அறிமுகத்திற்கு முன்னரே, டீலர்ஷிப்புகளை வந்தடைந்த புதுப்பிக்கப்பட்ட டொயோட்டா கிரிஸ்டா.
published on மார்ச் 13, 2023 08:58 pm by ansh for டொயோட்டா இனோவா கிரிஸ்டா
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
MPV மறுவடிவமைக்கப்பட்ட முன்புற புரொஃபைல் மற்றும் டீசல்-மேனுவல் பவர்டிரெயினுடன் மட்டும் வருகிறது.
-
இந்த மாதத்திற்குள் டோயோட்டா, இன்னோவா கிரிஸ்டாவை அறிமுகப்படுத்தக்கூடும்.
-
இது 2.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மட்டும் வருகிறது மேலும் ஐந்து வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
மறுவடிவமைக்கப்பட்ட முன்புற புரோஃபைலைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை.
-
ஏழு ஏர்பேகுகள் மற்றும் லெதர் இருக்கைகளுடன் நான்கு டிரிம்களில் கிடைக்கிறது.
-
விலை ரூ. 20 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோயோட்டா இன்னோவா கிரிஸ்டா , MPV பிரிவில் முக்கிய காராக மீண்டும் விரைவில் வெளிவர உள்ளது, அதன் புக்கிங்குகளை தொடங்கிய பிறகு கார் உற்பத்தியாளர் அதனை அறிமுகப்படுத்த உள்ளார். ஆனால் அதற்கு முன்னரே, MPV யின் அலகுகள் சில டீலர்ஷிப்புகளை வந்தடையத் துவங்கிவிட்டன. மேலும் டெஸ்ட் டிரைவ்களுக்கும் அவை கிடைக்கின்றன.
கிரஸ்டா புதிதாக எதை வழங்குகிறது
MPV-இன் இந்த பதிப்பு நான்கு கார்வகைகளை வழங்குகிறது G, GX, VX மற்றும் ZX. படங்களில் உள்ள இந்த கார், MPV-யின் ‘GX’ காரின் இரண்டாவது வகையாகத் தெரிகிறது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 16-அங்குல அலாய் வீல்கள், மேனுவல் ஏசி, ஸ்டியரிங்-மௌன்டட் கன்ட்ரோல்கள், மூன்று ஏர்பேகுகள், EBD உடன் ABS வாகன ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC மற்றும் அனைத்து பயணியர்களுக்கும் த்ரீ-பாயின்ட் சீட் பெல்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.
கூடுதலான அம்சங்கள்
LED புரொஜெக்டர் ஹெட்லேம்புகள், எட்டு விதங்களில் சரிசெய்யக்கூடிய டிரைவர் சீட், ஆறு-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், USB ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் போன்றவற்றை இன்னோவா கிரிஸ்டாவின் உயர் வகைக் கார்கள் பெறுகின்றன. பயணிகள் பாதுகாப்பைப் பொருத்தவரை , டோயோட்டா ஏழு ஏர்பேகுகள், பின்புற டீஃபாகர், பின்புற கேமரா மற்றும் ISOFIX ஆங்கர்கள் உடன் வருகிறது.
தொடர்புடையவை: 2023 டோயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்களின் விவரங்கள்
பவர்டிரெயின்
இன்னோவா கிரிஸ்டா இப்போது டீசல்-வகையை மட்டுமே வழங்குகிறது, அது 150PS மற்றும் 343Nm வேகத்தில் இயங்கும் 2.4 லிட்டர் டீசல் என்ஜினைப் பெற்றுள்ளது. மேலும் ஐந்து-வேக ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது. அறிமுக நேரத்தில் MPV ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனைப் பெற்றிருக்காது.
விலைகள் மற்றும் போட்டி கார்கள்
ஆரம்ப விலையாக ரூ.20 இலட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இந்த மாதத்தில் இன்னோவா கிரிஸ்டா-வை டோயோட்டா அறிமுகப்படுத்தக்கூடும். MPV கார் நியூ ஜெனரேஷன்இன்னோவா ஹைகிராஸ் க்கு மலிவான மாற்றாக உள்ளது, அதேநேரத்தில் மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் கியா கேரன்ஸ் ன் விருப்பங்களின் மேல்மட்டத்தில் உள்ளது.
மேலும் படிக்க: 2023 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்10 கார் பிராண்டுகள் இவையே
0 out of 0 found this helpful