இந்தியாவில் தனது 190வது டீலர்ஷிப்பை ரெனால்ட் துவக்கியது
published on நவ 24, 2015 02:13 pm by nabeel
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்தியாவில் தனது டீலர்ஷிப் வட்டத்தை விரிவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு வாகன தயாரிப்பாளரான ரெனால்ட் நிறுவனம், தெலுங்கானாவில் உள்ள கரீம்நகரில் ஒரு புதிய டீலர்ஷிப்பை திறந்துள்ளது. மொத்தம் 16,584 சதுரஅடி சுற்றளவில் அமைந்துள்ள இந்த டீலர்ஷிப்பில், 4 கார்களை காட்சிக்கு வைக்கும் வகையில் 4,700 சதுரஅடி அளவிலான காட்சியமைப்பு பகுதியை கொண்டுள்ளது. அதில் 6 மெக்கானிக்கல் பேஸ் மற்றும் 3 பாடி ஷாப் பேஸ் ஆகியவற்றை உட்கொண்ட 11,884 சதுரஅடி சுற்றளவிலான பணியகத்தை (வர்க்ஷாப்) பெற்றுள்ளது.
இந்த புதிய திறப்பின் மூலம் ரெனால்ட் நிறுவனத்திற்கு தற்போது இந்தியாவில் மொத்தம் 190 டீலர்ஷிப்கள் உள்ளன. வரும் 2016 ஆம் ஆண்டின் முடிவிற்குள் நம் நாட்டில் மொத்தம் 240 டீலர்ஷிப் மற்றும் சர்வீஸ் வசதியை கொண்ட நிலையங்களை அமைக்க வேண்டும் என்று அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தென்னிந்திய பகுதியில் மட்டும் தற்போது 52 விற்பனை மற்றும் 37 சர்வீஸ் மையங்களை கொண்டு, இப்பகுதியில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் இணைப்பை மேம்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய விற்பனை மையம், 8-5-440, சர்வே நம்பர் 445-446, ஹைதராபாத் மெயின் ரோடு, கரீம்நகர் என்ற முகவரியிலும், பணியகம் பிளாட் நம்பர் 124, சர்வே நம்பர் 625 & 626, பிளாட் நம்பர் 113/A, ராஜீவ் ஆட்டோ நகர் என்ற முகவரியிலும் அமைந்துள்ளது.
இது குறித்து ரெனால்ட் இந்தியாவின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் துணைத் தலைவர் ராஃபேல் ட்ராகுரர் கூறுகையில், “தெலுங்கானாவில் உள்ள கரீம்நகரில், ரெனால்ட்டின் திறப்புவிழா மூலம் இந்நாட்டில் எங்களின் இருப்பிடத்தை விரிவுப்படுத்த முடியும் என்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் ரெனால்ட் பிராண்ட்டின் வளர்ச்சியில் எங்களுக்கு ஒரு தெளிவான இலக்கு உள்ளதால், அதை அடைய எங்களின் நெட்வர்க்கை விரிவுப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
அதேபோல ரெனால்ட் க்விட் காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதால், எங்கள் வாடிக்கையாளர்களுடனான நெருக்கம் அதிகரித்து, ரெனால்ட்டின் சிறந்த தயாரிப்புகளை அவர்களுக்கு அளிக்க முடிகிறது. எங்களின் இந்த நெட்வர்க் வளர்ச்சியின் மூலம் அதிகரித்து வரும் ரெனால்ட் கார்களுக்கான தேவையை பூர்த்தி செய்யவும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கார் உரிமையாளர் அனுபவத்தை பெற்று மகிழ்ச்சி அடைய உதவி செய்யவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இதையும் படியுங்கள்