மாருதி Fronx அடிப்படையிலான Toyota கிராஸ்ஓவர் இன்று அறிமுகமாகவுள்ளது
published on ஏப்ரல் 03, 2024 12:57 pm by anonymous for டொயோட்டா டெய்சர்
- 49 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய கிரில் மற்றும் LED DRL -களுடன் புதிய வடிவத்தில் முன்பக்கம் இருப்பதை டீஸரில் பார்க்க முடிகின்றது.
மாருதி ஃப்ரான்க்ஸ் காரின் டொயோட்டாவின் பதிப்பு இன்று வெளியாகவுள்ளது. இது ஒரு கிராஸ்ஓவர் என்பதால் கூட இந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவில் டொயோட்டாவின் ரீ என்ட்ரியை இது குறிக்கிறது. இந்த மாருதி அடிப்படையிலான டொயோட்டா மாடலுக்கு " டொயோட்டா டெய்சர்" என்ற பெயர் கொடுக்கப்படலாம்.
வெளிப்புற வடிவமைப்பு
அடிப்படை பாடி அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டு மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸிலிருந்து வேறுபடுத்தும் வகையில் தனித்துவமான ஸ்டைலிங் எலமென்ட்களை டொயோட்டா அறிமுகப்படுத்தும். இந்த மாற்றங்களில் டொயோட்டா பேட்ஜிங், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், தனித்துவமான ஹெட்லைட்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லைட்டுகள் (DRL) மற்றும் டெயில் லேம்ப் டிசைன்கள் ஆகியவை இருக்கும். மாருதி மற்றும் டொயோட்டா இடையே பகிரப்பட்ட எஸ்யூவி -களும் டிஸைனில் சில வித்தியாசங்களை கொண்டிருந்தன.
இந்த வரவிருக்கும் கிராஸ்ஓவருக்கான டொயோட்டாவின் சமீபத்திய டீஸர் மூலம் மேலே உள்ள பல மாற்றங்கள் உறுதியாகியுள்ளன. இது ஒரு புதிய ஆரஞ்சு நிறத்தில் வழங்கப்படும். மாருதி ஃபிரான்க்ஸ் காரில் அந்த கலரை வழங்கவில்லை.
உட்புற வடிவமைப்பு
டாஷ்போர்டு தளவமைப்பு ஃபிரான்க்ஸ் -காரில் இருந்ததைப் போலவே இருக்கும். டொயோட்டா கேபின் நிறங்களை மாற்றலாம். மாருதி மாடலின் பிளாக் மற்றும் பர்கண்டி இன்ட்டீரியருக்கு மாறாக டொயோட்டா வேரியன்ட் லைட் பிரெளவுன்-தீம் கொண்ட உட்புறத்தை தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க: டாப்-ஸ்பெக் Toyota Innova Hycross காரின் விலை இப்போது உயர்த்தப்பட்டுள்ளது, நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவு மீண்டும் தொடக்கம்
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
மாருதி ஃப்ரான்க்ஸின் கேபின் படம் எடுத்துக்காட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
ஃப்ரான்க்ஸில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் டொயோட்டா டெய்சர் காரிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இருக்கலாம். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே பவர்டிரெயின்கள்
முந்தைய மாருதி-டொயோட்டா கார்களை போலவே டொயோட்டா கிராஸ்ஓவர் ஃபிரான்க்ஸ் உடன் இன்ஜின்கள் மற்றும் கியர்பாக்ஸ்களை பகிர்ந்து கொள்ளும். எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்களில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆப்ஷன்களுடன் 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினும் அடங்கும். கூடுதலாக 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் 100 PS மற்றும் 148 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (Boosterjet) இன்ஜினும் வழங்கப்படலாம். ஒரு சிஎன்ஜி வேரியன்ட் பின்னர் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டொயோட்டா டெய்சர் விலை ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபிரான்க்ஸ் காரை விட சிறிதளவு விலை அதிகமாக வரலாம்.
மாருதி ஃபிரான்க்ஸ் தவிர டொயோட்டா டெய்சர் ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, மற்றும் வரவிருக்கும் மஹிந்திரா XUV300 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: ஃபிரான்க்ஸ் AMT