S க்ராஸ் பந்தயத்தில் இறங்குகிறது: ஹுண்டாய் கிரேட்டா, ரினால்ட் டஸ்டர் மற்றும் ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்
published on ஆகஸ்ட் 07, 2015 05:25 pm by அபிஜித் for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020
- 20 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
இறுதியாக, மாருதியின் மிகவும் எதிர்பார்த்த s க்ராஸ் இந்திய சந்தையில், டெல்லி ஷோரூம் விலையாக ரூபாய் 8.34 லட்சத்திலிருந்து 13.74 லட்சம் வரை நிர்ணயித்து, அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த விலை ஹுண்டாய் கிரேட்டா மற்றும் ரினால்ட் டஸ்ட்டெரின் விலையை ஒப்பிடும் போது குறைவாகவும், அவர்களுக்கு போட்டியாகவும் உள்ளது. ஆனால் ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் விலையை கருத்தில் கொள்ளும் போது, இது சற்று அதிகமாக உள்ளது. விலை என்பது, நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. எனவே, மேலும் பல அம்சங்களை ஒப்பிட்டு முழுமையான தகவலை இங்கே கொடுத்திருக்கிறோம்.
மாருதியின் க்ராஸ் ஓவர் அதன் போட்டியாளர்களை எப்படி எதிர் கொள்கிறது என்று இங்கே பார்ப்போம்.
விலைப் பட்டியல்
அளவுகள்:
கச்சிதமான SUV ரக கார்களைப் பற்றி பேசும்போது, அதிகமான கொள்ளளவு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும். S க்ராஸ் நிச்சயமாக இதில் தேறிவிடும், ஏனெனில், க்ராஸ் ஓவர் வகையை விரும்புபவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இந்த கார் பெரியதாக இருக்கிறது. கிரேட்டாவை விட 30 எம்எம் பெரிதாகவும், டஸ்டெரை விட 15 mm மட்டுமே சிறிதாக இருக்கிறது. எக்கோ ஸ்போர்ட்டோ இவை அனைத்தையும் விட சிறியதாக 4 மீட்டர் அளவிற்கும் கீழாக இருக்கிறது. ஆனால், ஃபோர்ட்டின் இந்த காரின் அளவு, அதிகப்படியான வரியிலிருந்து தப்பிக்க வைக்கிறது. ஆனால், இத்தகைய மதிப்பான அம்சம் மற்ற 3 வகை கார்களிலிலும் இல்லை என்பதே உண்மை.
மேலும், S க்ராஸின் சக்கர அகலம் எக்கோ ஸ்போர்ட் மற்றும் கிரேட்டவை விட பெரிதாக உள்ளதால், காரின் உட்புறத்தில் இடம் அதிகமாக கிடைக்கிறது.
மேலே கொடுக்கப்பட்ட அளவுகளைப் பார்க்கும் போது, S க்ராஸ் பெரியதாக இருந்தாலும், கிரேட்டா, எக்கோ ஸ்போர்ட் மற்றும் டஸ்டரின் கம்பீரமான SUV போன்ற தோற்றம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
உபகரணங்கள்
மாருதி S க்ராஸ் பல்வேறு விதமான அமைப்புகளை கொண்டிருக்கிறது. அவற்றில், தொடு திரை (டச் ஸ்கிரீன்) மல்டிமீடியா, பயண வழிகாட்டும் அமைப்பு (நேவிகேஷன் சிஸ்டம்), தானியங்கி சீதோஷண கட்டுப்பாட்டு சாதனம் (ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்), பின்புறமாக நிறுத்த உதவும் நிழல் பட கருவி (ரியர் பார்க்கிங் காமிரா), இயந்திரத்தை இயக்க / நிறுத்த உதவும் விசை பொத்தான், கையடக்கமாக சக்கர இயக்கியில் (ஸ்டியரிங்) பொருத்தப்பட்ட இயக்க வசதிகள் (ஸ்டியரிங் மவுண்ட்டெட் கண்ட்ரோல்), மிருதுவான தோலினால் ஆன இருக்கைககள், அழகிய கருமை நிற உட்புற தோற்றம் மற்றும் சீரான வேக கட்டுப்பட்டு சாதனம் ( க்ரூஸ் கண்ட்ரோல்) போன்றவை பயணத்தை இனிமையாகவும் எளிமையாகவும் ஆக்குகிறது. S க்ராஸின் வெளிப்புறமிருந்து பார்க்கும் போது, பளீரென்று பிரதிபலிக்கும் DRL ல்லுடன் கூடிய முகப்பு விளக்குகள் இதன் நிலையான அம்சமாக கருதப்படுகிறது.
மாருதி சுசூக்கி S க்ராஸின் தனித்துவமான விற்பனை உத்திகள் - USP
- கிரேட்டாவைவிட குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கிறது
- அருமையான 320 Nm முறுக்கு விசையைத் தரும் டீசல் இயந்திரம், கிரேட்டா காரை விட 60 Nm முறுக்கு விசையை அதிகமாக கொடுக்கிறது.
