• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஸ்கோடா நிறுவனம் ஆக்டேவியா ஆர்எஸ் 245 ஐ ரூபாய் 36 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது

published on பிப்ரவரி 06, 2020 09:53 am by sonny for ஸ்கோடா ஆக்டிவா 2013-2021

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இதற்கு முந்தய காருக்கு விடையளிக்கும் விதமாக தற்போதைய-தலைமுறை  ஆக்டேவியா மிக சக்திவாய்ந்த வேரியண்ட்டைக்  கொண்டுள்ளது

  • மிகவும் ஆற்றல்மிக்க ஆக்டேவியா தற்போது 245பி‌எஸ் / 370என்எம் செயல்திறனைப் பெறுகிறது.

  • இதில் டிஜிட்டல் கருவித் தொகுப்பு, இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு, நவீன உட்கட்டமைப்பு  போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.

  • ஒரு சில மாதங்களில் விஆர்எஸ் தற்போதைய தலைமுறை ஆக்டேவியாவுடன் இணைந்து விற்பனைக்கு வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

  • இந்தியாவில் இந்த விஆர்எஸ் 200 அலகுகள் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே வழங்கப்பட உள்ளன.

  • • இது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி ஏ 4, மெர்க் சி-கிளாஸ் போன்றவற்றை விட ஒப்பீட்டளவில் மலிவான வேடிக்கையான குடும்பத்திற்கு ஏற்ற கார் இதுய்வாகும்.

Skoda Octavia RS245 Launched For Rs 36 Lakh At Auto Expo 2020

ஸ்கோடா நிறுவனத்தின் தற்போதைய தலைமுறை ஆக்டேவியாவில் பிஎஸ்6 இன் எந்தவிதமான புதுப்பிப்புகளும் இந்த புதிய காரில் இடம் பெறாது. ஆகவே, ஆட்டோ எக்ஸ்போ 2020 இல், கார் தயாரிப்பு நிறுவனம் மற்றொரு விஆர்எஸ் வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பைக் பெற்றிருக்கிறது, இது மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும்.

ஆக்டேவியா ஆர்எஸ் 245 என்பது இந்திய சந்தையில் 200 அலகுகள் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு வேரியண்ட் கிடைக்கிறது, இப்போது ரூபாய் 36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் இயந்திரம்  மூலம் 245பிஎஸ் மற்றும் 370என்எம் வெளியீட்டில் இயக்கப்படுகிறது. சிறந்த பிடிப்புடன் முன் அச்சில் மின்னணு வரையறுக்கப்பட்ட-இருக்கை வேறுபாட்டுடன் 7-வேக டிஎஸ்ஜி தானியங்கி வழியாக முன் சக்கரங்களுக்கு ஆற்றல்  அனுப்பப்படுகிறது.

Skoda Octavia RS245 Launched For Rs 36 Lakh At Auto Expo 2020

இதில் இருக்கும் சிறப்பம்சங்களைப் பார்க்கும் போது, இது வழக்கமான ஆக்டேவியாவின் உயர்-தனிசிறப்புகள் போலவே பொருத்தப்பட்டிருக்கிறது என்றாலும் கூட ஸ்போர்ட்டியர் உள்ளமைப்புகளை கொண்டிருக்கிறது. இது சிவப்பு நிற சிறப்பம்சங்கள், விளையாட்டு இருக்கைகள், தட்டையான தளவமைப்பு திசை திருப்பி மற்றும் எல்லா இடங்களிலும் ஏராளமான விஆர்எஸ் பேட்ஜ்கள் கொண்ட கருப்பு நிற  கருப்பொருளையும் பெறுகிறது. ஸ்போர்ட்டி ஆக்டேவியா டிஜிட்டல் ஓட்டுனர் இருக்கை, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு தனியங்கியுடன் 8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, ஆற்றல் மிக்க சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, காரை நிறுத்தும் வசதி மற்றும் இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான 12.3 அங்குல டிஜிட்டல் கருவித் தொகுப்பை பெறுகிறது.

Skoda Octavia RS245 Launched For Rs 36 Lakh At Auto Expo 2020

ஆக்டேவியா விஆர்எஸ் 245 இன் வெளிப்புற வடிவமைப்பில்  காட்சி மாற்றங்களில் வெவ்வேறு 18 அங்குல உலோகம்  விஆர்எஸ் பேட்ஜ்கள், ஸ்பாய்லர் மற்றும் இரட்டை வெளியேற்ற முனைகள் ஆகியவை அடங்கும். தற்போதைய உயர்-தனிசிறப்பு பெட்ரோலில் இயங்கும் எல்அண்ட்கே வேரியண்ட்டை விட கூடுதல் செயல்திறனுக்காக ஸ்கோடா கூடுதலாக ரூபாய் 12.4 லட்சம் வசூலிக்கிறது. தினசரி உபயோகப்படுத்தும் ஆனால் வேடிக்கையான கார்களின் செயல்திறன் ஆர்வலர்களுக்கு, ஆக்டேவியா விஆர்எஸ் ஒரு கனவு விருப்பமாகும். இது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி ஏ 4 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் போன்றவற்றை விட மலிவு விலையில் உள்ளது.

மேலும் படிக்க :ஆக்டோவியாவின் இறுதி விலை

was this article helpful ?

Write your Comment on Skoda ஆக்டிவா 2013-2021

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience