• English
  • Login / Register

இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ள Range Rover மற்றும் Range Rover Sport கார்கள், விலை இப்போது ரூ.2.36 கோடி மற்றும் ரூ.1.4 கோடியில் இருந்து தொடங்குகிறது.

published on மே 24, 2024 07:35 pm by samarth for land rover range rover

  • 98 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி LWB காரில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக சேமிக்கலாம். மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கான விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

Range Rover SUVs Assebled in India

  • நீண்ட வீல்பேஸ் கொண்ட இரண்டு கார்களாக ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (பெட்ரோல்) மற்றும் டைனமிக் HSE (டீசல்) ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.

  • ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டைனமிக் SE (பெட்ரோல் மற்றும் டீசல்) காருக்கான உள்ளூர் அசெம்பிளியும் தொடங்குகிறது.

  • இந்த ரேஞ்ச் ரோவர் தயாரிப்புகள் 3-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை பயன்படுத்துகின்றன.

  • விலையும் பெருமளவில் குறைந்துள்ளது. அதிகபட்சமாக ஆட்டோபயோகிராபி வேரியன்ட் ரூ.56 லட்சம் குறைவாக கிடைக்கும்

  • ரேஞ்ச் ரோவருக்கான டெலிவரிகள் இன்று முதல் தொடங்கவுள்ளன. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டெலிவரி ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும். 

ஆட்டோமோட்டிவ் சொகுசு பிராண்டான ரேஞ்ச் ரோவரின் தாய் நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்ய ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகிய எஸ்யூவிகள் உள்ளூரில் தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. JLR முதன்மையாக இங்கிலாந்தில் உள்ள Solihull -ல் அதன் எஸ்யூவி -களை உற்பத்தி செய்கிறது. ஆனால் முதல் முறையாக அதன் ஃபிளாக்‌ஷிப் கார்களுக்கான உற்பத்தி இப்போது UK க்கு வெளியே தொடங்கவுள்ளது. இது இந்தியாவில் இந்த எஸ்யூவி -களுக்கான காத்திருப்பு காலத்தை கணிசமாகக் குறைக்க உதவும். 'மேட்-இன்-இந்தியா' ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி -கள் உள்நாட்டு தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும். அதே நேரத்தில் உலகளாவிய தேவையை இங்கிலாந்து தொழிற்சாலை தொடர்ந்து பூர்த்தி செய்யும்.

குறைந்துள்ள விலை

ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் சில வேரியன்ட்கள் மட்டுமே தற்போது இந்தியாவில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர்மயமாக்கலை நோக்கிய இந்த நடவடிக்கையின் மூலமாக இந்திய வாடிக்கையாளார்கள் இந்த சொகுசு எஸ்யூவி -களுக்கான விலையில் குறிப்பிடத்தக்க சேமிப்பை பெறலாம். அதன் விவரங்கள் கீழே உள்ளன:

மாடல்

முந்தைய விலை

புதிய விலை

வித்தியாசம்

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 3.0 லி பெட்ரோல் டைனமிக் SE

ரூ.1.69 கோடி

ரூ.1.40 கோடி

ரூ.29 லட்சம்

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 3.0 லி டீசல் டைனமிக் SE

ரூ.1.69 கோடி

ரூ.1.40 கோடி

ரூ.29 லட்சம்

ரேஞ்ச் ரோவர் 3.0 லி பெட்ரோல் ஆட்டோபயோகிராபி LWB*

ரூ.3.16 கோடி

ரூ.2.60 கோடி

ரூ.56 லட்சம்

ரேஞ்ச் ரோவர் 3.0 லி டீசல் HSE LWB*

ரூ.2.81 கோடி

ரூ.2.36 கோடி

ரூ.45 லட்சம்

* நீண்ட வீல்பேஸ்

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

மிட்-ஸ்பெக் பெட்ரோல்-பவர்டு ரேஞ்ச் ரோவர் LWB கார்களில் மிகப்பெரிய அளவில் சேமிப்பு கிடைக்கும். அதே நேரத்தில் என்ட்ரி-லெவல் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் வேரியன்ட்கள் மட்டுமே இந்த உள்ளூர் தயாரிப்பின் பலனைப் பெறுகின்றன.

பவர்டிரெயின்கள்

ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் உள்ளூர்மயமாக்கப்பட்ட வேரியன்ட்கள் அதே 3-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் வழங்கப்படும். அவற்றின் விவரங்கள் கீழே உள்ளன:

மாடல்

ரேஞ்ச் ரோவர் பெட்ரோல் ஆட்டோபயோகிராபி LWB/ ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் பெட்ரோல் டைனமிக் SE

ரேஞ்ச் ரோவர் டீசல் டைனமிக் HSE LWB/ ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் டீசல் டைனமிக் SE

இன்ஜின்

3-லிட்டர் டர்போ-பெட்ரோல்

3-லிட்டர்

பவர்

400 PS

310 PS

டார்க்

550 Nm

700 Nm

இந்த இன்ஜின்கள் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஆல்-வீல்-டிரைவ் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்களுக்கான மற்ற இன்ஜின் ஆப்ஷன் 4.4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல் யூனிட் ஆகும், இது இந்தியாவில் தயாரிக்கப்படாது.

மேலும் பார்க்க: Land Rover Defender Sedona எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இப்போது பவர்ஃபுல்லான டீசல் இன்ஜினுடன் வருகிறது

இந்தியாவில் அதிக தேவை உள்ளது

நடப்பு நிதியாண்டில் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவிகளுக்கான தேவை 160 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவும் நிறுவனத்தின் உள்ளூர்மயமாக்கல் நடவடிக்கைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். 2011 முதல் JLR டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சில வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இன்றுவரை புனேயில் உள்ள சக்கன் தொழிற்சாலையில் 10 JLR கார்கள் அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன அவற்றில் ரேஞ்ச் ரோவர் வேலார் மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக் போன்றவையும் அடங்கும். இந்த நடவடிக்கை இந்த எஸ்யூவி -களின் விலையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் , காத்திருப்பு காலத்தையும் கணிசமாகக் குறைக்க உதவும். 

Range Rover assembled in India

உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட ரேஞ்ச் ரோவரின் டெலிவரி இன்று முதல் தொடங்கும். அதே சமயம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டிற்கான டெலிவரி ஆகஸ்ட் 16, 2024 முதல் தொடங்கவுள்ளது.

வரவிருக்கும் எஸ்யூவிகள்

தற்போது ​இந்தியாவில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவரின் வரிசையானது ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர் வெலார், மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக் ஆகியவற்றை உள்ளடக்கியது. கூடுதலாக ரேஞ்ச் ரோவர் ஒரு ஆல் எலக்ட்ரிக் எஸ்யூவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும். 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை மற்றும் ஆல் எலக்ட்ரிக் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகியவை இங்கிலாந்து ஆலையில் மட்டுமே தயாரிக்கப்படும். 

மேலும் படிக்க: ரேஞ்ச் ரோவர் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது Land Rover ரேஞ்ச் Rover

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience