• English
  • Login / Register

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஆப்ஷனால் ஏர் பேக்குகள் மற்றும் ABS அறிமுகம்

published on நவ 25, 2015 01:38 pm by sumit for மாருதி ஸ்விப்ட் 2014-2021

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தற்போது சந்தையில் உள்ள தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசயர் ஆகிய கார்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்ஸங்களான டூயல் ஏர் பேக்குகள் மற்றும் ABS அமைப்பு ஆகியவற்றை பொறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள், காருடன் இணைந்து வராமல், தனியாக ஆப்ஷனால் அம்ஸங்களாக வருகின்றன. பாதுகாப்பான பயணத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது காரில் இந்த அம்சங்களை இணைத்துக் கொள்ளலாம்.

மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்கெட்டிங் அண்ட் சேல்ஸ் பிரிவு எக்ஸிக்யூடிவ் இது பற்றி கூறும் போது, “ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் என்ற இரண்டு கார்களும், இந்தியர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான கார்களாகும். இந்திய வாகன தொழில்துறையை வடிவமைப்பத்தில், இவை இரண்டும் முக்கிய பங்கேற்கின்றன. நவீன பாணியில் உள்ள வடிவமைப்பு; உயர்தர சொகுசு வசதிகள்; மற்றும் சிறந்த செயல்திறனுக்காக இந்த கார்கள் மிகவும் பெயர் போனவை. ஓட்டுனருக்கும், துணை ஓட்டுனருக்கும் பாதுகாப்பு ஏர் பேக்குகள் மற்றும் வழுக்கும் சாலைகளிலும் சிறந்த முறையில் வாகனத்தைக் கையாள ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் (ABS) போன்றவை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் அனைத்து வேரியண்ட்களிலும் பொருத்தி, எங்களது வாடிக்கையாளர்களின் மத்தியில், இந்த கார்களுக்கு உள்ள புகழை மேலும் அதிகப்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.

கடந்த 10 வருடங்களில் பதிவான, ஸ்விஃப்ட் காரின் விற்பனை விவரங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பலதரப்பட்ட போட்டிகள் நிறைந்த வாகன உலகில், பல்வேறு பிரபலமான கார்கள் இருந்தாலும் ஈடு இணையில்லா தன்மையுடன் உள்ள இந்த மாடல், ஏராளமான சாதனைகளைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்படத்தக்க செய்தி ஆகும். அது மட்டுமல்ல, 2013 –ஆம் வருடத்திற்கான என்ட்ரி லெவல் சேடான் கார்களில், இந்தியாவின் மிகச் சிறப்பாக விற்பனையாகும் கார் என்ற பெருமையை, 2008 –ஆம் ஆண்டு அறிமுகமான டிசையர் கார் தட்டிச் சென்றுள்ளது. உண்மையில், இந்த பிரிவின் நாயகனாக டிசையர் திகழ்கிறது என்று கூறினால் அது மிகையாகாது, ஏனெனில், இந்திய பயணிகள் கார் சந்தையின் தலைசிறந்த முதல் 5 கார்களின் பட்டியலில் இந்த காரும் இடம் பெறுகிறது. இந்திய மக்கள் இந்த காரின் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அபிமானத்தையும் இதன் வழியாக தெள்ளத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.. மாருதி சுசுகி நிறுவனத்தின் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் என்ற இரண்டு கார்களின் விற்பனை பாங்கு (பேட்டர்ன்), இந்தியா ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு ஒரு சிறந்த மாதிரியாகவும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது. ஏனெனில், 2014 – 15 நிதி ஆண்டில், சராசரியாக இந்த இரண்டு கார்களின் ஒரு மாதத்திற்கான விற்பனை - 17,000 கார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Maruti ஸ்விப்ட் 2014-2021

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience