புதுப்பொலிவுடன் ரெனால்ட் டஸ்டர்: அறிமுகத்திற்கு முன்பே திரட்டிய அறிய தகவல்கள் /புகைப்படங்கள்

published on ஜூலை 31, 2015 12:09 pm by nabeel for ரெனால்ட் டஸ்டர் 2016-2019

ஜெய்பூர்: முற்றிலும் புதிய ரெனால்ட் டஸ்டர் சென்னை சாலையில் சமீபத்தில் தென்பட்டது. சென்னை சாலைகளில் கருப்பு வினைல் கொண்டு மூடப்பட்டு இந்த வருட இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் டஸ்டர் தன்னுடைய இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கையில் எங்கள் பார்வையில் பட்டது.

வெளிப்புற தோற்றத்தைப் பொறுத்தவரை புதிய அல்லாய் சக்கரங்கள் மற்றும் மாற்றி வடிவமைக்கப்பட்ட பின்புற எல்இடி விளக்குகள் ( புதிது போல தோன்றினாலும்) முந்தைய ரெனால்ட் டஸ்டரில் உள்ளது போலவே காட்சி அளிக்கிறது. முன்புறத்திலும் கிரில் மற்றும் முகப்பு விளக்குகளில் மாற்றங்கள் இருக்கும் என்று தோன்றினாலும் அதனை உறுதி படுத்தும் வகையில் முன்புறத்தை காட்டும் புகைப்படங்கள் நம்மிடம் இல்லை.எனவே முன்புற மாற்றங்கள் இன்னும் சற்று நாட்களுக்கு புதிராகவே இருக்கும் என்று தோன்றுகிறது. காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை டாஷ் போர்டிலும் பெரிய அளவில் வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என்று தோன்றினாலும் அதை உறுதி செய்ய முடியாதபடி உட்பகுதியும் மறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய டஸ்டர் மாடல்களில் உள்ள அதே 1.5 லிட்டர் dCi டீசல் எஞ்சினும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் இந்த புதிய டஸ்டர் மாடல்களில் இருக்கும் என்று நம்பப்பட்டாலும் நம் காதுகளுக்கு வேறு விதமான தகவல்களும் கிடைக்கின்றன. அறிமுகமாகவுள்ள இந்த புதிய டஸ்டரில் 6 கியர் இரட்டை கிளட்ச் இடிசி தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதி இருக்கும் என்று கூறுகின்றன.

டஸ்டர் மட்டும் தான் இந்த கச்சிதமான எஸ்யூவி பிரிவில் 5 இருக்கைகள் கொண்ட காராக முதலில் அறிமுகமானது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. பின்னர் இதே வகை கார்களான நிசான் டேரானோ மற்றும் போர்ட் எகோஸ்போர்ட் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு டஸ்டரின் விற்பனை சற்று மந்தப்பட்டது, இதைத்தவிர மேலும் இதே பிரிவில் மாருதி எஸ் - கிராஸ் மற்றும் ஹயுண்டாய் க்ரேடா என்று தொடர்ந்து கார்கள் அறிமுகமாகி வருவது மட்டும் இல்லாமல் எஸ் - கிராஸ் மற்றும் க்ரேடா கார்கள் அறிமுகமான தினத்தில் இருந்து 18,000 கார்களுக்கு மேல் புக்கிங் செய்யப்பட்டு விட்டன. இந்த கச்சிதமான எஸ்யூவி பிரிவில் 5 இருக்கைகள் வசதி கொண்டு முதன் முதலில் அறிமுகமான டஸ்டர் கார்களுக்கு இப்போது மீண்டும் ஒருமுறை தன்னுடைய ஆளுமையை நிரூபிப்பதற்கான நிர்பந்தமும் அதற்கேற்ற சந்தர்ப்பமும் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

2016 புதிய டஸ்டர் சமீபத்தில் ரஷ்யாவில்அறிமுகப்படுத்தப்பட்டது.அதே போன்ற சிறப்பம்சங்கள் தான் இந்தியாவில் அறிமுகமாக உள்ள டஸ்டரிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்ற தோற்றமும் மற்ற மாற்றங்களும் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.       

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ரெனால்ட் டஸ்டர் 2016-2019

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience