• English
  • Login / Register

ஹோண்டா சிட்டி 2020 மார்ச் 16 அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது

ஹோண்டா சிட்டி 2020-2023 க்காக பிப்ரவரி 14, 2020 03:40 pm அன்று sonny ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 58 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய தலைமுறை சிட்டி ஏப்ரல் 2020 க்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது

  •  ஐந்தாவது தலைமுறையான சிட்டி 2019 நவம்பரில் தாய்லாந்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது.

  • அதன் புதிய வடிவமைப்பு தற்போதைய மாதிரியைக் காட்டிலும் அதிக விலை மற்றும் சிறந்த வேகம் உடையதாகக் காணப்படுகிறது.

  • புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் இந்தியாவில் வழங்கப்படாது.

  • இந்திய-சிறப்பம்சம் பொருந்திய சிட்டி அதே 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களை பிஎஸ்6 அமைப்பில் பெற உள்ளது.

  • கார்டுகளில் ஒரு பெட்ரோல்-லேசான கலப்பின முறையும் உள்ளது. டீசல்-சிவிடி அமைப்பும் இடம் பெறுகிறது.

Honda City 2020 To Make India Debut on March 16

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டியானது 2019 நவம்பரில் தாய்லாந்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது எங்கள் சாலைகளில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது மற்றும் மார்ச் 16 அன்று இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 4440 மிமீ நீளமும் 1695 மிமீ அகலமும் கொண்ட தற்போதைய இந்திய-சிறப்பம்சம் பொருந்திய சிட்டியைக் காட்டிலும் தாய்லாந்து-சிறப்பம்சம் பொருந்திய ஐந்தாவது தலைமுறை சிட்டி 113 மிமீ நீளமும் 53 மிமீ அகலமும் கொண்டது. எனினும், தாய்லாந்து மாதிரியில் காணப்படும் 2589 மிமீ நீளமான சக்கர அமைவு இந்தியாவில் விற்கப்படும் தற்போதைய ஹோண்டா சிட்டியை காட்டிலும் 11 மிமீ குறைவாகத் தான் இருக்கின்றது. தாய்லாந்து மாதிரியுடன் ஒப்பிடும்போது இந்திய-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியில் சில வேறுபாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும், இவ்விரண்டின் அமைப்புகளும் அதிகமாக அல்லது குறைவாக ஒத்துக் காணப்படும்.

Honda City 2020 To Make India Debut on March 16

பாணியைப் பொறுத்தவரையில், புதிய சிட்டி ஹோண்டாவின் பிற புதிய தயாரிப்புகளுடன் ஒத்துப்போகிறது. இது ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்ட அமேஸை காட்டிலும் அதிகளவு சிறந்ததாக உள்ளது போல் தெரிகிறது. ஹோண்டா செடான் ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்கள் அம்சம் பொருந்திய புதிய எல்இடி முகப்புவிளக்குகளுக்கு இடையில் குரோம் ஸ்லாப்பை தொடர்ந்து கொண்டுள்ளது. புதிய-தலைமுறை சிட்டி, அதன் பின்புற அமைப்பி‌ல் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றத்தை பெற்றுள்ளது, இது தற்போதைய மாதிரியுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் வளைவுகளைக் கொண்டுள்ளது. இது மிகச்சிறந்த தோற்றத்திற்காக புதிய எல்இடியாலான பின்புற விளக்குகளைப் பெறுகிறது, அதே நேரத்தில் இதன் சிறந்த பின்புற மோதுகைத் தாங்கியானது அதன் அழகாகத் தோற்றத்தை அதிகரிக்கிறது. உண்மையில், புதிய இந்திய-சிறப்பம்சம் பொருந்திய சிட்டியின் சிறந்த வகை தாய்லாந்து- சிறப்பம்சம் பொருந்திய சிட்டியின் ஆர்எஸ் வகைக்கு ஒதுக்கப்பட்ட சில சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு கூறுகளைப் பெறலாம்.

2020 Honda City Won’t Get The 122PS Turbo Petrol In India

ஹோண்டாவின் புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் இதில் வழங்கப்படாது, ஏனெனில் புதிய சிட்டி தற்போதைய மாதிரியின் அதே பிஎஸ் 6 இணக்கமான 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் 1.5-லிட்டர் டீசல் இயந்திரம் புதிய சிட்டியுடன் அதன் பிஎஸ் 6 அமைப்பில் வழங்கப்படும். இது முதல் முறையாக டீசல்-சிவிடி தானியங்கி முறை விருப்பத்தையும் பெறும். ஹோண்டா 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிட்டியின் பெட்ரோல்-கலப்பின வகையை அறிமுகப்படுத்தலாம்.

 புதிய ஹோண்டா சிட்டி புதிய முகப்பு பெட்டி தளவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், தாய்லாந்து-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியில் காணப்பட்ட அதே தளவமைப்பை இது கொண்டிருக்காது, அதாவது இந்த அமைப்பில், மையத்தில் ஏசி காற்றோட்ட அமைப்பும்,  ஒளிபரப்பு அமைப்பும் இருக்கும். இணைய அணுகல் தொழில்நுட்பம் மற்றும் காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள் போன்ற பிற கூடுதலான சிறப்பம்சங்களுடன் மாற்றம் செய்யப்பட்ட காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பும், அதே 8.0-அங்குல தொடுதிரை காட்சியும் இதில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 Honda City Unveiled, India Launch Expected In Mid-2020

ஏப்ரல் 2020 க்குள் ஹோண்டா புதிய தலைமுறை சிட்டி இந்தியாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது ரூபாய் 9.91 லட்சத்திலிருந்து ரூபாய் 14.31 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம், டெல்லி) விற்கப்படும் தற்போதைய மாதிரியைக் காட்டிலும் அதிகளவு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிட்டியானது ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரிஸ், மாருதி சுசுகி சியாஸ், வோக்ஸ்வாகன் வென்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகியவற்றுடன் தொடர்ந்து போட்டியாக இருக்கும். 

 மேலும் படிக்க: ஹோண்டா சிட்டி டீசல்

was this article helpful ?

Write your Comment on Honda சிட்டி 2020-2023

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience