• English
  • Login / Register

S க்ராஸ் – மாருதி நிறுவனத்தை, எப்போதும் மலிவு விலை கார்களையே தயாரிக்கும் என்ற மாயையிலிருந்து மீட்குமா?

published on ஆகஸ்ட் 06, 2015 10:10 am by அபிஜித் for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய செய்தி : 05 August, 2015, மாருதி நிறுவனம் முதல் முதலாக க்ராஸ் ஓவர் பிரிவில் தனது S க்ராஸ் காரை இந்திய சந்தையில் ரூ 8.34 லட்சத்திற்கு நியூ டெல்லி ஷோ ரூம் விலையாக இன்று அறிமுகபடுத்தியுள்ளது. S க்ராஸ் அறிமுக விவரங்கள் அறிய.

மாருதி நிறுவனத்தின் கார்கள், நவீன இந்திய வாகன உற்பத்தித் துறையின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்து, இந்திய பயணிகள் கார் பிரிவில் முன்னணி நிலையில் உள்ளன. ஆரம்ப நிலையில், மாருதி 800 அறிமுகப்படுத்தப்பட்டு, மிகவும் அதிரடியான சரித்திர வெற்றியை அடைந்தது. அதன் பின், ஜென் கார்கள் சிறந்த சிறிய வகை கார்களின் (ஹாட்ச் பேக்) பிரிவில் வெளியிடப்பட்டு, இந்திய மக்களின் மனதை கொள்ளை கொண்டது. மேலும், மாருதியின் தொடர்ச்சியான வெற்றி ஆல்டோ, வேகன் R மற்றும் பல மாடல்களின் மூலம் மீண்டும் மீண்டும் பறைசாற்றப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நம்பிக்கையை வாடிக்கையாளர்களின் மனதில் வளர்க்கவும், தனது விற்பனை மற்றும் சேவை கட்டமைப்பை விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும், வெற்றிகரமான மக்களின் மனதில் வேரூன்றி நிற்கும் இந்த கார்கள் பல வகையில் உதவி செய்கின்றன. மாருதி நிறுவனம், எப்போதெல்லாம் உயர்தர கார்களை தயாரிக்க முயன்றாலும், ஒரு சிறிய கார் தயாரிப்பாளர் என்ற மாயையே அதன் பெயரை மிகவும் பாதித்துள்ளது.

கணக்கன் கணக்கறிவான் ஆனால் தன் கணக்கை தான் அறியான் என்பது போல, மாருதி நிறுவனம் உருவாக்கிய அதன் பிம்பம் அதன் பிற வகைக் கார்களை சந்தைப் படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

உலகத்தர வரிசையில் மிகவும் புகழ் பெற்ற கார்கள் என்று போற்றப்பட்ட கார்கள் கூட, இந்தியாவில் தோல்வியுற்றன. பலேனோ போன்ற கார்கள் இந்திய பந்தய வீரர்களிடம் நன்மதிப்பைப் பெற்றாலும், வணிக ரீதியாக தோல்வியையே தழுவியது. விட்டாரா, வெர்ஸா மற்றும் கிசாஷி போன்ற கார்களுக்கும் இதே கதிதான் ஆனது. இந்த தோல்விகளைப் பார்க்கும்போது, இந்தியர்களால் மாருதி நிறுவனத்தை உயர்தரமான கார்களின் தயாரிப்பாளர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மையில், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய உயர் தர காரையோ அல்லது அதிக விலை காரையோ வெளியிடும்போதும், அது தோல்வியையே அடைந்திருக்கிறது.

காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் ஒரு நாள் பலன் அடைவான் என்பது போல, மாருதியின் SX4 அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இந்த மந்த நிலை மாறத் தொடங்கியது, ஏனெனில், அதன் பருமனான உயரமான தோற்றம் பலதரபட்ட மக்களை ஈர்த்தது. ஆனால், இந்த வெற்றி முழுமையானது என்று கூற முடியாது. டீசல் இயந்திரம் இல்லாததாலும், ஹோண்டா சிட்டி கார் போன்ற நவீன அணுகுமுறை இல்லாததாலும், இந்த கார் இந்திய வாகனச் சந்தையில், ஓரளவு வெற்றியை மட்டுமே பெற்றது.

மேலே குறிப்பிட்ட கார்களோடு ஒப்பிடும்போது, சியாஸ் காரின் வெற்றியானது இன்றுவரை ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இதன் விற்பனை இலக்கங்களும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது. அநேகமாக, இத்தகைய கார்கள் மூலம், மாருதி நிறுவனம் எப்பொழுதும் மலிவு விலை கார்களையே உற்பத்தி செய்யும் என்ற வலுவான கருத்திலிருந்து மெதுவாக வெளியே வர ஆரம்பித்தது.

குறிப்பாக, நெக்ஸா என்ற உயர்தர விநியோகிஸ்தர்கள் அறிமுகமும், அதன் மூலம் முதன் முறையாக விற்பனை செய்யப்படவிருக்கிற S கிராஸும் மாருதிக்கு புதிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாருதியின் இந்த உயர்தர விற்பனைக் கூடத்தை, விருந்தோம்பல் துறை மற்றும் விமான போக்குவரத்து துறையில் உள்ள கைதேர்ந்த நிபுணர்கள் கையாள போவதால், மக்கள் மனதில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு தோன்றி உள்ளது.

நெக்ஸாவில் உள்ள இத்தகைய நிபுணர்கள் வாடிக்கையாளர்களிடம் உறவுகளைப் பலப்படுத்துவதற்காக நல்லுறவு மேலாளர்களாக பதவி ஏற்கின்றனர். கார்களின் விற்பனைக்குப் பின் வாடிக்கையாளர்களை தனிப்பட்ட முறையில் கவனித்து திருப்திபடுத்துவதே இவர்கள் முக்கிய நோக்கமாகும். மாருதி விற்பனையாளர்களின் ஒரு நாள் கார் விற்பனையைப் பொறுத்து, இம்முறை அமுலுக்கு வரும். எனவே, நேருக்கு நேர் அனுபவம் என்ற கோட்பாடு மறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

எனினும், மாருதி நெக்ஸா மூலம் வரும் அனுபவம், ஹுண்டாய் அல்லது ஹோண்டா நிறுவனத்திற்கு இணையாகாது. ஏனெனில், அவர்களின் விற்பனைக் கூடத்தில் முதலில் இருந்தே பல விதமான உயர்தர கார்கள் எப்போதும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. எனவே, அவர்களது விற்பனையாளர்களிடம் எத்தகைய கடுமையான சூழ்நிலையையும் திறமையாக சமாளிக்கும் பக்குவம் உள்ளது.

நாம், இப்போது நெக்ஸாவின் கதையை விட்டு S க்ராஸ்ஸிற்கு வருவோம். இதன் உட்புறத்தில், மிக அதிகமான இட வசதியும், மென்மையான உயர்தர தோலினால் ஆன இருக்கைகளும், அழகிய விதானமும், தரமான முகப்பு பெட்டியும் (டாஷ் போர்டு), பயண வழிகாட்டி கருவியுடன் இணைந்த இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, சீர் வேக கட்டுப்பாட்டு வசதி (க்ரூயிஸ் கண்ட்ரோல்) போன்ற அனைத்து அமைப்புகளும் இந்த காரில் இடம் பெறுகின்றன.

S க்ராஸின் உட்பகுதி முழுவதும் கருமை நிறத்திலும், ஆங்காங்கே வெள்ளி நிறத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு கம்பீரமாக உள்ளது. ஆனால், இந்த கருமை நிற வேலைப்பாடு அனைத்து விதமான வாடிக்கையாளர்களையும் கவரும் என்று சொல்ல முடியாது. அதுவும், நமது வெப்ப மண்டல சீதோஷண நிலைக்கு கருப்பு நிறம் மேலும் எரிச்சலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

எந்திரவியல் கண்ணோட்டாத்தில் பார்க்கும் போது, S க்ராஸின் சிறப்பான 1.6 லிட்டர் DDiS 320 இயந்திரம் மிகவும் அதிகமான முறுக்கு விசையை கொடுக்கவல்லது. இதன் செயல்திறன் அனைவரையும் கவர்ந்து இழுக்கக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. S க்ராஸின் முகப்பையும் வடிவமைப்பையும் பார்க்கும் போது, SUV போன்ற கம்பீரமான கார்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு, இது மிகவும் ஏமாற்றத்தை தரலாம், ஆனால், பேராற்றல் வாய்ந்த, செயல்திறன் மிக்க காரை எதிர்பார்க்கும் மக்களை S க்ராஸின் அமைப்பு உறுதியாக திருப்தி படுத்தும் என தெரிகிறது.

S க்ராஸின் போட்டி என்று பார்க்கும் போது ஹுண்டாய் கிரேட்டா மற்றும் ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டும் மிகவும் நேர்த்தியாகவும்,zமிகையானSUV வகையை ஒத்தும் உள்ளன. இது தவிர, ரெனோல்ட் டஸ்டர் கார்AWD வசதியுடன் இருப்பதால், அது சாலைகள் இல்லாத கடினமான பகுதிகளிலும் கூட அசாத்தியமாக பயணம் செய்யவல்லது. ஆனால் இந்த பிரிவில் உள்ள மற்ற கார்கள் இவ்வாறு செயல்பட வாய்ப்பு இல்லை என்றே கூறலாம்.

இறுதியான முடிவுரையாக, மாருதி நிறுவனத்தில் Sக்ராஸ் என்ற அழகிய உலக தரமான கார் உள்ளது, அது உயர்தர உட்புற தோற்றதையும், 1.6 லிட்டர் DdiS320 இஞ்ஜினுடன் அசாத்தியமான அம்ஸங்களையும், பிரமாண்டமான தோற்றதையும் கொண்டுள்ளது. ஆகையால் சிறிய ரக கார்களை மட்டுமே மாருதி நிறுவனம் தயாரிக்க வல்லது என்ற எதிர்மறை பிரம்மைகளை இந்த வாகனம் உடைத்தெரிந்துள்ளது.

மேலும், மாருதி நிறுவனம் புத்திசாலித்தனமாக நெக்ஸா என்ற அதி நவீன விற்பனை கூடத்தை கருவியாக்கி, விலையை நேர்த்தியாக நியமித்து, வாடிக்கையாளர்களை தன் வசம் வசீகரபடுத்தி இழுக்க முடியும் என்று நம்புகிறது. இது மட்டுமல்லாது, புதிய வாகனங்கள் அனைத்தும் சீராக தொடர்ந்து சரியான நேரத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று உறுதியை இந்த நிறுவனம் எடுக்க வேண்டும். அதாவது, S க்ராஸில் தானியங்கி செலுத்தி (ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்) அல்லது AWD வசதியை இணைத்து அல்லது புதுப்பித்து, இந்த காரின் தரத்தையும், வாழ் நாளையும், சந்தையில் இதன் நிலையையும் உறுதியாக்க முடியும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti எஸ்-கிராஸ் 2017-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience