Tata Curvv EV: டெலிவரி இன்று முதல் தொடக்கம்
published on ஆகஸ்ட் 23, 2024 03:52 pm by anonymous for டாடா கர்வ் இவி
- 78 Views
- ஒரு கருத்தை எழுதுக
எஸ்யூவி கூபே ஸ்டைல் ஆல்-எலக்ட்ரிக் காரான டாடா கர்வ், இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் 3 டிரிம்களில் கிடைக்கிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் டாடா கர்வ் EV விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் விலை ரூ.17.49 லட்சத்தில் தொடங்கி ரூ.21.99 லட்சம் வரை (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. டாடா நிறுவனம் ஆகஸ்ட் 12 முதல் கர்வ் காருக்கான ஆர்டர்களை பெறத் தொடங்கியது. இப்போது கர்வ் EV -ன் டெலிவரி இன்று முதல் துவங்கியுள்ளது.
காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
டாடா கர்வ் EV: வடிவமைப்பு
அதன் பிரிவில் தனித்தன்மையான வடிவமைப்பாக கர்வ் EV ஆனது எஸ்யூவி-கூபே ஸ்டைலை கொண்டுள்ளது. முன்புறம் காரின் முழு அகலத்துக்கும் LED DRL உடன் குளோஸ்டு கிரில்லை கொண்டுள்ளது. இது டாடாவின் லேட்டஸ்ட் வடிவமைப்பு விஷயங்களை கொண்டதாக உள்ளது. அதன் சாய்வான ரூஃப்லைன் மற்றும் ஏரோடைனமிக் 18-இன்ச் அலாய் வீல்கள், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள் கவனத்தை ஈர்க்கின்றன. அதேபோல பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் கூரையில் பொருத்தப்பட்ட டூயல் ஸ்பாய்லர் காருக்கு ஸ்போர்ட்டியான தன்மையை கொடுக்கிறது.
மேலும் பார்க்க: டாடா கர்வ் EV மற்றும் MG ZS EV: விவரங்கள் ஒப்பீடு
டாடா கர்வ் EV: உட்புறம்
உள்ளே கர்வ் EV -யானது நெக்ஸான் இவி போன்ற செட்டப்பையே கொண்டுள்ளது. மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட்டை பொறுத்து வெவ்வேறு கலர் ஸ்கீம்கள் கிடைக்கும். இது 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் கொண்டுள்ளது மற்றும் இல்லுமினேட்டட் டாடா லோகோவும் இந்த காரில் உள்ளது. ஹாரியர்-சஃபாரி கார்களில் உள்ளதை போலவே லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் கேபின் முழுவதும் மாறுபட்ட சில்வர் ஆக்ஸென்ட்கள் உள்ளன. டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவையும் இந்த காரில் உள்ளன.
டாடா கர்வ் EV: வசதிகள்
வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகளுடன் கர்வ் EV வருகிறது. இது பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஜெஸ்டர்-ஆக்டிவேட்டட் டெயில்கேட் ஆகியவற்றைப் பெறுகிறது.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் சேஞ்ச் அசிஸ்ட் மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
டாடா கர்வ் EV: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டாடா கர்வ் EV -யை இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்குகிறது. 45 kWh பேட்டரி பேக் உடன் 150 PS/215 Nm எலக்ட்ரிக் மோட்டார் மற்றொன்று 55 kWh உடன் 167 PS/215 Nm எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. முந்தையது 502 கி.மீ கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. பிந்தையது 585 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. இது V2L (ஹெஹிகிள் டூ லோடு) மற்றும் V2V (ஹெஹிகிள் டூ ஹெஹிகிள்) சார்ஜிங் ஃபங்ஷனையும் சப்போர்ட் செய்கிறது.
அதன் சார்ஜிங் நேரங்களைப் பொறுத்தவரை 70 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் வாகனத்தை 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 40 நிமிடங்கள் எடுக்கும். 7.2 kW AC சார்ஜர் மூலம், 45 kWh பேட்டரி பேக்கை 10 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய 6.5 மணிநேரமும், 55 kWh பேட்டரி பேக்கிற்கு கிட்டத்தட்ட 8 மணி நேரமும் ஆகும்.
டாடா கர்வ் EV: போட்டியாளர்கள்
டாடா கர்வ் EV -யானது நேரடியாக MG ZS EV உடன் போட்டியிடுகிறது. இது வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா இவி மற்றும் மாருதி சுஸூகி eVX ஆகிய கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: கர்வ் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful