• English
  • Login / Register

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மான்ஸா மற்றும் விஸ்டா கார்களின் தயாரிப்புகளை நிறுத்தி ஸிகா மீது கவனம் செலுத்துகிறது

published on டிசம்பர் 09, 2015 07:29 pm by sumit

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்

Tata Vista

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக தன்னுடைய மான்ஸா செடான் மற்றும் விஸ்டா ஹேட்ச்பேக் கார்களின் விற்பனையை நிறுத்திக் கொண்டுள்ளது. மேலும் தங்களது வலைத்தளத்தில் இந்த இரு  கார்களைப்  பற்றிய தகவல்களை நீக்கியுள்ளது . இந்த இந்திய கார் தயாரிப்பாளர்கள் சில நாட்களாகவே தங்களது நெடு நாளாக இருந்து வரும் கார்களை கைவிடுவது பற்றி  ஆலோசித்து வந்தனர். முன்னதாக பழைய டாடா நேனோ கார்களின் தயாரிப்பை நிறுத்திய டாடா நிறுவனம் அதன் தொடர்ச்சியாக மான்ஸா , விஸ்டா மற்றும் சூமோ க்ரேண்ட் வாகனங்களை  கைவிட்டுள்ளது. 

Tata Zica

மான்ஸா மற்றும் விஸ்டா கார்கள் முறையே டாடா இண்டிகா மற்றும் இண்டிகோ கார்களின் சற்று மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் ஆகும். இன்னும் சொல்ல போனால் இந்த இரு கார்களும் துவக்கத்தில் இண்டிகோ மான்ஸா மற்றும் இண்டிகா விஸ்டா என்றே பெயரிடப்பட்டே வெளியானது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.  ஆனால் இதுவே டாடா நிறுவனத்திற்கு ஒரு பெரிய தலைவலியானது. ஏனெனில் இண்டிகா மற்றும் இண்டிகோ  கார்கள் இரண்டுமே மக்கள் மனதில் ஒரு டேக்ஸியாக  ( வாடகை வாகனம் )  தான் நன்கு பதிந்திருக்கிறதே  தவிர தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் சொந்தமாக்கி கொள்ள விரும்பாத நிலையிலேயே உள்ளதால் டாடா நிறுவனதிற்கு இந்த வாகனங்கள் மீதான எதிர்பார்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.  இதை மாற்றும் விதத்தில் டாடா நிறுவனம் விஸ்டா  மற்றும் மான்ஸா  கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களை வெளியிட்டது மட்டுமின்றி இந்த கார்களின் பெயரில் உள்ள இண்டிகோ மற்றும் இண்டிகா என்ற பெயரையும் நீக்கியது. இந்த முயற்சிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இரு வாகனங்கள் மீதான பார்வையை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வருட ஜூலை மாதமே இந்த இரு கார்களின் தயாரிப்பையும் டாடா நிறுவனம் நிறுத்திவிட்டதாக SIAM அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்  சொல்லப்பட்டுள்ளது . இப்போது டாடா நிறுவனம் இண்டிகா மற்றும் இண்டிகோ  கார்களை  முறையே A - பிரிவு ஹேட்ச்பேக் மற்றும் கச்சிதமான செடான் கார்களாக விற்பனை செய்ய உள்ளது. இந்த இரு கார்களும் வர்த்தக/ டேக்ஸி  ( வாடகை கார்)   கார்களாக  மட்டும் பயன்படுத்துவதற்காக விற்பனை செய்யப்படுகிறது. தன்னுடைய கவர்ச்சிகரமான தோற்றம்,  சக்தி வாய்ந்த என்ஜின் மற்றும் பல சிறப்பம்சங்கள்  மூலம் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஸிகா  கார்கள் மீது டாடா நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த  தொடங்கி உள்ளது.   

இதையும் படியுங்கள் 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience