• English
    • Login / Register

    ரெனால்ட் க்விட் நாளை அறிமுகமாகிறது

    ரெனால்ட் க்விட் 2015-2019 க்காக செப் 23, 2015 01:40 pm அன்று nabeel ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 11 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஜெய்பூர்:

    நீண்ட காத்திருப்புக்கு பின் ரெனால்ட் க்விட் நாளை அறிமுகமாகிறது. A பிரிவு கார்களில் முதல் இடத்தைப் பிடிக்கவும் இந்த ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் பிரிவில் தற்போது கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஆல்டோ 800  கார்களை பின்னுக்கு தள்ளி அரியணையில் ஏற தேவையான அனைத்து அம்சங்களுடன் க்விட் கார்கள் நாளை களத்தில் இறங்குகின்றன. ரெனால்ட் நிறுவனத்தின் புதிய குழந்தையாக இந்த க்விட் கார்கள் இருந்தாலும் எந்த விதத்திலும் இந்த பிரிவு கார்களை விட சளைத்ததாக எண்ணி விட முடியாது. SUV போன்ற முன்புற வடிவமைப்பு , நன்கு அழுத்தமாக கொடுக்கப்பட்டுள்ள உடல் பகுதி கோடுகள் , மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட எடுப்பான முன்புற கிரில் ஆகியவை இந்த கார்களை தனித்து நிற்கச் செய்கிறது.

    வடிவமைப்பு

    ஏராளமான வடிவமைப்பு அம்சங்கள் இந்த காரின் மூத்த சகோதரன் டஸ்டர் SUV வாகனத்திடம் இருந்தே பெறப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது.

    சக்தி

    54bhp குதிரை சக்தியையும் மற்றும் 72 nm அளவிலான முடுக்கு விசையும் வெளியிட வல்ல 3 - சிலிண்டர் 799cc  என்ஜின் இந்த புதிய க்விட் கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சக்தி மையம் (என்ஜின் ) 5 – வேக MT (கைகளால் இயக்கக்கூடிய கியர் அமைப்பு) இணைக்கப்பட்டு நகர்புற பயணத்திற்கு மிகவும் பொருத்தமானதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

    வேரியன்ட்கள்

    க்விட் நான்கு வேரியன்ட்களில் வெளிவருகிறது.

    போட்டி

    டஸ்டர் SUV வாகனத்தின் குழந்தை என்று அழைக்கும் அளவுக்கு டஸ்டர் வாகனத்தின் சாயலைக் கொண்ட இந்த க்விட் கார்கள் இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் போட்டியிட தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது. இந்த ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் பிரிவில் வேறு எந்த காருக்கும் இல்லாத SUV போன்ற கம்பீரமான தோற்றம் , இந்த பிரிவு கார்களிலேயே முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ள தொடுதிரை இன்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ள ஏராளமான அக்ஸசரீஸ்களும் க்விட் கார்களுடன் அணிவகுத்து நின்ற்கின்றன.

    was this article helpful ?

    Write your Comment on Renault க்விட் 2015-2019

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience