ரெனால்ட் ட்ரைபர் பிஎஸ்6 அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது விலையானது ரூபாய் 4.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
published on ஜனவரி 31, 2020 03:16 pm by sonny for ரெனால்ட் டிரிபர்
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
அறிமுக-அம்சங்களான ஆர்எக்ஸ்இ தவிர அனைத்து வகைகளும் ரூபாய் 15,000 விலைக்குக் கிடைக்கும்
-
ட்ரைபரின் 1.0-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் பிஎஸ்6 மாசுஉமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க புதுப்பிக்கப்பட்டுள்ளது.
-
புதுப்பிப்புகள் காரணமாக அடிப்படை வகைக்கு ரூபாய் 4,000 மற்றும் மற்ற அனைத்து வகைகளுக்கும் ரூபாய் 15,000 விலையானது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
-
2020 ஆம் ஆண்டில் ரெனால்ட்டின் கிராஸ்ஓவர் எம்பிவி மிகவும் ஆற்றல் மிக்க 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்தைப் பின்னர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தற்போது இதன் விலை ரூபாய் 4.99 லட்சத்திலிருந்து ரூபாய் 6.78 லட்சம் வரை இருக்கும் (எக்ஸ்ஷோரூம் டெல்லி).
ரெனால்ட் ட்ரைபர் 1.0 -லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் அலகு உடைய ஒரே ஒரு இயந்திர விருப்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரமானது தற்போது பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்க புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது ட்ரைபரின் விலையில் சிறிது அதிகமாக்கியுள்ளது.
பிஎஸ்6-இணக்கமான ரெனால்ட் ட்ரைபரின் விலையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது(எக்ஸ்-ஷோரூம் டெல்லி):
வகை |
பிஎஸ்6விலைகள் |
பிஎஸ்4 அறிமுக விலைகள் |
மாறுபாடு |
ஆர்எக்ஸ்இ |
ரூபாய்4.99 லட்சம் |
ரூபாய் 4.95 லட்சம் |
ரூபாய் 4,000 |
ஆர்எக்ஸ்எல் |
ரூபாய் 5.74 லட்சம் |
ரூபாய் 5.59 லட்சம் |
ரூபாய் 15,000 |
ஆர்எக்ஸ்டி |
ரூபாய் 6.24 லட்சம் |
ரூபாய் 6.09 லட்சம் |
ரூபாய் 15,000 |
ஆர்எக்ஸ்இசட் |
ரூபாய் 6.78 லட்சம் |
ரூபாய் 6.63 லட்சம் |
ரூபாய் 15,000 |
அறிமுக-விலை வகைகளைத் தவிர, பிஎஸ்6 புதுப்பிப்பு, ட்ரைபர் விலையை ரூபாய் 15,000 ஆக உயர்த்தியுள்ளது.
பிஎஸ் 4 அமைப்பில், ட்ரைபரின் பெட்ரோல் இயந்திரம் 72 பிஎஸ் ஆற்றலையும் 96என்எம் முறுக்கு திறனை உற்பத்தி செய்கிறது, அதே சமயத்தில் 5-வேகக் கைமுறை பொருத்தப்பட்டிருந்தது. பிஎஸ் 6 புதுப்பித்தலுடனான செயல்திறனில் எந்த மாற்றங்களும் இல்லை என்று தெரிகிறது. பிஎஸ் 6 புதுப்பித்தலுடன் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிகிறது. ட்ரைபர் 2020 ஆம் ஆண்டில் அதிக ஆற்றல் இயக்கி தொழில்நுட்பம் பொருந்திய விருப்பங்களைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இது 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இயந்திரத்துக்கான ஏஎம்டி விருப்பத்தேர்வு மற்றும் புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்ம் ஆகியவற்றின் இணைப்புடன் அறிமுகமாகும். வரவிருக்கின்ற ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இந்த புதுப்பிப்புகளைக் காணலாம்.
8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான ஏசி காற்றோட்ட அமைப்புகள் மற்றும் 4 காற்றுப்பைகள் போன்ற தனிச்சிறப்புகளுடன் இந்த ட்ரைபர் அளிக்கப்படுகிறது. 7 பயணிகளுக்கான புதுவிதமான இருக்கை அமைப்பே இதன் மாறுபட்ட அம்சங்களாகும்.
மேலும் படிக்க: ரெனால்ட் ட்ரைபர்: மாருதி ஸ்விஃப்ட் போட்டி 7 லிருந்து 5 இருக்கைகள் வரை எப்படி
ட்ரைபர் டாட்சன் ஜிஓ + க்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ளதால் மாருதி சுசுகி எர்டிகாவை தவிர இதற்கு நேரடி போட்டிகள் எதுவும் கிடையாது. 5 இருக்கைகள் கொண்ட அமைப்பு என்ற வகையில், அதனுடைய விலைகள் ஹூண்டாய் கிராண்ட்ஐ10 நியோஸ், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ போன்றவற்றுற்கு போட்டியாக இருக்கின்றன.
மேலும் படிக்க: இறுதி விலையில் ட்ரைபர்