• English
  • Login / Register

ஐந்தாவது தலைமுறை புதிய ஹோண்டா சிட்டிக்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமா?

published on பிப்ரவரி 20, 2020 12:34 pm by sonny for ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன்

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தற்போது வெளியே செல்லும் நான்காவது தலைமுறை காம்பாக்ட் செடான் இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது 

Should You Wait For The New Fifth-gen Honda City?

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஐந்தாவது தலைமுறை ஹோண்டா சிட்டி இந்தியாவுக்கு வர உள்ளது. இருப்பினும், நீங்கள் தற்போதைய தலைமுறை சிட்டியின் ரசிகராக இருந்தால், அது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்தில் எளிதாகக் கிடைக்கும். மேலும், நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, குறிப்பாக நீங்கள் ஒரு பிஎஸ்4 டீசல் வகையை பொருட்படுத்தவில்லை எனில், 

நடப்பு சலுகைகளிலிருந்து சில தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம். 

 

தற்போதைய-தலைமுறை சிட்டியானது 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் வழங்கப்படுகிறது, இது 119 பிபிஎஸ்/145 என்எம் 5-வேக கைமுறையில் சிவிடி தானியங்கி விருப்பத்துடன் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய தலைமுறை சிட்டி பிஎஸ் 6 அமேஸைப் போலவே 100 பிபிஎஸ்/200 என்எம் ஐ உற்பத்தி செய்யும் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தின் பிஎஸ்6 மாதிரியை பெறும்போது அதே பெட்ரோல் இயந்திரம்  இடம்பெறும்.

 

புதிய ஐந்தாவது-தலைமுறை சிட்டிக்காகக் காத்திருப்பதை ஒப்பிடுகையில், வெளிச்செல்லும் நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டியை வாங்குவதன் நன்மைகளைக் குறித்துப் பார்க்கலாம்.

நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டி: நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை, நடப்பு தள்ளுபடிகள், நீண்ட கால பயன்பாட்டிற்காக வாங்கலாம்

Should You Wait For The New Fifth-gen Honda City?

ஹோண்டா சிட்டி கார் காம்பாக்ட் செடான் பிரிவில் வசதி, இடம் மற்றும் நீண்ட நாள் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் முக்கிய இடத்தை வகிப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரிவுக்கு நீங்கள் மேம்படுத்த விரும்பினால், வெளிச்செல்லும் பிஎஸ்6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் கார் ரூபாய் 72,000 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுவதால் இது உங்களுக்கு ஒரு சரியான தருணமாக இருக்கும். இதேபோன்ற சலுகைகள் பழைய சிட்டியின் பிஎஸ்4 டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளிலும் கிடைக்கின்றன.

Should You Wait For The New Fifth-gen Honda City?

நீங்கள் ஒரு காரை 5 வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்த விரும்பினால் அல்லது அதிக எண்ணிக்கையிலான கிலோமீட்டர் தூரம் பயணிக்க  விரும்பினால் அல்லது ஒரு ஓட்டுனரைக் கொண்டு இயக்கக்கூடிய வாகனமாகப் பயன்படுத்த விரும்பினால், நான்காவது தலைமுறை ஹோண்டா சிட்டியை தள்ளுபடி விலையில் வாங்குவது உங்களுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும். இதில் தானியங்கி ஏசி, வேகக்கட்டுப்பாடு அமைப்பு, கேட்பொலி பொருத்தப்பட்ட திசைதிருப்பி கட்டுப்பாடுகள் மற்றும் பின்புற ஏசி காற்றோட்ட அமைப்பு ஆகியவை தரமானதாக இருக்கிறது. 6 காற்று பைகள், 7 அங்குல  தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு அண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, சூரியஓளி திறப்பு மேற்கூரை  மற்றும் எல்இடி முகப்பு விளக்குகள் ஆகியவை சிறந்த முறையில் இந்த வகைகளில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Should You Wait For The New Fifth-gen Honda City?

ஹோண்டா சிட்டி 2020: சமீபத்திய தொழில்நுட்பம், அழகான தோற்றம், எரிபொருள் திறன் கொண்ட பெட்ரோல் மற்றும் முதல் டீசல் தானியங்கி கார் ஆகும்.

2020 Honda City Unveiled, India Launch Expected In Mid-2020

ஹோண்டா தனது ஐந்தாவது தலைமுறை சிட்டியை மறுவடிவமைப்பு செய்துள்ளது. இது இரண்டாவது தலைமுறை அமேஸைப் போன்ற புதிய வடிவத்துடன் முன்பைவிட அழகான வடிவத்தில் இருக்கிறது. புதிய சிட்டியானது, அதன் தாய்லாந்து-சிறப்பம்சத்தில், சற்று குறைவான சக்கர அமைப்பைக் கொண்டிருந்தாலும், தற்போதைய மாதிரியைவிட நீளமாகவும் அகலமாகவும் உள்ளது. இதில் புதிய, மேம்படுத்தப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகளைப் பெறுகிறது. புதிய சிட்டியானது இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்துடன் கூடிய 8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பைக் கொண்டிருக்கும், இதன் மூலம் நீங்கள் தொலைதூர இயக்கி மூலமாக முகப்பு அறையை முன்பே குளிர்விக்கவும், மற்றவற்றுடன் பூட்ட-திறக்கவும் முடியும். ஹோண்டா புதிய முகப்பு அறையில் அதிக பிரீமியம் தோற்றத்தை அளித்துள்ளது. நீங்கள் அதை விரும்பினால், உங்களுக்கு இது ஒரு டிஜிட்டல் கருவி தொகுப்பை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 Honda City Unveiled, India Launch Expected In Mid-2020

இயந்திரங்களைப் பொறுத்தவரை, 2020 ஹோண்டா சிட்டி தற்போதைய மாதிரியின் அதே பெட்ரோல் ஆற்றல் இயக்கிகளைக் கொண்டிருக்கும். இருப்பினும், தற்போதுள்ள பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரம் புதிய 6-வேகக் கைமுறை (இப்போது 5-வேகக் கைமுறையுடன் வழங்கப்படுகிறது) மற்றும் மிதமான-கலப்பின நுட்பம்  ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே எரிபொருள் செயல்திறன் தற்போது லிட்டருக்கு 17 கிமீ செல்லும்.

பிஎஸ்6 டீசல் இயந்திரம் சிவிடி தானியங்கி விருப்பத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நீங்கள் டீசல்-ஏடி ஹோண்டா சிட்டிக்காகக் காத்திருந்தால், ஏப்ரல் 2020 க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் காம்பாக்ட் செடானின் ஐந்தாம் தலைமுறையுடன் காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

தொடர்புடையது: ஹோண்டா சிட்டி 2020 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று இந்தியாவில் அறிமுகமாகும். 

Should You Wait For The New Fifth-gen Honda City?

புதிய சிட்டி தற்போதைய-தலைமுறை மாதிரியானது குறிப்பாக அதன் நேர்த்திக்காக விலை அதிகமானதாக நிர்ணயம் செய்யப்படும். ஹோண்டாவின்  வெளிச்செல்லும் நான்காவது தலைமுறை மாதிரிக்கு ரூபாய் 9.91 லட்சம் முதல் ரூபாய் 14.31 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், இந்த பிரிவில் ஹோண்டா வழங்க வேண்டிய சமீபகால மாதிரியை நீங்கள் விரும்பினால், அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் அதை விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருவாயைப் பெறலாம் எனில், 2020 சிட்டிக்காக காத்திருப்பு மற்றும் கூடுதல் செலவுக்கு மதிப்புள்ளது.

மேலும் படிக்க: சிட்டி டீசல் 

was this article helpful ?

Write your Comment on Honda சிட்டி 4 வது ஜெனரேஷன்

explore மேலும் on ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஸ்கோடா ஆக்டிவா vrs
    ஸ்கோடா ஆக்டிவா vrs
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூல, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஆகஸ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டைகர் 2025
    டாடா டைகர் 2025
    Rs.6.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஸ்கோடா சூப்பர்ப் 2025
    ஸ்கோடா சூப்பர்ப் 2025
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மெர்சிடீஸ் eqe செடான்
    மெர்சிடீஸ் eqe செடான்
    Rs.1.20 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience