Tata Curvv மற்றும் Curvv EV வெளிப்புற வடிவமைப்பு, அளவு, கான்செப்ட் முதல் தயாரிப்புக்கு தயாரான கார் வரை ஒரு சுருக்கமான பார்வை
published on ஜூலை 22, 2024 06:04 pm by dipan for டாடா கர்வ் இவி
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ்வ் EV கார் ஆனது வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் செப்டம்பரில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா கர்வ்வ் காரின் EV மற்றும் ICE இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்புகளின் வெளிப்புற வடிவமைப்பு வெளியிடப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில் உற்பத்தி மாடல்கள் அவற்றின் அசல் கான்செப்ட்களுக்கு நெருக்கமாக இருக்கின்றன. 2022 ஆண்டு முதல் முறையாக கர்வ்வ் EV கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. அது அப்போது டாடாவின் சமீபத்திய வடிவமைப்பு தத்துவத்தை அறிமுகப்படுத்தியது. நெக்ஸான் மற்றும் ஹாரியர்-சஃபாரி ஆகிய இரண்டு கார்களும் 2023 ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. 2023 பாரத் மொபிலிட்டி ஷோவில் வெளிப்படுத்தப்பட்ட கர்வ்வ் ICE காரின் தயாரிப்புக்கு முந்தைய கான்செப்ட் இந்த வடிவமைப்பை காட்டியது. இங்கே கான்செப்ட் -லிருந்து உற்பத்தி வரையிலான கர்வ்வ் காரின் பயணத்தை பார்க்கலாம்.
2022 டாடா கர்வ்வ் EV கான்செப்ட்
டாடாவின் எதிர்கால கார்களுக்கான டிசைன் அமைப்பை வெளிக்காட்டும் வகையில் டாடா கர்வ்வ் EV கான்செப்ட் ஆனது 2022 ஆண்டு வெளியிடப்பட்டது. பானட் விளிம்பில் நவீனமான எல்இடி லைட் ஸ்டிரிப், ஸ்பிளிட் ஹெட்லைட்கள், ஒரு தனித்துவமான சாய்வான ரூஃப்லைன் மற்றும் பின்புறத்தில் உயரும் ஷோல்டர் லைன் போன்ற விஷயங்களை இது காட்டியது. பாடி கிளாடிங் அதன் ஸ்போர்ட்டி எஸ்யூவி தன்மையை மேம்படுத்தியது. டாடாவின் சமீபத்திய ட்ரெண்டான கனெக்டட் டெயில் லைட்டுகளை முதன்முறையாக கொண்ட பின்பக்க வடிவமைப்பு, இன்டெகிரேட்டட் டூ-பார்ட் ரூஃப் ஸ்பாய்லர், ஒரு பெரிய பின்புற பம்பர் மற்றும் வாகனத்தின் அகலம் முழுமைக்கும் கனெக்டட் டெயில் லைட்களுடன் கூடிய கூபே ரூஃப்லைனை ஆகியவற்றை இந்த கான்செப்ட் உள்ளடக்கியிருந்தது.
ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 2023 டாடா கர்வ்வ் ICE கான்செப்ட்
ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், டாடா கர்வ்வ் காரின் ICE கான்செப்ட் எடிஷனை டாடா காட்சிப்படுத்தியது. இதில் EV வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. குளோஸ்டு கிரில், புளூ கலர் ஆக்சென்ட்கள் மற்றும் செங்குத்தான ஸ்லேட்டட் பம்பர்கள் போன்ற EV என்பதை காட்டுவதற்காக பல்வேறு விஷயங்கள் இதில் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. ICE பதிப்பு ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், கனெக்டட் டெயில் லைட்ஸ் மற்றும் முன் பக்கம் அகலம் முழுமைக்கும் இருந்த LED DRL -கள் ஆகியவ்ற்றை தக்கவைத்துக் கொண்டது.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் 2024 டாடா கர்வ்வ் ICE கான்செப்ட்
டாடா மற்றொரு கான்செப்ட்டை பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ, 2024 நிகழ்வில் காட்சிப்படுத்தியது. இது கர்வ்வ் ICE -ன் தயாரிப்புக்கு நெருக்கமான மாடலாகும். இந்த டாடா கர்வ்வ் கான்செப்ட் சில சிறிய திருத்தங்களுடன் முந்தைய கான்செப்ட் மாடலை போலவே இருந்தது. முன் பக்கம் அப்டேட் செய்யப்பட்டிருந்தது மற்றும் இது நெக்ஸான் போன்ற ஒரு முன்பக்கத்தையும் இது கொண்டிருந்தது. இதில் முக்கோண ஹெட்லைட் மற்றும் ஃபாக் லைட்ஸ் செட்டப், LED DRLகள் மற்றும் குரோம்-பதிக்கப்பட்ட பம்பர் ஆகியவற்றை பார்க்க முடிந்தது. கர்வ்வ் காரின் விஷயங்களும் அதன் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருந்தன. கூபே ரூஃப்லைன் ஹை-சீட்டட் பின்புற முனை வரை சென்றது. இந்த கான்செப்ட் புதிய 18-இன்ச் டூயல்-டோன் இதழ்-வடிவ அலாய் வீல்களையும் காட்சிப்படுத்தியது. பின்புறத்தில் கான்செப்டில் இருந்து முக்கிய விஷயங்களை தக்க வைத்துக் கொண்டாலும் கூட உற்பத்திக்கு தயாரான பதிப்பு எஸ்யூவியின் அகலம் முழுமைக்கும் கொடுக்கப்பட்டுள்ள கிடைமட்ட டெயில் லைட்ஸ் மற்றும் ஸ்பிளிட்டட் ரூஃப்-இன்டெகிரேட்டட் ஸ்பாய்லர் உள்பட மேம்படுத்தப்பட்ட பல விஷயங்களை காட்டியது.
