புதுப்பிக்கப்பட்ட SX4 S-கிராஸ் வேவு பார்ப்பு: உங்களால் வித்தியாசத்தை கண்டறிய முடிகிறதா?
published on செப் 05, 2015 05:47 pm by manish for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 12 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: சர்வதேச அளவில் கிடைக்கும் புண்டோ இவோ-வை தழுவிய நிலையில், நடப்பு தலைமுறையை சேர்ந்த புண்டோ வந்ததை மறக்க முடியாது. இந்நிலையில் ஜப்பானிய வாகன தயாரிப்பாளரான சுசுகி, ஃபியட் நிறுவனத்திடம் இருந்து டீசல் என்ஜினை மட்டும் பெறவில்லை என்று நம்புவதற்கு ஏதுவாகிறது. ஏனெனில் சர்வதேச அளவிலான மாருதி S-கிராஸ், அதாவது சுசுகி SX4 S-கிரஸின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் முன்மாதிரியின் உளவு படங்கள் சமீபத்தில் கிடைத்துள்ளது. இந்தியாவில் S-கிராஸ் அறிமுகமாகி ஒரு மாதமே ஆகிறது. இந்நிலையில் சர்வதேச மாடலான SX4 S-கிராஸில், ஆல்கிரிப் எனப்படும் சுசுகியின் ஆல்-வீல்-ட்ரைவ் சிஸ்டம் இருப்பது தான், இந்திய மாடலில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டும் முக்கிய அம்சமாகும்.
சோதனை முன்மாதிரியில் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் லைட்டிக் கிளஸ்டர்கள் மற்றும் முன்பக்கத்தில் ஒரு புதிய பம்பர் ஆகிய அம்சங்களை தவிர, பெரியளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உட்புறத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் நம்மிடம் படங்களோ அல்லது தகவலோ இல்லை. சர்வதேச மாடலை பொறுத்த வரை, 1.6-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்பிளண்ட் கொண்டுள்ளது. தற்போதைய புதுப்பிக்கப்பட்ட மாடலிலும் இதுவே தொடரும் என்று தெரிகிறது. இந்திய வகையில் 1.3-லிட்டர் மற்றும் 1.6-லிட்டர் டீசல் யூனிட் காணப்படுகிறது.
இந்த புதுப்பிக்கப்பட்ட சுசுகி SX4 S-கிராஸ், அநேகமாக அடுத்த ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரலாம். ஆனால் இதை இந்திய வீதிகளுக்கு, அவ்வளவு சீக்கிரத்தில் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் சர்வதேச மாடல் பல ஆண்டுகளாக விற்பனையில் உள்ள நிலையில், இந்தியாவில் S கிராஸ் அறிமுகமாகி வெறும் ஒரு மாதம் மட்டுமே கடந்துள்ளது என்பதை நாம் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும்.