• English
    • Login / Register

    ஸ்கெட்ச் மற்றும் ரியாலிட்டி: 2023 வெர்னா ஏன் டீசர்களில் பார்த்ததைப் போல இருக்கப்போவதில்லை

    ஹூண்டாய் வெர்னா க்காக மார்ச் 01, 2023 07:10 pm அன்று ansh ஆல் திருத்தம் செய்யப்பட்டது

    • 54 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிதாக சந்தைக்கு வரப்போகும் ஹூண்டாயின் செடான், சக்திவாய்ந்த மற்றும் ஸ்போர்ட்டியான புதிய வடிவமைப்புடன் வாங்குபவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னால் கிடைத்த அனுபவம் நமது எதிர்பார்ப்புகளை கொஞ்சம் குறைக்கச் சொல்கிறது.

    Sketches: Hyundai Creta, 2023 Verna and Skoda Slavia

    வாகன வடிவமைப்பு என்பது பல நிலைகளைக் கொண்ட ஒரு நீண்ட செயல்முறையாகும், இதில் இறுதித் தோற்றத்தைத் தீர்மானிப்பதற்கு முன் பல்வேறு வகையான பொருட்களைப் பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்தும் ஒரு யோசனையுடன் தொடங்கி, ஒரு துண்டு காகிதத்தில் ஒரு ஓவியமாக வரையப்படுகிறது. பின்னர் ஒரு யோசனை ஒரு வடிவமைப்பாக மாறி இறுதியில் அது உற்பத்தி நிலைக்கு செல்கிறது .சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் காரானது வரைபடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.  சந்தை நிலைக்கு ஏற்ப காரை மாற்றுவதும் செலவைக் குறைக்கும் வகையில் எடுக்கப்படும் முடிவுகளுமே அதற்கு காரணமாக இருக்கின்றன.

    2023 Hyundai Verna Sketch

    மிக சமீபத்தில், ஹுண்டாய் அதன் அடுத்து வரவிருக்கும் காரான சிக்ஸ்த் ஜெனரேஷன் வெர்னாவின்  வரைபடத்தை பகிர்ந்திருந்தது,  இது இலக்கு பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. வரைபடமானது அதன் சமீபத்திய வடிவமைப்பு பாணியை கூர்மையான கோடுகள் மற்றும் பெரிய சக்கரங்களுடன் ஸ்போர்ட்டியான மற்றும் பிரீமியமான காரைக் எடுத்துக் காட்டுகிறது. ஆனால் கார் தயாரிப்பாளர் டீசரில் காட்டியது போல காம்பேக்ட் செடான் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

    மேலும் படிக்க: க்ரெட்டா இவி இந்தியாவிற்கான ஹூண்டாயின் முதல் பெருந்திறள் சந்தை எலக்ட்ரிக் காராக இருக்க முடியுமா?

    எங்கள் கருத்தை சிறப்பாக விளக்குவதற்கு, வெளியீட்டிற்கு முந்தைய டீசர் ஸ்கெட்ச் இறுதி தயாரிப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைக் காட்டும் ஐந்து கார்களின் எடுத்துக்காட்டுகள் நம்மிடம் உள்ளன, அவற்றில் பல ஹூண்டாய் நிறுவனத்திலிருந்தே உள்ளன.

    ஹூண்டாய் க்ரெட்டா

    Hyundai Creta Sketch
    Hyundai Creta

    வரைபடத்துக்கும் நமக்குக் கிடைத்த எஸ்யுவிக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகத் தெரியும். முன்புற ப்ரொஃபைல் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், வரைபடத்தில் பக்கவாட்டு பகுதிகள் ப்ரொஃபைல்  மிகைப்படுத்தப்பட்ட விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் உண்மையான காரைப் போலத்  தோற்றமளிக்கவில்லை. வரை படத்தில் கார் கதவுகள்  மற்றும் ORMV ( Outside rear view mirror ) - நேர்த்தியாகவும் கதவுகள் பெரியதாகவும் தெரிகின்றன. ஆனால் உண்மையான காரில் இருக்கும் 17 அங்குலங்களைக் காட்டிலும் ஆர்குகளை நிரப்பும் வீல்கள் மிகப்பெரிய வேறுபாடாக இருக்கின்றது.

    ஹூண்டாய் ஆரா

    Pre-facelift Hyundai Aura Sketch
    Pre-facelift Hyundai Aura

    இறுதி தயாரிப்பானது டீசர் வரைபடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பதற்கு ஆரா இன்னுமொரு சிறந்த எடுத்துக்காட்டு. வரைபடத்தில், அதன் விரிந்த வீல் ஆர்க்குகள், ஆழமாக உள்ளே தள்ளப்பட்ட ப்ரொஃபைல் மற்றும் லோ-ரைடிங் வடிவமைப்புடன்  ஃபேஸ்லிஃப்ட்-க்கு முந்தைய ஆரா என்பது உண்மையான காரை ஒப்பிடும் போது ஒரு ஸ்போர்ட்ஸ் கார் போல் தெரிகிறது. ஹூண்டாய் உண்மையான காரை அறிமுகப்படுத்திய போது , அது ஒரு வழக்கமான செடான், சப் காம்பாக்ட் காரின் விகிதத்தைக் கொண்டதாகவே இருந்தது.

    ஹீண்டாய் அல்கசார்

    Hyundai Alcazar Sketch
    Hyundai Alcazar

    ஹூண்டாயின் வரைபடமானது இறுதி தயாரிப்புடன் எங்கெல்லாம் ஒத்திருக்கிறது என்பதை பார்க்கலாம். வரையப்பட்ட  ஏ-பில்லரின் ரேக் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் தவிர வரைபடம்  மற்றும் உண்மையான கார் இரண்டும் ஒரே மாதிரியே தோற்றமளிக்கின்றன.

    ஸ்கோடா குஷாக்

    Skoda Kushaq Sketch
    Skoda Kushaq

    ஸ்கோடா இந்தியாவிற்காக உருவாக்கப்படும் தனது புதிய மாடல்களின் வரைபடங்களை காரின் அறிமுகத்துக்கு முன்னரே வெளியிடும் சில நிறுவனங்களில்  ஒன்றாகும். ஹூண்டாயின் சமீபத்திய கார்களுடன் ஒப்பிடும்போது, இந்த நிறுவனத்தின் வரைபடங்கள் உண்மையான காரின் தோற்றத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன , குறிப்பாக குஷாக் விஷயத்தில். டீசரில் இருந்த வரைபடத்துக்கும் உண்மையான எஸ்யுவிக்கும் ஒரே ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஒன்று உள்ளது, அது அலாய் வீல்களின் அளவு மற்றும் வடிவமைப்பு, இது பெரும்பாலும்  அனைத்து வரைபடங்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயமாகும்.

    ஸ்கோடா ஸ்லாவியா

    Skoda Slavia Sketch
    Skoda Slavia

    குஷாக்கைத் தொடர்ந்து செடானான ஸ்கோடா ஸ்லாவியா. மீண்டும் இதன் மூலமாக, டீசர் வரைபடம் மற்றும் உண்மையான செடான் இடையேயான முக்கிய வேறுபாடுகள் சக்கரங்கள் மற்றும் அவை காரின் தோற்றத்தை எவ்வாறு மாற்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஸ்கெட்ச்சின் வடிவமைப்பு விவரங்கள் ப்ரொடக்‌ஷன் காரில் இருப்பதைப் போலவே காணப்பட்டாலும், ஸ்கெட்ச் அதைச் சற்று கூர்மையாகக் காட்டுகிறது.

     

    2023 Hyundai Verna Sketch

    2023 ஹூண்டாய் வெர்னாவில் இந்த மாற்றம் எப்படி இருக்கக் கூடும் ? எளிமையாகச் சொல்வதென்றால், கார் தயாரிப்பாளரால் டீசரில் காட்டப்பட்ட  வடிவமைப்பு வரைபடம் உண்மையான செடான் எப்படி இருக்கும் என்பதற்கான மிக நெருக்கமான எடுத்துக்க்காட்டாகும், ஆனால் உற்பத்தி மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்றபடி கார் இருக்க வேண்டும் என்பதற்காக சில மாற்றங்கள் இருக்கலாம். எதிர்பார்க்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் என்பது சக்கரங்களின் அளவு மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் தான் இருக்கப்போகிறது. ஆனால் அது செடான் எப்படி சாலையில் தோற்றமளிக்கப்போகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.  

    மேலும் படிக்க: புதிய ஹூண்டாய் வெர்னா அதன் வகையில் மிகவும் சக்திவாய்ந்த செடானாக இருக்கலாம்!

    புதிய ஹூண்டாய் வெர்னாவிற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் இது மார்ச் 21 அன்று லாஞ்ச் செய்யப்படுகிறது. காம்பாக்ட் செடான் விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் விர்டஸ், மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டிக்கு போட்டியாக இது இருக்கும்.

    was this article helpful ?

    Write your Comment on Hyundai வெர்னா

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் சேடன் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience