ஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா ஸ்டைல் ப்ளஸ் கார்களை அறிமுகப்படுத்தியது.
ஸ்கோடா ஆக்டிவா 2013-2021 க்காக செப் 14, 2015 09:48 am அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: செக் நாட்டின் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா நிறுவனம் முதன் முதலில் ஆக்டேவியா கற்களை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.இப்போது சில வருடங்களுக்கு பின்னர் அந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை ஆக்டேவியா "ஸ்டைல் ப்ளஸ்" என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை கார்களிலேயே அதிக நேர்த்தியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்கோடா நிறுவனம் இந்த கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் என்ஜின் மாடல் ரூ.19.80 லட்சத்திற்கும் ,டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ரூ. 21.23 லட்சம், (எக்ஸ் - ஷோரூம்,மும்பை ) என்ற விலைக்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த புதிய ஸ்டைல் ப்ளஸ் மாடலில் கீலெஸ் என்ட்ரி( சாவி இல்லா) , ஸ்மார்ட் லிங்க் மொபைல் போன் கனக்டிவிடி, என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் அமைப்பு, மத்திய கன்சோல் பகுதியில் பொருத்தப்பட்ட டிஸ்ப்ளே உடன் கூடிய பின்புறம் பார்க்க உதவும் கேமெரா மற்றும் இரண்டு பின்புற ஏயர் பேக் (காற்று பைகள் ) போன்ற பல சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டைல் ப்ளஸ் காரில் மொத்தம் எட்டு காற்றுப்பைகள் உள்ளன என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.
இயந்திர அடிப்டையில் பார்க்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தானியங்கி மாடல்களில் முந்தைய ஸ்டேண்டர்ட் மாடலில் இல்லாத பேடல் ஷிப்டர்ஸ் அம்சம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி 2.0TDI மற்றும் 1.8TSI என்ஜின் மாடல்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கொடுக்கப்பட்டுள்ளது. 1.4TSI என்ஜின் பொருத்தப்பட்டுள்ள மாடல்களில் இந்த வசதி கிடையாது. அதே போல் பேடல் ஷிப்டர்ஸ் அம்சமும் 1.8TSI மற்றும் 2.0TDI என்ஜின் மாடல்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஆக்டேவியா கார்கள் நேர்த்தியான வடிவமைப்பின் மூலம் எப்போதுமே ஒரு பந்தய கார் போன்ற தோற்றத்தையே பெற்று இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்துள்ளன. இப்போது சேர்க்கப்பட்டுள்ள பேடல் ஷிப்டர் வசதி இந்த கார்களை மேலும் மேலும் மெருகூட்டுவதில் ஸ்கோடா நிறுவனம் காட்டும் அக்கறையை நாம் நன்கு உணர முடிகிறது.