மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Tata Curvv EV கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, காரின் விலை ரூ.17.49 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
published on ஆகஸ்ட் 07, 2024 02:29 pm by ansh for டாடா கர்வ் இவி
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது 45 kWh மற்றும் 55 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது: இந்த கார் 585 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.
-
மீடியம் மற்றும் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களில் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டார் கிடைக்கிறது.
-
லாங் ரேஞ்ச் வேரியன்ட்கள் 167 PS பவரை கொடுக்கும் சக்திவாய்ந்த மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
மீடியம் மற்றும் லாங் ரேஞ்ச் வேரியன்ட்கள் 502 கி.மீ மற்றும் 585 கி.மீ என்ற கிளைம்டு ரேஞ்ச்சை கொண்டுள்ளன.
-
12.3-இன்ச் டச் ஸ்கிரீன், ஒரு பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகிய வசதிகளுடன் இந்த கார் வருகிறது.
-
விலை ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) உள்ளது.
டாடா கர்வ்வ் EV காரானது ரூ.17.49 லட்சத்தில் ( எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா, அறிமுகம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்றாக கர்வ்வ் இருந்தது. மேலும் இதன் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) பதிப்பு பின்னர் சந்தைக்கு வரும். டாடாவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி-கூபே இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. ARAI-மதிப்பிடப்பட்ட 585 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. மேலும் இது ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற டாடாவின் முதன்மைத் தயாரிப்புகளிலிருந்து பல விஷயங்களையும் பெறுகிறது. கர்வ்வ் EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.
விலை
எக்ஸ்-ஷோரூம் விலை (அறிமுகம்) |
||
வேரியன்ட் |
மீடியம் ரேஞ்ச் |
லாங் ரேஞ்ச் |
கிரியேட்டிவ் |
ரூ 17.49 லட்சம் |
- |
அக்கம்பிளிஸ்டு |
ரூ 18.49 லட்சம் |
ரூ 19.25 லட்சம் |
அக்கம்பிளிஸ்டு+ S |
ரூ 19.29 லட்சம் |
ரூ 19.99 லட்சம் |
எம்பவர்டு + |
- |
ரூ 21.25 லட்சம் |
எம்பவர்டு + A |
- |
ரூ 21.99 லட்சம் |
வடிவமைப்பு
முன்பக்கம் கர்வ்வ் நவீன டாடா கார்களின் வடிவமைப்பை அப்படியே பின்பற்றுகிறது. இது நெக்ஸான் போன்ற கனெக்டட் LED டிஆர்எல் ஸ்ட்ரிப் மற்றும் செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள LED ஹெட்லைட்கள் ஆகியவை ஹாரியர் காரில் உள்ளதை போலவே இருக்கின்றன.
பக்கவாட்டில் பார்க்கும் போது இதன் எஸ்யூவி-கூபே ஸ்டைலிங்கை காட்டுகிறது. சாய்வான ரூஃப் பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது தெரிகிறது . இது ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், தடிமனான பாடி கிளாடிங் மற்றும் 18-இன்ச் ஏரோடைனமிக் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவற்றை இந்த கார் கொண்டுள்ளது.
கர்வ்வ் EV -ன் பின்பக்கம் கனெக்டட் LED டெயில் லைட்ஸ், ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை கொண்ட பெரிய பிளாக் பம்பர் மற்றும் செங்குத்தாக உள்ள முக்கோண ரிஃப்ளெக்டர்கள் மற்றும் இன்வெர்ட்டட் லைட்ஸ் ஆகியவை உள்ளன.
கூடுதலாக கர்வ்வ் EV 190 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 450 மி.மீ வாட்டர் வேடிங் திறன் கொண்டது. EV ஆனது 500 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் பன்ச் EV போன்ற 11.6 லிட்டர் அளவுக்கான ஃப்ராங்க் (முன் பானட்டின் கீழ் பூட் ஸ்பேஸ்) பகுதி ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
பேட்டரி பேக் & ரேஞ்ச்
விவரங்கள் |
மீடியம் ரேஞ்ச் |
லாங் ரேஞ்ச் |
பேட்டரி பேக் |
45 kWh |
55 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
ARAI கிளைம்டு ரேஞ்ச் |
502 கி.மீ |
585 கி.மீ |
டாடா கர்வ்வ் EV ஆனது 0-100 கிமீ/மணி லிருந்து ஸ்பிரிண்ட் செய்து 8.6 வினாடிகளில் 160 கிமீ/மணி வேகத்தை எட்டும். டாடா கர்வ்வ் EV -யை இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது. 585 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்ச் EV பொன்றே இது டாடாவின் புதிய Acti.ev கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது 70 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இது 40 நிமிடங்களில் 10-80 சதவீத பேட்டரியை சார்ஜ் அப் செய்யும்.
கர்வ்வ் EV ஆனது 4-லெவல் பேட்டரி ரீஜெனரேஷன் செட்டப்பை கொண்டுள்ளது, பேடில் ஷிஃப்டர்களை பயன்படுத்தி இதை கட்டுப்படுத்த முடியும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஏர் ப்யூரிஃபையருடன் கூடிய ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் , பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல்-டியூனிங் சவுண்ட் சிஸ்டம் ( ஒரு 320W சப்வூஃபரும் அடங்கும்), 6-வே பவர்டு டிரைவர் சீட் இருக்கை மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் என இந்த காரில் கிடைக்கும் வசதிகளின் பட்டியல் மிகப் பெரியது. மேலும் இது டாடாவின் 'iRA' கனெக்டட் கார் தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொகுப்பையும் கொண்டுள்ளது.
இது Arcade.ev வசதியை கொண்டுள்ளது, இது கார் நகராமல் இருக்கும்போது அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. மேலும் இது டச் ஸ்கிரீனில் கேம்களை விளையாடவும் உதவுகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஒரு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா ஆகியவற்றுடன் வருகிறது. நேவிகேஷன் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் டிரைவரின் டிஸ்ப்ளேவிலேயே காட்டப்படும்.
டாடா கர்வ்வ் EV யில் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்டுள்ளது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் கர்வ்வ் EV -க்காக அக்வாஸ்டிக் ஒலி வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது காருக்கு வெளியே மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கேட்கக்கூடியதாக இருக்கும். இது நெரிசலான பகுதிகளில் போக்குவரத்தை எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.
போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் EV -க்கு சந்தையில் நேரடி போட்டியாளர்கள் இதுவரை இல்லை. ஆனால் இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகியவற்றுக்கு ஒரு மாற்றாக செயல்படுகிறது.
லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: கர்வ்வ் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful