தயாரிப்புக்கு தயாராகவுள்ள Maruti e Vitara டீஸர் வெளியிடப்பட்டுள்ளது
published on டிசம்பர் 20, 2024 08:13 pm by shreyash for மாருதி இ vitara
- 88 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ் EV மற்றும் எம்ஜி ZS EV போன்ற கார்களுக்கு போட்டியாக மாருதியிடம் இருந்து வெளியாகும் முதல் ஆல்-எலக்ட்ரிக் காராக இ விட்டாரா இருக்கும்.
-
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.
-
பிரத்யேகமாக EV -களுக்காக உருவாக்கப்பட்டுள்ள மாருதியின் புதிய ஹார்டெக்ட்-இ பிளாட்ஃபார்மில் இ விட்டாரா வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
Y- வடிவ LED DRL -கள், கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் பிளாக் அவுட் அலாய் வீல்கள் ஆகியவை வெளிப்புறத்தில் உள்ள ஹைலைட்ஸ் ஆகும்.
-
உள்ளே குளோபல்-ஸ்பெக் இ விட்டாரா டூயல் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன்களுடன் வருகிறது.
-
உலகளவில் இது 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.
-
இந்தியாவில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு பதிப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காட்சிப்படுத்தப்பட்ட பிறகு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 22 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
முன்பு கான்செப்ட் வடிவத்தில் eVX என பெயரிடப்பட்ட மாருதி சுஸூகி இ விட்டாரா காரின் முதல் டீஸர் இப்போது வெளியாகியுள்ளது.ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெறும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் இ விட்டாராவின் உற்பத்திக்கு தயாராக உள்ள பதிப்பை காட்சிக்கு வைக்கவுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. e விட்டாரா ஆனது ஹார்டெக்ட்-இ (HEARTECT-e) பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மாருதியின் முதல் ஆல்-எலக்ட்ரிக் கார் ஆகவும் இருக்கும்.
டீசரில் என்ன பார்க்க முடிகிறது?
டீஸர் இ விட்டாராவின் முன்பக்கத்தை காட்டுகிறது. Y-வடிவ LED DRL -கள் ஹைலைட் செய்யப்பட்டுள்ளன. இந்த DRL -கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட e விட்டாராவின் குளோபல்-ஸ்பெக் பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கும்.
காரின் வடிவமைப்பை பற்றிய கூடுதல் விவரங்கள்
குளோபல்-ஸ்பெக் இ விட்டாராவில் காணப்படுவது போல் முன்பக்கத்தில் ஒரு பெரிய பம்பருடன் வருகிறது. அது ஃபாக் லைட்ஸ்களும் அவற்றிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் தடிமனான பாடி கிளாடிங் மற்றும் 19-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்களும் உள்ளன., இ விட்டாரா முரட்டுத்தனமான தோற்றம் கொண்டதாக உள்ளது. சுவாரஸ்யமாக பின்புற டோர் ஹேண்டில்கள் சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் e விட்டாரா ஆனது அதன் கான்செப்ட் பதிப்பில் நாம் பார்த்ததைப் போலவே, 3-பீஸ் லைட்டிங் எலமென்ட்களை கொண்ட கனெக்டட் LED டெயில் லைட்களுடன் வருகிறது. இந்தியா-ஸ்பெக் இ விட்டாரா -வும் பெரும்பாலும் இந்த வடிவமைப்பு விஷயங்களை பின்பற்றும்.
மேலும் பார்க்க: டொயோட்டா அர்பன் க்ரூஸர் EV மற்றும் மாருதி eVX: முக்கிய விவரங்கள் ஓர் ஒப்பீடு
கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
குளோபல்-ஸ்பெக் இ விட்டாரா இரண்டு-டோன் பிளாக் மற்றும் பிரவுன் கேபின் தீம் உடன் வருகிறது. ஸ்டீயரிங் ஒரு புதிய 2-ஸ்போக் யூனிட் ஆகும். அதே சமயம் ஏசி வென்ட்கள் வெர்டிகலாக கொடுக்கப்பட்டுள்ள்ளன. பிரீமியம் தோற்றத்திற்காக குரோம் அதிகமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. கேபினுக்குள் இருக்கும் முக்கிய ஹைலைட்ஸ்களில் ஒன்று அதன் டூயல் ஸ்கிரீன் செட்டப் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகமற்றொன்று டிரைவரின் டிஸ்பிளேவுக்காக).
இது ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை கொடுக்கப்படலாம்.
பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்
சர்வதேச அளவில் உள்ள e விட்டாரா 49 kWh மற்றும் 61 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அதன் விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
FWD (ஃபிரன்ட் வீல் டிரைவ் ) |
FWD (ஃபிரன்ட் வீல் டிரைவ்) |
AWD (ஆல்-வீல் டிரைவ்) |
பேட்டரி பேக் |
49 kWh |
61 kWh |
61 kWh |
பவர் |
144 PS |
174 PS |
184 PS |
டார்க் |
189 Nm |
189 Nm |
300 Nm |
இது உலகளவில் FWD மற்றும் AWD ஆகிய இரண்டு பதிப்புகளுடன் வந்தாலும் கூட மாருதியின் வரிசையில் உள்ள கிராண்ட் விட்டாரா ஏற்கனவே AWD உடன் வருவதை வைத்துப் பார்க்கையில் இது இந்தியாவில் இரண்டு ஆப்ஷன்களுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 550 கி.மீ தூரம் டிரைவிங் ரேஞ்ச் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க: ரேஞ்ச் மற்றும் விவரங்கள் குளோபல்-ஸ்பெக் பதிப்புக்கானவை. ஆகவே மேலும் இந்தியாவில் அவற்றில் வித்தியாசம் இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி இ விட்டாராவின் விலை ரூ.22 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV, டாடா கர்வ்வ் EV, மஹிந்திரா BE 6, மஹிந்திரா XEV 9e, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.