வேவு பார்க்கப்பட்டது : சோதனை ஓட்டத்தின் போது மாருதி YRA / பலேனோ ( வீடியோ காட்சி செய்தி தொகுப்பின் உள்ளே )
published on செப் 29, 2015 02:27 pm by manish for மாருதி வைஆர்ஏ
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : சமீபத்தில் நடந்த ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி YRA/ பலேனோ கார்கள் குர்காவ்ன் நகர தெருக்களில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது நமது பார்வையில் சிக்கியது. காரின் பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த வீடியோ காட்சி இணையத்தளத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோ காட்சியில் முற்றிலும் கருப்பு வண்ண போர்வையால் மறைக்கப்பட்டுள்ள இந்த YRA/பலேனோ காரின் பின்புற டெயில் விளக்கு க்ளஸ்டரை மற்றும் லேசாக பார்க்க முடிகிறது. சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இந்த மாருதி YRA/பலேனோ கார்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது . இந்த வீடியோ காட்சியை ஆட்டோஸ்பீட் என்ற புனைபெயர் கொண்ட ஒரு யூ - ட்யூப் உபயோகிப்பாளர் பதிவேற்றம் (அப்லோட்) செய்துள்ளார்.
பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவில் முதலிடத்தில் உள்ள ஹயுண்டாய் நிறுவனதி i20 ஆக்டிவ் கார்களுக்கு போட்டியாக இந்த கார்கள் அறிமுகமாக உள்ளன. அதனால் தான் ஸ்விப்ட் கார்களை விட உயர்வான இடத்தில் இந்த கார்கள் வைக்கப்பட்டு தங்களது பிரிமியம் டீலர்ஷிப் மையமான நெக்ஸா மூலம் மட்டுமே இந்த கார்களை விற்பனை செய்ய மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. பலேனோ அல்லது YRA என்று அழைக்கப்பட இருக்கு இந்த புதிய கார்கள் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் சிறந்த கையாளுதல் வசதிகளை தரக் கூடிய வகையில் முற்றிலும் புதிய பிளேட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. . காரின் அளவுகளைப் பொறுத்த வரையில் 3,995 mm நீளம், 1,745 mm அகலம் மற்றும் 1,470 mm உயரமும் கொண்டுள்ளது. உயரத்தைப் பொறுத்தவரை SHVS தொழில்நுட்ப என்ஜின் பொருத்தப்பட்ட வேரியன்ட்களில் உயரம் 10 mm குறைக்கப்பட்டு 1,460 என்ற அளவிலிருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும் 355 லிட்டர் கொள்ளளவு கொண்ட நன்கு விசாலமான டிக்கியும் அமைக்கப்பெற்றுள்ளது.
உட்புறத்தைப் பொறுத்தவரை ப்ளுடூத் தொடர்புடன் கூடிய ஸ்மார்ட்ப்ளே இந்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் நேவிகேஷன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன. காரில் உள்ள அம்சங்களை எளிதில் கையாளும் விதத்தில் இந்த புதிய YRA/ பலேனோ கார்களில் ஆடியோ மற்றும் டெலிபோன் வசதிகளை இயக்கக் கூடிய பொத்தான்கள் பொருத்தப்பட்ட மல்டி பங்க்ஷன் ஸ்டேரிங் வீல் இணைக்கப்பட்டுள்ளது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இவைகளைத் தவிர தானியங்கி கிலைமேட் கண்ட்ரோல் சிஸ்டமும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாக உள்ள வேரியன்ட்களில் 1.2 லிட்டர் கே - சீரிஸ் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் DDiS டீசல் என்ஜின் - மிதமான SHVS ஹைப்ரிட் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு வெளியாகும் என்று அறியப்படுகிறது.
0 out of 0 found this helpful