வேவு பார்கப்பட்டது : மாருதி ஸ்விப்ட் டிசையர் டீசல் ஆடோமேடிக் விரைவில் அறிமுகம்
published on டிசம்பர் 24, 2015 05:11 pm by konark for மாருதி டிசையர் 2017-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
புது டெல்லி : இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் செடான் வகை கார்களான மாருதி சுசுகி ஸ்விப்ட் டிசையர் சமீபத்தில் தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ரகசியமாக படம் பிடிக்கப்பட்டது. . காரின் பக்கவாட்டு பகுதியில் பொறிக்கப்பட்டிருந்த DDiS சின்னம், மாருதி நிறுவனத்தின் ஆட்டோமேடிக் ட்ரேன்ஸ்மிஷன் வசதி பொருத்தப்பட்ட முதல் டீசல் கார் இது என்பதை தெளிவாக உணர்த்தியது .
ஆட்டோ கியர் ஷிப்ட் (AGS) என்று ப்ரேன்ட் செய்யப்பட்டுள்ள இந்த டிசையர் கார்களில் மேக்னடி மரேலி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட AMT ( ஆடோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் )ஆட்டோபாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. செலீரியோ மற்றும் ஆல்டோ K10 கார்களில் இந்த நிறுவனத்தின் AMT ஆட்டோபாக்ஸ் தான் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஸ்விப்ட் டிசையர் கார்களை பொறுத்தவரை CVT ஆட்டோமாடிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட பெட்ரோல் வேரியன்ட் ஒன்று சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.
நமது இந்திய கார் சந்தை, தானியங்கி வசதி (ஆட்டோமாடிக் ) கொண்ட வாகனங்கள் பக்கம் அதிகமாக ஈர்க்கப்பட்டு , பெரும்பாலான வாடிக்கையாளர்கள் AMT வசதி கொண்ட வாகனங்களையே வாங்க நினைகின்றனர். இத்தகைய சூழலில் . டீசல் AMT மாடல் ஒன்றை அறிமுகப்படுத்துவது , மாருதி நிறுவனத்தின் ஒரு விவேகமான நகர்வாகவே நமக்கு தோன்றுகிறது.
இந்த ஸ்விப்ட் டிசையர் கார்களின் அதிகபட்ச வசதிகள் கொண்ட டாப் - எண்டு வேரியன்ட்களில் இரட்டை - ஏயர் பேக் ( காற்று பைகள் ) , ABS, ப்ளூடூத் தொடர்பு , ஸ்டீரிங் சக்கரத்துடன் இணைக்கப்பட்ட ஆடியோ கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது எங்களுக்கு கிடைத்த புகைப்படங்கள் மூலம் நன்கு புலனாகிறது.
அதிகபட்சமாக 4000rpm ல் 74 பிஎச்பி அளவு ஆற்றல் மற்றும் 2,000rpm ல், 190 nm அளவுக்கு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் , ஏற்கனவே முயற்சிக்கப்பட்டு , நன்கு சோதிக்கப்பட்ட 1.3 லிட்டர் மல்டிஜெட் நான்கு - வால்வ் DOHC டர்போ டீசல் என்ஜின் தான் இந்த டிசையர் டீசல் ஆட்டோமேடிக் மாடல் கார்களில் பொருத்தப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய AMT அம்சம் பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் ஜனவரி 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் இதன் விலை மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலை விட 30 முதல் 50 ஆயிரம் வரை கூடுதலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க