ரெனால்ட் கிவிட் இக்னிஸை முந்துமா?
published on பிப்ரவரி 12, 2016 04:09 pm by manish for ரெனால்ட் க்விட் 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி சுசுகியின் இக்னிஸ் மட்டுமல்ல, ‘கம்பீரமான தோற்றம் மற்றும் ஒப்பில்லாத நடைமுறை பலன்கள் கொண்டது’ என்ற வாக்குறுதியுடன் வெளிவந்துள்ள KUV 100 மற்றும் SUV போன்ற தோற்றத்தில் வரும் அனைத்து கார்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு, புதிய கிவிட் பிரமாதமாக உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 2016 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கிளைம்பர் மற்றும் ரேஸர் என்ற இரண்டு விதமான கான்செப்ட் கார்களை ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. மைக்ரோ SUV பிரிவில் இடம்பெற்றிருந்த புதிய இக்னிஸ் மாடலைப் பார்த்து நாம் அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், ஃபிரெஞ்சு கார் தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பின் முன், அதன் புகழ் சற்றே மட்டுப்பட்டிருந்ததென்னவோ உண்மை.
பனி படர்ந்த பாதை, சரளைக் கற்கள் நிறைந்த பாதை மற்றும் எப்பேற்பட்ட பாதையானாலும், மைக்ரோ SUV –யான இக்னிஸ் அவற்றை எளிதாகக் கடந்து செல்லும் என்று, டாடா நிறுவனம் அறிவித்திருப்பதைப் பற்றி நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், இத்தகைய பாதைகளைக் கடந்து செல்ல உதவும், இக்னிஸ் காரில் உள்ள அதே 180 மிமீ கிரவுண்ட் க்ளியரன்ஸின் அளவு, கிவிட் மாடல் தயாரிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. இரண்டு கார்களிலும் இடம்பெற்றுள்ள இருக்கைகளின் அமைப்பு மற்றும் SUV போன்ற தோற்றம் ஆகியவற்றையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்து தீர்மானம் செய்யுங்கள். இக்னிஸ் கான்செப்ட் காரின் கூரான வடிவமைப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், புதிய கிவிட்டின் தோற்றம் ஆஜானுபாகமாவும் கம்பீரமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, இரண்டு கார்களிலும் இடம்பெற்றுள்ள வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இக்னிஸ் கான்செப்ட் காரின் வசதிகள் ரெட்ரோ-மாடர்ன் ஸ்டைலில் உள்ளன. ஆனால் கிவிட்டில், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் மற்றும் பல நவீன அம்சங்களைப் பார்க்க முடிகிறது.
பொதுவாக, இரண்டு கார்களை ஒப்பிடும் போது, அவற்றின் விலைப் பட்டியலைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும். கிவிடின் ஒரு லிட்டர் AMT வேரியண்ட்டின் விலை சுமார் ரூ. 3.5 லட்சங்களாக இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரம், இக்னிஸ் காரின் விலை சுமார் ரூ. 5 லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான அம்சங்கள் மற்றும் விவரங்களை நாங்கள் எடுத்துரைத்துவிட்டோம். இனி நீங்கள் யோசிக்க வேண்டும்.
அப்படி யோசிக்கும் போது, இந்த இரண்டு கான்செப்ட் கார்களின் இஞ்ஜின் திறன், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கார்களின் ஒட்டுமொத்த தரம் ஆகியவற்றிலும் நீங்கள் வித்தியாசத்தை உணரலாம். அது மட்டுமல்ல, இரு கார்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் போது, நீங்கள் ஒவ்வொரு நல்ல டீலின் மேற்பகுதியிலும் இடம் பெற்றிருக்கும் நட்சத்திர (அஸ்டெரிஸ்க் *) குறியையும் கவனிக்கத் தவறாதீர்கள்.
2016 ஆட்டோ எக்ஸ்போவில், ரெனால்ட் கிவிட் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கண்டு மகிழுங்கள்
0 out of 0 found this helpful