Tata Curvv EV கார் 5 விதமான கலர்களில் கிடைக்கும்
இந்த 5 வண்ணங்களில், 3 ஆப்ஷன்கள் ஏற்கனவே நெக்ஸான் EV -யில் கிடைக்கின்றன
-
டாடா கர்வ்வ் EV -யை 5 நிறங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. டூயல்-டோன் ஆப்ஷன் இந்த காரில் இல்லை.
-
கர்வ்வ் EV ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், முன் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும்.
-
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது.
-
இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறலாம். 500 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
-
டாடா கர்வ்வ் EV -யின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்திய மார்க்கெட்டின் EV கார்களின் பட்டியலில் கர்வ்வ் EV புதிதாக சேர்ந்துள்ளது. மேலும் எஸ்யூவி-கூபே -வின் எலக்ட்ரிக் பதிப்பிற்கான கலர் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்களை நாங்கள் பெற்றுள்ளோம். டாடா நிறுவனம் கர்வ்வ் இவி காரில் கொடுக்கக்கூடிய 5 கலர் ஆப்ஷன்களையும் இங்கே பார்க்கலாம்.
கலர் ஆப்ஷன்கள்
கர்வ்வ் EV மொத்தம் 5 மோனோடோன் ஷேடுகளில் கிடைக்கும்: பிரிஸ்டின் ஒயிட், ஃபிளேம் ரெட், எம்பவர்டு ஆக்சைடு, ப்யூர் கிரே மற்றும் விர்ச்சுவல் சன்ரைஸ். நீங்கள் தங்கள் கார்களில் டூயல்-டோன் ஃபினிஷிங்கை விரும்புபவராக இருந்தால் துரதிர்ஷ்டவசமாக டாடா அந்தத் ஆப்ஷனை கர்வ்வ் EV உடன் வழங்காது.
நெக்ஸான் EV போலவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட்டை (டாடா குறிப்பிடும் வேரியன்ட்கள்) அடிப்படையில் கலர் ஆப்ஷன்கள் இருக்கும். இது அதன் மூன்று நபர்களுக்கு வெவ்வேறு வண்ண ஆப்ஷன்களை வழங்குகிறது: எம்பவர்டு, ஃபியர்லெஸ் மற்றும் கிரியேட்டிவ். குறிப்பிடத்தக்க வகையில், கர்வ்வ் EV -யின் மூன்று ஷேடுகள் -- ஃபிளேம் ரெட், எம்பவர்டு ஆக்சைடு மற்றும் ப்ரிஸ்டைன் ஒயிட் - ஆகியவை நெக்சன் இவி -யிலிருந்து கடன் வாங்கப்பட்டவை.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
கர்வ்வ் EV ஆனது பனோரமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் முன் வென்டிலேட்டட் சீட்களை கொண்டிருக்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் ஆகிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
மேலும் பார்க்க: ஆகஸ்ட் 7 அன்று அறிமுகத்திற்காக காத்திருக்கும் Tata Curvv EV -ன் இன்டீரியர் விவரங்களுடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள் டாடாவால் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும் டாடா கர்வ்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 500 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டிருக்கலாம். இது டாடாவின் சமீபத்திய Acti.ev கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் V2L (வெஹிகிள் டூ லோடு) மற்றும் V2V (வெஹிகிள் டூ வெஹிகிள்) வசதிகளைக் கொண்டிருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் EV ஆனது 20 லட்சம் ரூபாய்க்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.