சிறிய அழகு! ரெனால்ட் க்விட் புகைப்பட தொகுப்பு உங்கள் பார்வைக்கு
manish ஆல் செப் 14, 2015 09:47 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 4 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: இந்த புதிய ரெனால்ட் க்விட் காரை நாம் கோவாவில் ஓட்டி பார்த்தோம். தன்னுடைய தொழில்நுட்ப அம்சங்களில் எங்களை எவ்வளவு தூரம் ஈர்த்ததோ அதே அளவுக்கு தன்னுடைய நேர்த்தியான வடிவமைப்பின் மூலமும் இந்த புதிய சிறிய க்விட் எங்களை பெரிதளவு ஈர்க்கத் தவறவில்லை. நாங்கள் ஓட்டிய கார் நிலவொளி வெள்ளி நிற வண்ணக் கலவை பூசப்பட்டு, வாகனத்தின் உடல் பகுதியில் உள்ள நேர்த்தியான வளைவுகளையும், வாகனத்தின் உறுதியை பறைசாற்றும் விதமாக கொடுக்கப்பட்டிருந்த கோடுகளையும் இன்னும் எடுப்பாக காட்டியது. போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்புறத்தில் ஓட்டுவதற்கும், நெடுந்தூர பயணத்திற்கும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 54bhp சக்தியை வெளியிடக்கூடிய 799cc என்ஜின் தேவைக்கு அதிகமானதாகவே தோன்றுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேல் சாலைகளில் பயணிக்கும் போது நிச்சயம் இந்த வாகனம் தனித்து தெரிவதுடன் எளிதில் அனைவர் கவனத்தையும் கவரும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.