அடுத்த மாதம் முதல் ரெனால்ட் க்விட் கார்கள் பிரேசில் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
published on பிப்ரவரி 11, 2016 02:49 pm by sumit for ரெனால்ட் க்விட் 2015-2019
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிரெஞ்சு நாட்டு கார் தயாரிப்பாளர்களான ரெனால்ட் நிறுவனத்தினர் தங்களது ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் வகை காரான க்விட் கார்களை பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த கார்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்தபின் இந்நிறுவனத்தினர் இத எற்றுன்மதி செய்யும் முடிவை எடுத்துள்ளனர். அறிமுகமான நான்கே மாதத்திற்குள் ஒரு லட்சம் கார்கள் இதுவரை புக்கிங் ஆகி உள்ளன. ஏற்றுமதி அடுத்த மாதம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. .
ரெனால்ட் இந்தியாவின் CEO மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சுமித் சாஹ்னி இது பற்றி கருத்து தெரிவிக்கையில் .அடுத்த மாதத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரேசில் நாட்டிற்கு க்விட் கார்கள் SKD முறையில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் இதன் காரணமாக தங்களது கூட்டு நிறுவனமான நிஸ்ஸான் நிறுவனத்தின் சென்னை ஒரகடம் தொழிற்சாலையிலும் க்விட் கார்களின் உற்பத்தி துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் முதல் கட்டமாக எத்தனை க்விட் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.
இந்திய சந்தையில் தங்களது செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசிய திரு. சுமித் சஹானி, “ தற்போது மாதத்திற்கு 6,000 கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையை 8,000 யூனிட்களாக உயர்த்தும் நடவடிக்கையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த எண்ணிக்கையை மார்ச் மாத இறுதிக்குள் மாதத்திற்கு 10,000 யூனிட்களாக உயரும்" என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .
இந்த கார்களின் சந்தை பங்கும் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5 சதவிகிதம் என்ற அளவுக்கு உயரும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். டிசெம்பர் 2015 ல் 4 .5 சதவிகிதமாக இருந்த எங்களது மார்கெட் ஷேர் ஜனவரியில் 2016 ல் 3.8 சதவிகிதம் இருந்ததாகவும் , இந்த மாதம் அது மீண்டும் 4 .5 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் 5 சதவிகிதம் என்ற இலக்கை அடைய கடுமையாக ரெனால்ட் நிறுவனம் உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
க்விட் கார்கள் 2015 ,செப்டம்பர் மாத இறுதியில் 2.56 லட்சம் என்ற வியப்பூட்டும் விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. . இந்த பிரிவு கார்களிலேயே இதுவரை இல்லாத பல சிறப்பம்சங்கள் இந்த க்விட் கார்களில் இணைக்கப்பட்டிருந்தது மட்டுமின்றி விளையும் மிக குறைவாக இருந்ததால் மிகப்பெரிய வெற்றியை இந்த கார்கள் பெற்றது. மேலும் இந்நிறுவனத்தின் பிரபலமான SUV வாகனமான டஸ்டர் வாகனங்களின் முக அமைப்பைப் போன்றேய்ந்த க்விட் கார்களின் முக அமைப்பும் இருந்ததால் மக்கள் இந்த காரை 'குழந்தை டஸ்டர் ' என்று செல்லமாக அழைக்கின்றனர். மக்களின் பேராதரவை பெற்ற இந்த காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஒன்றையும் (1.0 லிட்டர் AMT) ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ளது. இங்கே குறிப்பிடத்தக்கது.
நம் இந்திய சந்தையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த க்விட் கார்கள் அறிமுகமான நான்கே மாதத்திற்குள் ஒரு லட்சம் கார்கள் புக்கிங் ஆகியுள்ள நிலையில் 5 சதவிகித சந்தை பங்கை (மார்க்கெட் ஷேர் ) அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ரெனால்ட் நிறுவனம் களத்தில் இறங்கி வேலை செய்கிறது. ஏற்கனவே 4.5 சதவிகிதம் மார்கெட் ஷேரை தன கையில் வைத்துள்ள இந்த காட்கள் 2017 இறுதிக்குள் 5 சதவிகிதத்தை தொட்டுவிடும் என்று ஒரு ரெனால்ட் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க