சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ரெனால்ட் ட்ரைபர் பிஎஸ்6 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது விலையானது ரூபாய் 4.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

published on ஜனவரி 31, 2020 03:16 pm by sonny for ரெனால்ட் டிரிபர்

அறிமுக-அம்சங்களான ஆர்எக்ஸ்இ தவிர அனைத்து வகைகளும் ரூபாய் 15,000 விலைக்குக் கிடைக்கும்

  • ட்ரைபரின் 1.0-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் பிஎஸ்6 மாசுஉமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க புதுப்பிக்கப்பட்டுள்ளது.

  • புதுப்பிப்புகள் காரணமாக அடிப்படை வகைக்கு ரூபாய் 4,000 மற்றும் மற்ற அனைத்து வகைகளுக்கும் ரூபாய் 15,000 விலையானது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

  • 2020 ஆம் ஆண்டில் ரெனால்ட்டின் கிராஸ்ஓவர் எம்பிவி மிகவும் ஆற்றல் மிக்க 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்தைப் பின்னர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தற்போது இதன் விலை ரூபாய் 4.99 லட்சத்திலிருந்து ரூபாய் 6.78 லட்சம் வரை இருக்கும் (எக்ஸ்ஷோரூம் டெல்லி).

ரெனால்ட் ட்ரைபர் 1.0 -லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் அலகு உடைய ஒரே ஒரு இயந்திர விருப்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரமானது தற்போது பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்க புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது ட்ரைபரின் விலையில் சிறிது அதிகமாக்கியுள்ளது.

பிஎஸ்6-இணக்கமான ரெனால்ட் ட்ரைபரின் விலையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது(எக்ஸ்-ஷோரூம் டெல்லி):

வகை

பி‌எஸ்6விலைகள்

பி‌எஸ்4 அறிமுக விலைகள்

மாறுபாடு

ஆர்‌எக்ஸ்‌இ

ரூபாய்4.99 லட்சம்

ரூபாய் 4.95 லட்சம்

ரூபாய் 4,000

ஆர்‌எக்ஸ்‌எல்

ரூபாய் 5.74 லட்சம்

ரூபாய் 5.59 லட்சம்

ரூபாய் 15,000

ஆர்‌எக்ஸ்‌டி

ரூபாய் 6.24 லட்சம்

ரூபாய் 6.09 லட்சம்

ரூபாய் 15,000

ஆர்‌எக்ஸ்இசட்

ரூபாய் 6.78 லட்சம்

ரூபாய் 6.63 லட்சம்

ரூபாய் 15,000

அறிமுக-விலை வகைகளைத் தவிர, பிஎஸ்6 புதுப்பிப்பு, ட்ரைபர் விலையை ரூபாய் 15,000 ஆக உயர்த்தியுள்ளது.

பிஎஸ் 4 அமைப்பில், ட்ரைபரின் பெட்ரோல் இயந்திரம் 72 பிஎஸ் ஆற்றலையும் 96என்எம் முறுக்கு திறனை உற்பத்தி செய்கிறது, அதே சமயத்தில் 5-வேகக் கைமுறை பொருத்தப்பட்டிருந்தது. பிஎஸ் 6 புதுப்பித்தலுடனான செயல்திறனில் எந்த மாற்றங்களும் இல்லை என்று தெரிகிறது. பிஎஸ் 6 புதுப்பித்தலுடன் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிகிறது. ட்ரைபர் 2020 ஆம் ஆண்டில் அதிக ஆற்றல் இயக்கி தொழில்நுட்பம் பொருந்திய விருப்பங்களைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இது 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இயந்திரத்துக்கான ஏஎம்டி விருப்பத்தேர்வு மற்றும் புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்ம் ஆகியவற்றின் இணைப்புடன் அறிமுகமாகும். வரவிருக்கின்ற ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இந்த புதுப்பிப்புகளைக் காணலாம்.

8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான ஏசி காற்றோட்ட அமைப்புகள் மற்றும் 4 காற்றுப்பைகள் போன்ற தனிச்சிறப்புகளுடன் இந்த ட்ரைபர் அளிக்கப்படுகிறது. 7 பயணிகளுக்கான புதுவிதமான இருக்கை அமைப்பே இதன் மாறுபட்ட அம்சங்களாகும்.

மேலும் படிக்க: ரெனால்ட் ட்ரைபர்: மாருதி ஸ்விஃப்ட் போட்டி 7 லிருந்து 5 இருக்கைகள் வரை எப்படி

ட்ரைபர் டாட்சன் ஜிஓ + க்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் மாருதி சுசுகி எர்டிகாவை தவிர இதற்கு நேரடி போட்டிகள் எதுவும் கிடையாது. 5 இருக்கைகள் கொண்ட அமைப்பு என்ற வகையில், அதனுடைய விலைகள் ஹூண்டாய் கிராண்ட்ஐ10 நியோஸ், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ போன்றவற்றுற்கு போட்டியாக இருக்கின்றன.

மேலும் படிக்க: இறுதி விலையில் ட்ரைபர்

s
வெளியிட்டவர்

sonny

  • 39 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ரெனால்ட் டிரிபர்

R
rochak mittal
Jan 27, 2020, 2:51:24 PM

Best car in this price segment

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.44 - 13.73 லட்சம்*
Rs.19.77 - 30.98 லட்சம்*
Rs.10.52 - 19.67 லட்சம்*
Rs.2 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை