நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸின் விற்பனையில் 13% சரிவு
ஜெய்ப்பூர்:
கடந்த நவம்பர் மாதம், பல்வேறு கார் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சியை எட்டிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 13 சதவீத சரிவை சந்தித்துள்ளது. கடந்தாண்டு இதே மாத விற்பனையுடன், கடந்த மாத விற்பனை ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கார் தயாரிப்பாளரான இந்நிறுவனம் கடந்தாண்டு நவம்பரில் 12,021 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், கடந்த மாதம் 10,517 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. SUV பிரிவைச் சேர்ந்த சஃபாரி, சஃபாரி ஸ்டார்ம், அரியா, சுமோ மற்றும் மூவஸ் உள்ளிட்ட கார்களின் மோசமான விற்பனையின் எதிரொலியே, இந்த 13% சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலே குறிப்பிட்ட கார்களின் ஒருங்கிணைந்த விற்பனை 1,345 யூனிட்கள் மட்டுமே நடைபெற்று, 22% சரிவை ஈட்டியது. இந்நிறுவனத்தின் சேடன்களின் விற்பனை நிலவரம் இன்னும் மோசமானது என்று கூறும் வகையில், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 5,920 யூனிட்களை இந்நிறுவனம் விற்பனை செய்த நிலையில், இந்தாண்டு 3,351 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடிந்ததால், ஒப்பீட்டில் 43% விற்பனை சரிவை காண முடிகிறது.
இந்நிறுவனத்திற்கு ஹாட்ச்பேக் பிரிவு மட்டுமே நல்ல செய்தியை அளித்துள்ளது என்பதாக, அந்த பிரிவின் விற்பனையில் 33% வளர்ச்சியை காண முடிகிறது. கடந்த 2014 நவம்பரில் இப்பிரிவில் 4,376 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நவம்பரில் டாடா நிறுவனம் மூலம் 5,821 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. வருடாந்திர விற்பனையின் அடிப்படையில் கணக்கிட்டால், இந்தாண்டு நவம்பர் மாதம் வரை இந்நிறுவனத்தின் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இன்னும் ஸீகா அறிமுகம் செய்யப்பட வேண்டிய நிலையில், இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம். அதேபோல சமீபகால அறிமுகமான ‘அதிக சக்திவாய்ந்த' சஃபாரியின் மூலம் இந்நிறுவனத்திற்கு இந்த இலக்கை அடைய ஆதரவு கிடைக்கலாம் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்க