நாளை அறிமுகமாகிறது டாடா -வின் புதிய கார் Curvv EV
published on ஆகஸ்ட் 06, 2024 12:20 pm by samarth for டாடா கர்வ் இவி
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
கர்வ்வ் EV -யானது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 500 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
-
டாடாவின் EV கார்கள் வரிசையில் நெக்ஸான் EV மற்றும் புதிய ஹாரியர் EV -க்கு இடையில் கர்வ்வ் EV விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
-
கூபே ரூஃப்லைன், கனெக்டட் LED DRLகள் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.
-
ஹாரியர்-சஃபாரி எஸ்யூவிகளில் இருப்பதை போன்றே கேபினில் டூயல்-டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் போன்றவை இருக்கும்.
-
கர்வ்வ் EV ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், முன்பக்கத்தில் வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இருக்கலாம்.
-
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவற்றைப் பெறலாம்.
-
டாடா கர்வ்வ் EV -யின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஸ்பை ஷாட்கள், டீசர்களுக்கு பிறகு டாடா கர்வ்வ் EV இறுதியாக நாளை அறிமுகமாக உள்ளது. கர்வ்வ் இவி ஆனது பட்ஜெட் சந்தையை இலக்காக கொண்ட டாடாவின் முதல் எஸ்யூவி-கூபே ஸ்டைல் கார் ஆகும். மேலும் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மற்றும் EV பதிப்புகள் இரண்டிலும் இது விற்பனைக்கு வரும். நீங்கள் ICE மாடலில் ஆர்வமாக இருந்தால் நீங்கள் இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். இது செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு, டாடாவின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி-கூபே பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
வெளிப்புற வடிவமைப்பு
டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே கர்வ்வ் EV -ன் வெளிப்புற வடிவமைப்பை வெளியிட்டு விட்டது. வடிவமைப்புக்காக இது நெக்ஸான் EV -யில் இருந்து பல விஷயங்களை பெற்றுள்ளது. கர்வ்வ் EV இன் முன்புறம் ஒரு குளோஸ்டு கிரில் மற்றும் கனெக்டட் LED DRL -கள் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களை கொண்டுள்ளன.
நெக்ஸான் EV -யில் குறிப்பிட்டுள்ளபடி முன் பம்பரில் வெர்டிகல் வடிவிலான ஸ்லேட்டுகள் உள்ளன. பக்கவாட்டில் பார்க்கும் போது கர்வ்வ் ஆனது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளன. இது டாடா கார்களில் முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏரோடைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் அதன் எஸ்யூவி-கூபே இயல்பைக் காட்டும் சாய்வான கூரை ஆகியவற்றை இந்த காரில் பார்க்க முடிகிறது.
பின்புறத்தில் காரில் கனெக்டட் டெயில் லைட் செட்டப்பை பார்கக்க முடிகிறது. இந்த லைட்களும் மேலும் வரவேற்பு மற்றும் குட்பை அனிமேஷன்களை கொண்டுள்ளன.
இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இன்ட்டீர்யரில் ஹாரியர்-சஃபாரி ஆகிய கார்களில் இருப்பதை போன்றே டாடா கர்வ்வ் EV -ன் உட்புறம் இருக்கும். சமீபத்தில் டாடா நிறுவனம் டூயல்-டோன் டேஷ்போர்டு, 4-ஸ்போக் ஸ்டீயரிங் போன்ற விவரங்களை வெளியிட்டது. மற்றும் டச்-பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல். இது ஒரு பனோரமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் ஃப்ரீ-ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் முன் வென்டிலேட்டட் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது நெக்ஸானில் உள்ள அதே டிரைவ் மோட் செலக்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்டரை பெறும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் ஆகிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களின் தொகுப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: டாடா கர்வ்வ் EV இன்டீரியர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்
எலெக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் டாடாவின் சமீபத்திய Acti.ev கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுமார் 500 கி.மீ வரம்பைக் கொண்ட இரண்டு பேட்டரி பேக்குகளின் தேர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ்வ் EV ஆனது V2L (வெஹிகிள் டூ லோடு) மற்றும் V2V (வெஹிகிள் டூ வெஹிகிள்) வசதிகளையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ்வ் EV ஆனது ரூ. 20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.
0 out of 0 found this helpful