Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Mahindra XUV400 EV லாங் ரேஞ்ச்: உண்மையில் எந்த எலக்ட்ரிக் எஸ்யூவி அதிக ரேஞ்சை கொடுக்கிறது?
பேப்பரில் டாடா நெக்ஸான் EV லாங் ரேஞ்ச் (LR) ஆனது மஹிந்திரா XUV400 EV LR காரை விட அதிக கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. ஆனால் நிஜ உலக நிலைமைகளில் எது அதிக ரேஞ்சை வழங்குகிறது? நாம் இங்கே கண்டுபிடிக்கலாம்.
2023 -ஆம் ஆண்டில் டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்டட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட கிளைம்டு ரேஞ்சையும் இரண்டு புதிய வேரியன்ட்களையும் பெற்றுள்ளது: MR (மீடியம் ரேஞ்ச்) மற்றும் LR ( லாங் ரேஞ்ச்). டாடாவின் ஆல்-எலக்ட்ரிக் சப்காம்பாக்ட் எஸ்யூவி -க்கு நேரடி போட்டியாளராக மஹிந்திரா XUV400 EV உள்ளது. இதுவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு EV -களின் லாங் தூர வேரியன்ட்களின் ரியர்-வேர்ல்டு ரேஞ்சை நாங்கள் சோதித்துள்ளோம். அதன் முடிவுகள் இங்கே:
விவரங்கள் |
டாடா நெக்ஸான் EV LR |
மஹிந்திரா XUV400 EV LR |
பேட்டரி பேக் |
40.5 kWh |
39.4 kWh |
பவர் |
144 PS |
150 PS |
டார்க் |
215 Nm |
310 Nm |
கிளைம் செய்யப்பட்டுள்ள ரேஞ்ச் |
465 கி.மீ |
456 கி.மீ |
சோதிக்கப்பட்ட ரேஞ்ச் |
284.2 கி.மீ |
289.5 கி.மீ |
இரண்டு EV -களின் கிளைம்டு ரேஞ்சைக் கருத்தில் வைத்து பார்க்கும் போது நெக்ஸான் EV முதலிடத்தில் இருந்தாலும், ரியர்-வேர்ல்டு நிலைமைகளில் ரேஞ்சை பொறுத்தவரையில் உண்மையில் சற்று முன்னிலையில் இருப்பது மஹிந்திரா XUV400 தான். மேலும் பேப்பரில் நெக்ஸான் EV உடன் ஒப்பிடும்போது XUV400 EV அதிக பவர் மற்றும் டார்க் அவுட்புட்டை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: ஹூண்டாய் சிஎன்ஜி கார்கள் இந்தியாவில் Hy-CNG டியோ பிராண்டிங்கை பெறுகின்றன
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
டாடாவின் ஆல்-எலக்ட்ரிக் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஏசி, சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. இது V2L (வெஹிகிள் டூ வெஹிகிள்) மற்றும் V2V (வெஹிகிள் டூ வெஹிகிள்) ஃபங்ஷனையும் பெறுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.
XUV400 EV ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-சோன் ஏசி மற்றும் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது. பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.
விலை
டாடா நெக்ஸான் EV லாங் ரேஞ்ச் |
மஹிந்திரா XUV400 EV EL புரோ லாங் ரேஞ்ச் |
ரூ.16.99 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் |
ரூ.17.49 லட்சம் முதல் ரூ.19.39 லட்சம் |
விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம்க்கானவை
இந்த இரண்டு EV -களும் MG ZS EV காருக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.
இது போன்ற கூடுதல் ஒப்பீடுகளை படிக்க கார்தேக்கோ-வின் வாட்ஸ்அப் சேனலைப் பின்தொடரவும்
மேலும் படிக்க: நெக்ஸான் EV ஆட்டோமெட்டிக்