ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் தயாரிப்புக்கு தயாராகவுள்ள Tata Harrier EV காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
published on ஜனவரி 17, 2025 02:57 pm by shreyash for டாடா ஹெரியர் ev
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட எலக்ட்ரிக் ஹாரியர் EV என்பதை காட்டும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
ஹாரியர் EV ஆனது Acti.ev கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. டாடா பன்ச் EV மற்றும் டாடா கர்வ் EV ஆகியவற்றிலும் இந்த கட்டமைப்பு தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
தோற்றம் ICE வெர்ஷன் போலவே இருக்கிறது. குளோஸ்டு கிரில், ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் EV பேட்ஜ்கள் என EV என்பதை காட்டும் எலமென்ட்கள் உள்ளன.
-
உட்புறமும் வழக்கமான ஹாரியரை போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் வெவ்வேறு வண்ண அப்ஹோல்ஸ்டரி இருக்கிறது.
-
விலை ரூ.30 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா ஹாரியர் EV ஒரு கான்செப்ட் ஆக அறிமுகமானது. பின்னர் 2024 இல் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் முதல் பதிப்பு காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது இந்த வருட ஆட்டோ எக்ஸ்போவில் தயாரிப்புக்கு தயாராக உள்ள வடிவத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்டீல்த்தி மேட் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஹாரியர் EV ஆனது அதன் ICE ( இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வடிவமைப்பைப் போலவே ஒட்டுமொத்த வடிவமைப்பையும் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் EV என்பதை குறிப்பிட்டு காட்டுவதற்கு சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹாரியர் EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
வடிவமைப்பு: மிரட்டலான தோற்றம் கொண்ட எலக்ட்ரிக் கார்
டாடா இதில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பதால் இது அதன் ICE பதிப்பைப் போலவே உள்ளது. இருப்பினும் டாடா நெக்ஸான் EV மற்றும் டாடா கர்வ் EV ஆகிய கார்களில் காணப்படுவது போல், முன்பக்கம் குளோஸ்டு கிரில், வெர்டிகல் ஸ்லேட்ஸ் போன்று முன்பக்க பம்பர் மற்றும் ஏரோடைனமிக்ஸ் பாணியிலான அலாய் வீல்கள் போன்ற விஷயங்கள் உள்ளன.
பின்பக்கம் வழக்கமான ஹாரியரில் காணப்படுவதை போன்ற கனெக்டட் LED டெயில் லைட்கள் உள்ளன. ஹாரியர் EV -ல் LED DRLகள் மற்றும் டெயில் விளக்குகள் இதன் எஸ்யூவி பதிப்பில் காணப்படுவது போல் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன் -களையும் கொண்டுள்ளது.
கேபின்: வித்தியாசமான அப்ஹோல்ஸ்டரியுடன் அதே லேஅவுட்
வெளிப்புறத்தை போலவே கேபின் லே அவுட் -ம் அதன் வழக்கமான பதிப்பைப் போலவே உள்ளது. இருப்பினும் இது வித்தியாசமான நிறங்கள் உடன் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டேஷ்போர்டு தீம் கொடுக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டு மற்றும் டோர் பேட்கள் சில மென்மையான டச் இன்செர்ட்கள் உள்ளன. இது காருக்கு கூடுதலான பிரீமியம் தோற்றத்தை கொடுக்கிறது.
இது டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒவ்வொன்றும் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்) மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் வருகிறது. ஹாரியர் EV ஆனது 6-வே பவர்டு டிரைவர் இருக்கை மற்றும் 4-வே பவர்டு கோ-டிரைவர் சீட், டூயல் ஜோன் ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் நிலை 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா ஹாரியர் EV -யின் விலை ரூ. 30 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மஹிந்திரா XEV 9e மற்றும் XEV 7e ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.