சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமானது Skoda Octavia vRS

shreyash ஆல் ஜனவரி 17, 2025 10:04 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
47 Views

புதிய ஆக்டேவியா vRS காரில் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 265 PS பவர் அவுட்புட்டை கொடுக்கிறது. இது இந்த செடானின் மிக சக்திவாய்ந்த வெர்ஷன் ஆகும்.

  • LED மேட்ரிக்ஸ் பீம் ஹெட்லைட்கள், 18-இன்ச் அலாய்கள் மற்றும் அனிமேஷன்களுடன் கூடிய LED டெயில் லைட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • டாஷ்போர்டு, ஸ்டீயரிங் மற்றும் சீட்களில் ரெட் ஹலைட்ஸ் கொண்ட பிளாக் நிற இன்ட்டீரியர் உடன் வருகிறது.

  • புதிய ஆக்டேவியா vRS -ல் 13-இன்ச் டச் ஸ்கிரீன், 10-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல்-ஜோன் ஏசி ஆகியவை அடங்கும்.

  • 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) வழியாக பவர் வீல்களுக்கு அனுப்பப்படுகிறது.

  • விலை ரூ. 45 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா vRS அதன் ஸ்போர்ட்டி டிசைன், கையாளுதல் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜினுக்கு பெயர் பெற்ற ஒரு செடான் ஆகும். இது இப்போது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் புதிய அவதாரத்தில் இந்தியாவில் அறிமுகமானது. ஸ்கோடாவின் பிரபலமான வடிவமைப்பில் ஆக்டேவியா vRS அதன் தன்மையை காட்டுகிறது. தடிமனான பிளாக்-அவுட் ஆக்ஸென்ட்கள், தாழ்ந்த வடிவமைப்பு,, ஹூட்டின் கீழ் 265 PS இன்ஜின் ஆகியவை மிகவும் சிலிர்ப்பை கொடுக்கும் வகையில் உள்ளன. புதிய ஆக்டேவியா vRS பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

வடிவமைப்பு: ஒரு வழக்கமான ஸ்கோடா

முதல் பார்வையில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா vRS அதன் பட்டர்ஃபிளை கிரில் காரணமாக வழக்கமான ஸ்கோடாவை போல் தெரிந்தாலும் ஹெட்லைட்கள் மற்றும் பம்பர் நான்காவது தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2025 ஆக்டேவியா vRS LED மேட்ரிக்ஸ் பீம் ஹெட்லைட்கள் மற்றும் LED டெயில் லைட்களுடன் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷன்களையும் கொண்டுள்ளது.

RS பதிப்பு என்பதால் அதாவது செடானின் ஸ்போர்ட்டியர் பதிப்பு, இந்த ஆக்டேவியா கிரில் மற்றும் ORVMகள் (எக்ஸ்ட்டீரியர் ரியர் வியூ மிரர்ஸ்) போன்ற சில பிளாக் அவுட் ஆக்ஸென்ட்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது தாழ்வான வடிவமைப்பை கொண்டுள்ளது இது காருக்கும் மற்றும் ஏரோடைனமிக்ஸ் ரீதியாக 18-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செடானுக்கு மிகவும் தேவையான ஸ்போர்ட்டி தோற்றத்தை கொடுக்க பின்புற பம்பரும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட உட்புறம்

நான்காவது தலைமுறை ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட்டில் உள்ள மாற்றங்கள் வெளிப்புறமாக அப்படியே இருப்பதால் இது ஒரு புதிய கேபின் செட்டப்பை பெறுகிறது. இது ஒரு RS பேட்ஜை கொண்டிருப்பதால் பிளாக் நிற லெதரெட் இருக்கைகளில் ரெட் கலர் ஸ்டிச்களுடன், டாஷ்போர்டில் சில ரெட் ஹைலைட்ஸ் உடன் ஆல் பிளாக் இன்ட்டீரியரை பெறுகிறது.

2025 ஆக்டேவியா வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 13 இன்ச் டச் ஸ்கிரீன், 10 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட்ஸ், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஹீட்டட் மற்றும் வென்டிலேஷன் உடன் கூடிய எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுகிறது.

இதுவரை வெளியானதிலேயே சக்தி வாய்ந்த ஆக்டேவியா

2025 ஆக்டேவியா vRS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 265 PS மற்றும் 370 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. இது வெறும் 6.4 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு போதுமானது. பவர் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (டிசிடி) வழியாக அனுப்பப்படுகிறது. ஆக்டேவியா vRS -ன் உச்சபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 250 கிமீ/மணி வேகம் வரை மட்டுமே செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்டேவியா vRS -ன் ஸ்போர்ட்டினெஸை மேம்படுத்துவது அதன் தாழ்வான ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பாகும். இது ஸ்டாண்டர்டான ஆக்டேவியாவை விட 15 மிமீ குறைவாக உள்ளது. இது டைனமிக் சேசிஸ் கட்டுப்பாட்டுடன் இணைந்து செயல்படுகிறது. அதே சமயம் லிமிடெட் ஸ்லிப் டிஃபரென்ஷியல் வழியாக சரியான டிராக்ஷன் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. பிரேக்கிங் ஹார்டுவேர் கூட நிலையான ஆக்டேவியாவை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. காரை சரியான இடத்தில் நிறுத்துவதற்கான சக்தி உங்களிடம் உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு, விலை மற்றும் போட்டியாளர்கள்

2025 ஸ்கோடா ஆக்டேவியா vRS இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ 45 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இந்த விலை வரம்பில் ஆக்டேவியா vRS -வுக்கு நேரடியாக எந்த போட்டியாளர்களும் இருக்காது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Skoda ஆக்டிவா ஆர்எஸ்

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.1.67 - 2.53 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.12.28 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை