மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய 15,000-க்கும் மேற்பட்ட கார்களை, ரெனால்ட் திரும்ப அழைக்கிறது
published on ஜனவரி 20, 2016 11:17 am by sumit
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாசுப்படுதல் தரக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில், 15,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ரெனால்ட் நிறுவனம் திரும்ப அழைத்து, அதன் என்ஜின்களில் மாற்றம் செய்ய உள்ளதாக, பிரான்ஸ் நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் சிகோலின் ராயல் தெரிவித்துள்ளார். இதே குறைபாடு உள்ள மற்ற தயாரிப்பாளர்களின் பெயர்களை அவர் வெளியிடாமல் மறைத்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை ரெனால்ட் நிறுவனம் மட்டும் மீறவில்லை என்று மறைமுகமாக தெரிவித்தார்.
இது குறித்து ராயல் கூறுகையில், “ரெனால்ட் நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள், அதாவது 15,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்ப அழைத்து, அதிக வெப்பம் மற்றும் 17 டிகிரிக்கும் குறைவான காலநிலை ஆகியவற்றில், அவற்றின் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதித்து, அதை சரி செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் மேற்கூறிய சந்தர்ப்பங்களில் இந்த ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் சீராக இயங்குவதில்லை” என்றார். அவர் கூறுகையில், வாகனத்தை ஓட்டும் சூழ்நிலையின் அடிப்படையில், வெளியே எந்த மாதிரியான தட்பவெப்ப நிலை நிலவினாலும், இந்த சோதனைகள் நடத்தப்பட வேண்டும், என்றார். அவர் மேலும் கூறுகையில், “ரெனால்ட் நிறுவனத்திடம் வெளிப்படையாக கூற வேண்டுமானால், மற்ற சில பிராண்டுகளும் இந்த விதிமுறைகளை மீறி வருகின்றன” என்றார்.
சர்வதேச அளவில் மாசு கட்டுப்பாட்டு மோசடியில் சமீபத்தில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் சிக்கிய அதே காலக்கட்டத்தில், இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் மூலம் அதன் கார்களில் ஒரு ‘மேற்கொள்ளும் சாதனம்’ (டிஃப்பீட் டிவைஸ்) பொருத்தப்பட்டு, பரிசோதனை நேரத்தில் என்ஜின்கள் குறைவான மாசுப்பாட்டை வெளியிடுவது உறுதி செய்யப்பட்டது. மேற்கூறிய சாதனம் கொண்ட வாகனங்கள் சாலைக்கு வந்த போது, அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட மாசுப்பாட்டின் அளவை விட 40 மடங்கு அதிகமாக மாசுப்படுத்தியது. மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியது தொடர்பாக, வட அமெரிக்க நாடு மற்றும் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள சட்ட விதிமுறைகளுடன் இந்நிறுவனம் போராடி வருகிறது. மேற்கூறிய மாசுப்படுத்தும் பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில், ஒரு வினையூக்கி சாதனத்தை (கேட்டலைட்டிக் டிவைஸ்) பொருத்தலாம் என்று அந்நிறுவனம் ஆலோசனை அளித்துள்ளது.
மேலும் வாசிக்க ரெனால்ட் இந்தியா உள்நாட்டில் 160% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.