2015 டிசம்பர் மாத விற்பனையில் முதல் 10 இடத்தைப் பிடித்த கார்களின் பட்டியல்: ரினால்ட் கிவிட் பட்டியலில் நுழைந்தது
published on ஜனவரி 11, 2016 04:49 pm by saad for ரெனால்ட் க்விட் 2015-2019
- 11 Views
- 4 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, 2015 -ஆம் ஆண்டின் டிசம்பர் மாத விற்பனையில் முதல் 10 இடத்தைப் பிடித்த கார்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக, ஒரு சில சிறிய மாற்றங்களை நாம் இந்த பட்டியலில் காணலாம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, SUV போன்ற தோற்றத்தில் வரும் சிறிய ஹாட்ச்பேக் காரான ரினால்ட் கிவிட், முதல் முறையாக அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, இந்த டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகமானதில் இருந்து, போட்டியாளர்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த ரினால்ட் கிவிட், தற்போது ஹுண்டாய் ஈயான் காரைப் பின்புறம் தள்ளி, இந்த பட்டியலில் இணைந்துவிட்டது. டாப் 10 பட்டியலில் கிவிட் ஒரு இடத்தைப் பிடித்து, வழக்கமான நிலைகளை சற்றே மாற்றி இருந்தாலும், எப்போதும் போலவே வெற்றிச் சிகரத்தின் முதல் இடத்தில் மலை போல வீற்றிருக்கும் ஆல்டோ ஹாட்ச்பேக் காரின் நிலையை அசைக்க முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
வழக்கம் போலவே, டிசம்பர் மாத பட்டியலிலும் மாருதியின் ஆதிக்கம் சற்றும் குறையவில்லை என்பதை நிரூபிக்க, மாருதியின் ஆல்டோ மாடல் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆல்டோ காரை ஹாட்ச்பேக் கார்களின் தலைவர் எனக் கொண்டால், டிசையர் காரை காம்பாக்ட் சேடான் பிரிவின் முதல்வர் என்று சொல்லும் அளவிற்கு, இவை இரண்டும் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றுள்ளன. டிசம்பர் மாதத்தில் மட்டும், மொத்தம் 22,589 ஆல்டோ கார்களை விற்பனை செய்து, இந்நிறுவனம் 2015 –ஆம் ஆண்டை இனிதே நிறைவு செய்தது. பலீனோவின் அறிமுகம் டிசயர் காரின் விற்பனையை சற்றே பாதித்திருந்தாலும், தனது செயல்திறன், வசதிகள், எரிபொருள் சிக்கனம் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் என பல வகைகளில் அசத்தி, மக்களின் மனதை விட்டு நீங்காமல், 16,790 கார்கள் விற்பனையாகி, டிசயர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளத்து. டிசயருக்கு அடுத்ததாக, உயரமான தோற்றத்தில் உள்ள டால்பாய் வேகன் R மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. புதிய வரவுகள் பல இருந்தாலும், இடவசதி, எரிபொருள் சிக்கனம் மற்றும் AMT கியர்பாக்ஸ் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ள வேகன் R, 2015 –ஆம் வருடத்தின் டிசம்பர் மாதம் மட்டும் 14,645 கார்கள் விற்பனையாகி உள்ளது.
மாருதி பலீனோவின் வரவால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்விஃப்ட் ஹாட்ச்பேக், இந்த முறை சற்றே முன்னேறியுள்ளது. கடந்த 2015 நவம்பர் மாதத்தில் 11,859 கார்கள் மட்டுமே விற்பனையான ஸ்விஃப்ட், 2015 டிசம்பர் மாதத்தில் சற்றே அதிகமாகி, 14,548 கார்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக ஸ்விஃப்ட் காரின் கடுமையான போட்டியாளராகத் திகழும் கொரிய வாகன தயாரிப்பாளரான ஹுண்டாய் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையான கிராண்ட் i10, 12,749 கார்கள் விற்பனையாகி ஐந்தாவது இடத்தில் உள்ளது. மாருதியின் விற்பனை பட்டியலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் பலீனோ என்று தைரியமாகக் கூறலாம், ஏனெனில், போட்டியில் எலைட் i20 காரைப் பின்புறம் தள்ளி, இது ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பலீனோவின் விற்பனையில் முன்னேற்றம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கடந்த 2015 வருடத்தின் நவம்பர் மாத விற்பனையை முறியடித்து, 2015 டிசம்பர் மாதத்தில் 10,572 கார்கள் விற்பனையாகி உள்ளது.
ஆஜானுபாகமான தோற்றம் கொண்ட SUV பிரிவில் அறிமுகமாகி பதினைந்து வருடங்கள் கடந்த போதும் மஹிந்த்ராவின் கம்பீரமான பொலேரோ, குன்றின் மேல் இட்ட விளக்கு போல, தனது புகழ் குன்றாமல் ஒளிர்கிறது. இந்த பட்டியலில் பொலேரோவை ஒன்பதாவது இடத்தில் நிறுத்த, மஹிந்த்ரா நிறுவனம் 7,133 பொலேரோ கார்களை விற்றுள்ளது.
2015 வருடத்தில், வாகன சந்தையை அதிரடியாக கலக்கிய ராக் ஸ்டார் ஹாட்ச்பேக் கார் ரினால்ட் கிவிட் ஆகும். உற்பத்தித் திறன் மட்டும் அதிகமாக இருந்திருந்தால், இந்த பட்டியலில் நிச்சயமாக ஒரு உயர்ந்த இடத்தை ரினால்ட் கிவிட் பிடித்திருக்கும். எனினும், 2015 ஆம் வருடத்தின் இறுதி மாதத்தில் இந்த ஃபிரெஞ்சு வாகன தயாரிப்பாளர், டாப் 10 பட்டியலில் நுழைந்து விட்டார். இது கடந்த வருடத்தின் முடிவல்ல, இந்த வருடத்தின் ஆரம்பம். எனவே, அடுத்து வரும் மாதங்களில் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கார்களின் விற்பனை எண்ணிக்கை எப்படி மாறப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விற்பனையான முதல் 10 கார்களின் பட்டியல்:
ரேங்க் வரிசை |
மாடல் |
விற்பனை எண்ணிக்கை |
|
1 |
|
22,589 |
|
2 | மாருதி ஸ்விஃப்ட் டிசயர் |
16,790 |
|
3 |
|
14,645 |
|
4 |
|
14,548 |
|
5 | ஹுண்டாய் கிராண்ட் i10 |
12,749 |
|
6 |
|
10,572 |
|
7 |
|
10,379 |
|
8 |
|
8,019 |
|
9 |
|
7,133 |
|
10 |
|
6,888 |
மேலும் வாசிக்க :
0 out of 0 found this helpful