ரெனால்ட் நிறுவனம் க்விட் கார்களின் தயாரிப்பை 50% உயர்த்துகிறது
published on டிசம்பர் 17, 2015 06:25 pm by nabeel for ரெனால்ட் க்விட் 2015-2019
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்
ரெனால்ட் க்விட் கார்களின் தயாரிப்பை 10,000 என்ற அளவுக்கு உயர்த்த உள்ளது
ஆரம்ப காலத்தில் இந்திய சந்தையில் காலூன்ற திணறிய ரெனால்ட் நிறுவனம் செப்டம்பர் 24 .2015 ஆம் ஆண்டு க்விட் கார்களை அறிமுகப்படுத்திய பின் வலுவாக இந்திய சந்தையில் காலூன்றியது. மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த க்விட் கார்கள் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பையும் பெற்றது. அக்டோபர் முதல் வாரம் முடிவதற்கு முன்பே 25,000 க்விட் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுவிட்டன. அதே அக்டோபர் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 50,000 என்ற இலக்கை தொட்டு சாதனை புரிந்தது. இதன் விளைவாக காரை புக்கிங் செய்து விட்டு 2 மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி வரலாறு காணாத 144சதவிகித வளர்ச்சியை ரெனால்ட் நிறுவனம் பதிவு செய்தது. கடலென பெருகி வரும் தேவையை பூர்த்தி செய்ய தற்போது மாதத்திற்கு தயாராகும் 6,000 கார்களின் எண்ணிக்கையை 8,000 முதல் 10,000 வரை உயர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது 50சதவிகித ( ஏறக்குறைய ) அதிகரிப்பு ஆகும்.
வரும் பிப்ரவரி அல்லது மார்ச் 2016 முதல் இந்த இந்த உற்பத்தி அதிகரிப்பு நடைமுறை படுத்தப்படும். ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சுனித் சஹானி இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவிக்கையில், “ க்விட் எங்களது ஒரு மிகப்பெரிய வெற்றி படைப்பு. சந்தையில் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது உற்பத்தி திறனை அதிகரித்து உள்ளோம். 98 சதவிகிதம் உள்நாட்டிலேயே தயாராகும் இந்த க்விட் கார்களை எங்களது வெண்டார்கள் துணையுடன் ( மூலப்பொருள் சப்ளையர்கள் ) அதிகப்படியான எண்ணிக்கையில் இந்த க்விட் கார்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். சென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை எங்கள் தயாரிப்பு பணிக்கு முட்டுக்கட்டை போட்டது. அதனை ஈடு செய்ய அனைவரும் கூடுதல் நேரம் பணியாற்றி வருகிறோம் " என்றும் கூறியுள்ளார்.
க்விட் கார்கள் பெற்றுள்ள அசாத்திய வெற்றியினால் ரெனால்ட் நிறுவனம் டிசம்பர் மாதம் பண்டிகை கால சலுகைகளை தனது மற்ற தயாரிப்புக்கள் மீது வழங்கியுள்ளதே தவிர, க்விட் கார்கள் மீது எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை .ஆனால் மாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ள அதே பிரிவில் உள்ள தங்களது கார்கள் மீது நிறைய சலுகைகளை அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க