ரெனால்ட் க்விட் இன்று அறிமுகமாகிறது
published on செப் 24, 2015 01:35 pm by konark for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- 11 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: பிரெஞ்சு நாட்டு கார் தயாரிப்பளர்களான ரெனால்ட் நிறுவனத்தினர் தங்களது க்விட் கார்களை ஆரம்ப நிலை ( என்ட்ரி லெவல்) பிரிவில் இன்று அறிமுகம் செய்கின்றனர். 2015 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்களில் இந்த க்விட் கார் மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறு எதிர்பார்கபட்டமைக்கு அதன் SUV போன்ற வடிவமைப்பு , சரியான விலை மற்றும் 25.17 Kmpl என்று பல காரணங்களை கூறலாம்.
க்விட் காருக்கு என்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆப் மூலம் இந்த காரின் சிறப்பம்சங்கள், இந்த கருக்கான பிரேத்தியேக அக்ஸசரீஸ்கள் என்று க்விட் பற்றிய ஒரு முழுமையான 360 டிகிரி தகவல்களை பார்க்க முடியும். இது க்விட் கார்களில் தான் முதல் முதலாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலி (ஆப்) மூலம் க்விட் கார்களை அதன் போட்டி கார்களுடன் முழுமையாக ஒப்பிட்டு தேவையான விஷயங்களை அறிந்துக் கொள்வது மட்டுமின்றி புதிய க்விட் காரை இந்த செயலியை (ஆப்) பயன்படுத்தி புக் செய்யலாம்.
54 Bhp என்ற அளவிலான சக்தி மற்றும் 72 nm அளவிலான முடுக்கு விசையையும் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க 3 - சிலிண்டர் 799cc பெட்ரோல் என்ஜின் இந்த க்விட் கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. 5 - வேக கைகளால் இயக்கக்கூடிய (மேனுவல்) கியர் அமைப்பு இணைக்கப்பட்டிருக்கிறது. நிஸ்ஸான் மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பான இந்த என்ஜின் மூலம் க்விட் கார்கள் சக்தியூட்டப்படுகிறது. முற்றிலும் புதிய CMF – A ப்லேட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த க்விட் கார் மிக இலகுவானதாக (எடை குறைவாக ) இருப்பதால் அதனுடைய எடைக்கு சக்தி என்ற அளவில் ஒப்பிடுகையில் நல்ல சக்தியை பெறுகிறது.
டிஜிடல் ஸ்பீடோமீட்டர் (வேகம்காட்டி) மற்றும் 7 - அங்குல தொடுதிரை இன்போடைன்மென்ட் அமைப்பு தான் உட்புற அம்சங்களிலேயே மிகவும் சிறப்பானதாக தோன்றுகிறது. இதைத் தவிர கால் வைப்தற்கான இடம் (பூட் ஸ்பேஸ்) 300 லிட்டர் என்ற அளவுக்கு தாராளமாக அமைக்கப்பட்டிருப்பதும் லிட்டருக்கு நாட்டிலேயே மிக அதிகமாக மைலேஜ் (25.17 kmpl) தரும் விதத்தில் மேம்படுத்தப்பட்ட என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதும் இந்த க்விட் கார்களுக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கிறது.
நாம் ஆரம்பத்தில் சொன்னது போல இந்த பிரத்தியேகமான செயலி(ஆப்) மூலம் நேரிடையான ஷோரூம் செயல் விளக்கம் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வலைதள வசதியும் கிடைக்கும். இந்த வலைதளத்தை பயன்படுத்தும் நபருக்கு பிரத்தியேகமாக நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில் தேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் மூலம் க்விட் கார்களின் நேரடி வீடியோ காட்சி ஆன்லைன் மூலம் கான்பிக்கப்பட்டு விளக்கப்படும்.