேச மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹைகிராஸ் போல இல்லாமல் இது கிரிஸ்டா -வின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை பார்க்கும் முன்னர் டொயோட்டா அதன் அறிமுகம் பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இந்த கார் இன்னும் கான்செப்ட் நிலையிலேயே உள்ளது. சர்வதேச சந்தைகளில் இதன் இறுதி தயாரிப்பு பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
ஒரு வேளை ஆல் எலக்ட்ரிக் கொண்ட இன்னோவா EV-யை அறிமுகப்படுத்துவது டொயோட்டாவிற்கு ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நாங்கள் கருதுகிறோம்.
டொயோட்டா இன்னோவா EV 2025: என்ன மாறியுள்ளது
எலக்ட்ரிக் டொயோட்டா இன்னோவா ஏற்கனவே முன்னர் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது புதிய எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்டுகள் போன்ற சில சிறிய மாற்றங்களை பார்க்க முடிகிறது. முன்பு போலவே இது ஒரு பிளாங்க்டு ஆஃப் கிரில்லை கொண்டுள்ளது. உள்ளே கேபினில் இது ஒரு EV-என்பதை காட்டும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை கொண்டுள்ளது மற்றும் ஆட்டோமெட்டிக் கியர்லீவர் கியர் செலக்டருக்கான பட்டன்களாக மாற்றப்பட்டுள்ளன
இன்னோவா + EV = ஒரு அதிரடி பிளாக்பஸ்டர்
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா எவ்வளவு பிரபலமானது என்பதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் தற்போதைய ஹைகிராஸ் மற்றும் கிரிஸ்டா கூட பிரபலமானதாக உள்ளது. இன்னோவா பெயர்ப்பலகையின் விற்பனையை அதிகரிக்க அதன் எலக்ட்ரிக் வெர்ஷன் உதவும். ஏற்கனெவே ஹூண்டாய் கிரெட்டா, டாடா நெக்ஸான் மற்றும் டாடா பன்ச் மாடல்களில் இதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இந்த மாடல்களில் எலக்ட்ரிக் பவர்ட்ரெய்னின் அறிமுகம் விற்பனையை அதிகரிக்க உதவியது.
தற்போது 50 லட்ச ரூபாய்க்கு கீழே வாங்கக்கூடிய ஒரே எலக்ட்ரிக் MPV -யாக BYD eMAX 7 வேர்ல்ட் உள்ளது. மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கியா கேரன்ஸ் இவி அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இந்த பிரிவில் விருப்பத்தேர்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. மேலும் 7 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய நடைமுறை எலக்ட்ரிக் காரை நீங்கள் வாங்க விரும்பினால், வேறு எந்த தேர்வும் இல்லை. டொயோட்டா இன்னோவா EV -யின் அறிமுகம் வாங்குபவர்களுக்கு இந்த பிரிவில் கூடுதல் தேர்வை கொடுக்கும்.
மேலும் டீசல் இன்னோவா கிரிஸ்டாவின் விலை ரூ. 19.99 லட்சம் முதல் ரூ. 26.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருப்பதால் டொயோட்டா நிறுவனம் இன்னோவா இவி -க்கு ரூ. 50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விலை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளது.
கான்செப்ட்.. ஆனால் நிஜமாகலாம்!
இந்த நேரத்தில் டொயோட்டா இன்னோவா EV -ன் விவரங்களை வெளியிட்டுள்ளது. இவை பேப்பரில் பார்க்கும் போது சக்திவாய்ந்ததாக தெரிகின்றன. ஒரு 59.3 kWh பேட்டரி பேக் 182 PS மற்றும் 700 Nm ஐ வெளிப்படுத்தும் இ-மோட்டருக்கு சக்தி அளிக்கிறது. கிளைம்டு ரேஞ்ச் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியே வரவில்லை ஆனால் விவரங்கள் மூலமாக பார்க்கும் போது 350-400 கி.மீ வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது.
மேலும் பார்க்க: இந்தியாவில் கால்பதிக்கும் டெஸ்லா: நேரடியாக டீலர்ஷிப்களை தொடங்க திட்டமிடுகிறதா ?
இந்த ரேஞ்ச் அடிக்கடி நகரங்களுக்கு இடையே பயணம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல நகரப் பயணங்கள் நீண்டதாக இருப்பவர்களுக்கும் போதுமானதாகத் தெரிகிறது. மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் டீசல் இன்னோவாவுடன் ஒப்பிடும்போது இதன் இயங்கும் செலவு மிகக் குறைவாக இருக்கும் அதே வேளையில் அதே இடம் மற்றும் வசதியை இது கொடுக்கும்.
இன்னோவா EV = இன்னோவா ?
டொயோட்டா இன்னோவா EV ஆனது வசதியான சவாரி, சிறப்பான தரம், புல்லட் ப்ரூஃப் நம்பகத்தன்மை மற்றும் குறைவான பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. எலக்ட்ரிக் பதிப்பும் அதே விஷயங்களை கொண்டிருக்க வேண்டும். மேலும் இது EV பதிப்பு என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இதன் விலை அதிகமாக இருக்கலாம். ஆனால் இயங்கும் மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு இந்த கார் தொடர்பாக நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதுவரை இன்னோவா EV -யை அறிமுகப்படுத்தும் எந்த திட்டத்தையும் டொயோட்டா உறுதிப்படுத்தவில்லை.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.