உற்பத்திக்கு தயாராகவுள்ள ஸ்பெக் டாடா கர்வ்வ் மற்றும் கர்வ்வ் EV
தயாரிப்பு டாடா கர்வ்வ் ஆனது 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலுக்கு நெருக்கமாக இருக்கிறது. அதன் டூயல்-டோன் பெடல்-ஷேப்டு அலாய் வீல்கள் மற்றும் ரேப்பரவுண்ட் கிளாஸ் பிளாக் கிளாடிங் ஆகியவை அப்படியே இருக்கின்றன. கிரில் மற்றும் முன்பக்க பம்பர் ஆகிய இரண்டும் பெரிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இது இப்போது கான்செப்ட்டின் முந்தைய சில்வர் ஆக்ஸென்ட்களுக்கு பதிலாக பாடி கலர்டு இன்செர்ட்களையும் கொண்டுள்ளது. கூபே ரூஃப்லைன் மற்றும் பின்புறம் முழுகலத்துக்கும் உள்ள டெயில் லைட் மற்றும் ஸ்பிலிட் ரியர் ஸ்பாய்லரை கான்செப்ட்டில் இருந்து அப்படியே தக்க வைத்துக் கொண்டது. தயாரிப்புக்கு தயாராக உள்ள பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறம் ஆகியவை கான்செப்ட்க்கு நெருக்கமாக இருக்கின்றன.
உற்பத்திக்கு தயாராக உள்ள டாடா கர்வ்வ் EV ஆனது அதன் 2022 கான்செப்டில் இருந்து பெரும்பாலான வடிவமைப்பு விஷயங்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் பல விஷயங்கள் மெருகூட்டப்பட்டுள்ளன. நெக்ஸான் EV -ஐ நெருக்கமாக ஒத்திருக்கும் வகையில், சீல்-ஆஃப் கிரில், கனெக்டட் DRL -கள் கீழ்நோக்கி நீட்டிக்கப்பட்டுள்ளன, மற்றும் ஹெட்லைட் கிளஸ்டர்கள் பிளாக் பிளாஸ்டிக்கால் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். வழக்கமான விங் மிரர்கள் கான்செப்ட்டின் கேமராக்களை மாற்றுகின்றன. மேலும் தயாரிப்பு மாடல் ஆனது ஏரோடைனமிக் பாணியில் ஏரோ பிளேடுகளுடன் கூடிய வீல்களை கொண்டுள்ளது. பக்கவாட்டு தோற்றம் இப்போது வழக்கமான ஃப்ளஷ்-வகை டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. மேலும் கான்செப்ட் காரில் இருந்து மிதக்கும் சி-பில்லர் தவிர்க்கப்பட்டாலும், ரேப்பரவுண்ட் பளபளப்பான பிளாக் கிளாடிங் உள்ளது. பின்புறத்தில் கர்வ்வ் EV காரின் முழு அகலத்துக்கு டெயில் லைட்டையும், ஸ்பிலிட் ரியர் ஸ்பாய்லர் ஆகியவற்றையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஸ்டைலிங்கை பொறுத்தவரையில் பம்பரில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டாடா கர்வ்வ் மற்றும் கர்வ்வ் EV ஆகியவை இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் முதல் எஸ்யூவி-கூபே மாடல்கள் ஆகும். இருப்பினும் இந்தியாவில் விரைவில் மற்றொரு எஸ்யூவி-கூபேயான சிட்ரோன் பசால்ட் காரும் டாடா கார்களுடன் போட்டியில் இனையவுள்ளது.
டாடா கர்வ்வ் மற்றும் டாடா கர்வ்வ் EV காரின் ஸ்டைலிங் மற்றும் வெளிப்புற வடிவமைப்பை பற்றிய உங்கள் எண்ணங்கள் என்ன? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் கூறுங்கள்.
லேட்டஸ்ட் கார் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்
0 out of 0 found this helpful