- வரும் வருடங்களில், UK ல் உள்ளது போல, 1.6 லிட்டர் டீசல் இயந்திர ரகத்தில், சுசூக்கியின் TCSS (இரட்டை கிளட்ச் AT வசதி) வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உலகத்தரம் வாய்ந்த ஃபியட்டின் 1.6 லிட்டர் மல்டி ஜெட் S க்ராஸில், வேறு எவரும் பயன்படுத்துவதற்கு முன்பாகவே பொருத்தப்பட்டுள்ளது. (ஃபியட் நிறுவனம் கூட இன்று வரை இந்த வசதியை தனது வாகனங்களுக்கு பொறுத்தவில்லை).
- தற்போது உள்ள க்ராஸ் ஓவர் ரகத்தில் உள்ள அதிக எரி சக்தியை உபயோகப்படுத்தும் கார்களைப் போல இல்லாமல், மிகவும் அதிகமான எரிபொருள் சிக்கனமாக, 23.65 km/l திறனை தருகிறது.
ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்டின் தனித்துவமான விற்பனை உத்திகள் - USP
- சப் 4m ரக கார்களில் இது மிகவும் மலிவானது.
- ஃபோர்டின் கைபேசி பயன்பாட்டுடன் (மொபைல் ஆப்) இணைக்கக் கூடிய குரல் மூலம் இயங்கும் ஃபோர்டின் SYNC ஆடியோ சிஸ்டம்
- 1.5 லிட்டர் TiVCT பெட்ரோல் ரகத்தில், 6 வேக தானியங்கி இரட்டை கிளட்ச்.
- மிகவும் சக்தி வாய்ந்த பெட்ரோல் ரக 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் 125 PS / 170 Nm
- பாதுகாப்பை மேம்படுத்த பக்கவாட்டிலும் சேர்த்து மொத்தமாக 6 பாதுக்காப்பு காற்றுப் பைகள்
ரினால்ட் டஸ்டரின் தனித்துவமான விற்பனை உத்திகள் - USP
- சீரான மின்னணு கட்டுபாடு வசதி (எலெக்டிரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல்) மற்றும் வழுக்கி விழாமல் இருப்பதற்கான வசதியுடன் கூடிய AWD
- ஆஜானுபாகுவான SUV யின் தோற்றம்
- AWD வகைகளில் 19.72 kmpl சான்றளிக்கப்பட்ட செயல்திறன்
- டீசல் இயந்திர வகைகளில், 6 வேக ஆளியக்கும் வசதி
- 7 அங்குல மீடியா NAV இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பும், பயண வழிகாட்டும் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளன
ஹுண்டாய் கிரேட்டவின் தனித்துவமான விற்பனை உத்திகள் - USP
- சிறிய சான்டா ஃபி போல தோற்றம்
- சக்தி வாய்ந்த 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள்
- பெரிய தொடுதிரை இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்
- LED DRL ல்லுடன் கூடிய பளீரென பிரதிபலிக்கும் முகப்பு விளக்குகள்
- முதல் முறையாக தானியங்கி டீசல் 6 வேக AT இஞ்ஜின்.
இயந்திரம்
இதன் வகைகளில் பார்க்கும் போது, S க்ராஸ் 120 PS சக்தியுடைய 1.6 லிட்டர் DDiS 320 யுடன், மிகச் சிறந்த 320 Nm முறுக்கு விசையைப் பெற்றுள்ளது. இது தவிர அருமையான 1.3 DDiS 200 ரக இயந்திரத்தை, இத்தகைய எளிய விலை கொண்ட கார்களில் கிடைக்காததை, தன்னிடத்தே கொண்டுள்ளது. ஆனால், பெட்ரோல் இயந்திர வகையை மாருதி S கிரஸ்சில் தேடினால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும், ஏனெனில் S க்ராஸில், பெட்ரோல் வகை என்பதே இல்லை.
மற்ற 4 வகை கார்களில் சாலைகளில் ஓடும் திறனை ஒப்பிடும் போது, ரினால்ட் டஸ்டரே 210 mm தரையிலிருந்து மேலெழுந்தும் (கிரவுண்ட் க்ளியரன்ஸ்), அனைத்து சக்கரங்களுடன் இயங்கும் AWD அமைப்புடன், முதன்மை பெற்று விளங்குகிறது. ஹுண்டாய்யின் கிரேட்டவை பற்றி குறிப்பிடும் போது, அதன் ஒயிலான நவீனமான வைரம் போன்று வடிவமைக்கப்பட்ட 17 அங்குல அலாய் சக்கரங்களை நிச்சயமாக குறிப்பிட்டே ஆகவேண்டும். ஃபோர்டின் எக்கோ ஸ்போர்ட் பல்வேறு விதமான அருமையான அம்சங்களை உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கொண்டுள்ளது. எனவே, இது நாம் கொடுக்கும் விலைக்கு சரியான தரத்துடன் உள்ளது.
0 out of 0 found this helpful