• English
    • Login / Register

    தயாரிப்புக்கு தயாராக உள்ள Tata Sierra ICE -வின் படம் வெளியானது

    டாடா சீர்ரா க்காக மார்ச் 10, 2025 03:05 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 22 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    காப்புரிமை பெற்ற மாடல் புதிய பம்பர் மற்றும் அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் மிகவும் பாடி கிளாடிங் ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. ஆனால் ரூஃப் ரெயில்கள் எதுவும் இல்லை.

    Tata Sierra design patent filed

    • முன்பக்கத்தில் செவ்வக வடிவிலான ஹெட்லைட்கள், ஃபாக் லைட்ஸ் மற்றும் கிரில்லுக்கு மேலே ஒரு பிளாஸ்டிக் பேனல் ஆகியவை உள்ளன.

    • பம்பரில் உள்ள அதன் ஏர் டேமில் இப்போது வெர்டிகல் ஸ்லேட்டுகள் உள்ளன.

    • அலாய் வீல் பெட்டல்-வடிவ வடிவமைப்பைப் கொண்டுள்ளது. இப்போது சி-பில்லர் மற்றும் பாடி கிளாடிங் ஆகியவை இப்போது ஹைலைட் செய்து காட்டப்பட்டுள்ளன.

    • ORVM களில் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை ஆட்டோ எக்ஸ்போ 2025 -வில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் போலவே உள்ளன.

    • உட்புற வடிவமைப்பு 3 ஸ்கிரீன் செட்டப் மற்றும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    • பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், TPMS மற்றும் முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்படலாம்.

    • இது ஒரு புதிய 170 PS 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 118 PS 1.5-லிட்டர் டீசல் யூனிட்டை பெறலாம்.

    • விலை ரூ.10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    டாடா சியரா பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அதன் தயாரிப்புக்கு ஸ்பெக் அவதாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இப்போது டாடா நிறுவனம் சியரா ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) -ன் உற்பத்திக்கு தயாராக உள்ள மாடலின் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. அதை பார்க்கும் போது காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலில் இருந்து சில வடிவமைப்பு மாற்றங்களைப் இருப்பது தெரிகிறது. காப்புரிமை படத்தைப் பற்றி விரிவான விவரங்கள் இங்கே:

    புதியது என்ன இருக்கிறது ?

    Tata Sierra design patent filed

    பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலுடன் ஒப்பிடுகையில் காப்புரிமை படத்தில் உள்ள டாடா சியராவில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. பானட்டின் கீழே ஒரு சியரா எழுத்து மற்றும் அதன் கீழ் ஒரு பிளாஸ்டிக் பேனல் ஆகியவை உள்ளன. இது முன்பக்க நீளம் முழுமைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பேனலின் கீழ் உள்ள ஏர் இன்டேக் சேனல், செவ்வக வடிவ ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் ஹவுஸிங் ஆகியவையும் ஒரே மாதிரியாக உள்ளன.

    உற்பத்திக்கு தயாராக உள்ள சியராவின் காப்புரிமை பெற்ற வடிவமைப்பை பார்க்கும் போது பம்பரில் உள்ள பெரிய ஏர் டேமில் கிடைமட்ட ஸ்லேட்டுகளும் உள்ளன. ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் சில குரோம் கார்னிஷ் மற்றும் ரிப்பட் டிசைனுடன் கூடிய சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவை இடம் பெற்றிருந்தன. 

    மேலும் இதழ் போன்ற எலமென்ட்களை கொண்ட புதிய அலாய் வீல் வடிவமைப்பை பார்க்க முடிகிறது. பாடி கிளாடிங் மற்றும் சி-பில்லர் ஆகியவை தயாரிப்புக்கு தயாராக உள்ள மாடலில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன.

    வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMs) 360 டிகிரி கேமரா செட்டப் உள்ளன. சியரா ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களுடன் வரும். 

    Tata Sierra ICE at auto expo 2025

    உட்புறத்தின் வடிவமைப்பு வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும் கூட காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் 3-ஸ்கிரீன் செட்டப் மற்றும் டாடா சஃபாரி மற்றும் ஹாரியர் போன்ற இல்லுமினேட்டட் லோகோவுடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங் இருந்தது. உற்பத்திக்கு தயாரான மாடலின் உட்புறம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்டப்பட்ட மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    Tata Sierra ICE at auto expo 2025

    3-ஸ்கிரீன் செட்டப்பை தவிர பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், டூயல்-ஜோன் ஆட்டோ ஏசி, ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றையும் இது கொண்டிருக்கும்.

    பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் லெவல்-2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஆகியவற்றைப் பெறலாம்.

    மேலும் படிக்க: டாடா டியாகோ இவி -யை விட சிஎன்ஜி-யில் இயங்கும் டாடா டியாகோ -வின் இயக்கச் செலவு குறைவானதா ?

    எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    டாடா சியரா -வில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் இருக்கலாம். இந்த இன்ஜின்  டாடா கர்வ் -ல் இருந்து பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் இங்கே:

    இன்ஜின்

    1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

    பவர்

    170 PS

    118 PS

    டார்க்

    280 Nm

    260 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT *

    6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT

    *DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    Tata Sierra ICE at auto expo 2025

    டாடா சியரா -வின் விலை ரூ.10.50 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும்

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Tata சீர்ரா

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience