• login / register

டொயோட்டா இனோவா கிரைஸ்ட்டாவிற்கான முன்பதிவு துவக்கம்!

டொயோட்டா இனோவா crysta 2016-2020 க்கு published on பிப்ரவரி 11, 2016 11:55 am by அபிஜித்

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரூ.40,000 முன்பணமாக பெற்றுக் கொண்டு, டொயோட்டா இனோவா கிரைஸ்ட்டாவை முன்பதிவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த MPV-ன் அறிமுகம், வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், அடுத்துவரவுள்ள வாகனமான டாடா ஹெக்ஸா உடன் போட்டியிட உள்ளது.

2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், இந்த அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இனோவா காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதிகபடியான உள்ளூர் தன்மையோடு கூட இந்தியாவிலேயே இந்த காரை தயாரிக்கப் போவதாக, டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் நவீன 2.4-லிட்டர் என்ஜினின் உற்பத்தி உட்பட கிரைஸ்ட்டாவின் 98 சதவீத தயாரிப்பு பணிகள், நம் நாட்டிலேயே நடைபெற உள்ளது. இதன் விளைவாக, விலைக் குறைய வாய்ப்பு இருந்தாலும், புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களின் நிலையை கொண்டிருப்பதால், தற்போதைய இனோவாவின் விலையை விட சற்று அதிகமாகவே காணப்படும்.

இந்தோனேஷியன் கண்காட்சியில் தோன்றியது உட்பட, ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே எண்ணற்ற காட்சியகங்களை இந்த கார் கண்டிருந்த போதும், மற்ற எல்லா டீஸர் உளவுப்படங்களை காட்டிலும், ஒரு சிறப்பான வாய்ப்பை எக்ஸ்போ நமக்கு அளித்துள்ளது. இதில் அறுங்கோண வடிவ முன்பக்க கிரில் உடன் கூடிய 2 பெரிய பார்கள் இணைந்த கவர்ச்சிகரமான பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் காணப்படுகின்றன. போனட்டின் மேற்புறம் கூடுதலான தடித்த தன்மையைப் பெற்று முக்கியத்துவம் உள்ள தோற்றத்தை பெறுகிறது. புதிதாக செதுக்கப்பட்டது போன்ற அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தை நோக்கிய ஒரு கோணமாக அமைந்த விண்டோ ஆகியவை மூலம் பக்கவாட்டு பகுதி மிகவும் எளிமையாக காட்சி அளிக்கிறது.

தனது தோற்றத்திற்காக பார்கள் எழுப்பியது அல்லது உள்புற அமைப்பியல் அல்லது கருத்தில் கொள்ளும் வகையிலான புதிய கேட்ஜெட்கள் ஆகியவை மட்டும் இந்த இனோவா கிரைஸ்ட்டாவில் மாற்றங்களாக செய்யப்படாமல், பாதுகாப்பு தொடர்பாகவும் அது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. உயர்தர வகையில் மொத்தம் 7 ஏர்பேக்குகளை கொண்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், வரிசையில் அமைந்த மற்ற வகைகளில் இரட்டை ஏர்பேக்குகள், ABS மற்றும் EBD ஆகியவை ஒரு தரமான அம்சமாக காணப்படுகிறது.


ஏற்கனவே கூறியது போல, கிரைஸ்ட்டாவில் 149 PS ஆற்றலை வெளியிடும் புதிய 2.4-லிட்டர் டீசல் என்ஜினை பெற்று, 342 Nm முடுக்குவிசையை அளிக்கிறது. இது ஒரு 5-ஸ்பீடு மேனுவல் உடன் பொருத்தப்பட்டு செயல்படுகிறது. தற்போதைய 2.5-லிட்டர் அளிக்கும் 102 bhp ஆற்றலை விட, இது ஒரு சிறப்பான ஆற்றல் வெளியீடு ஆகும். மேலும் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது ஒரு 2.8-லிட்டர் டீசல் உடன் பொருத்தப்பட்டதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் வாசிக்க 2016 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோடா

வெளியிட்டவர்

Write your Comment மீது டொயோட்டா இனோவா Crysta 2016-2020

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?