ஃபியட் லீனியா அபார்த் அறிமுகத்திற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்தேறுகிறது ஜெய்ப்பூர்:
ஃபியட் லீனியா க்காக செப் 19, 2015 06:43 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபியட் லீனியாவிற்கு பதிலாக வெளிவரும் கார், சமீபத்தில் உளவு படங்களில் சிக்கி ஆன்லைனில் வெளியானது. ஆனால் தற்போது தயாராகி வரும் லீனியாவின் அபார்த் பதிப்பும் இதன் வரிசையில் இணைந்துள்ளதாக தெரிகிறது. அடுத்து வெளிவர உள்ள ஃபியட் புண்டோ அபார்த் காருக்கு, வாடிக்கையாளர்கள் இடையே கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் கண்டு, லீனியா அபார்த் காரையும் சேர்த்து அறிமுகப்படுத்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இத்தாலி நாட்டு வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், இந்தியாவிற்கு ஏற்ற அபார்த் கார்களின் புதிய வரிசையை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அவெஞ்சுரா அபார்த் காரின் அறிமுகத்தை தொடர்ந்து, புண்டோ அபார்த் அறிமுகம் செய்யப்படும்.
ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, அபார்த் லீனியா பதிப்பை இத்தாலி வாகன தயாரிப்பாளர் உருவாக்க ஊக்கமடைந்து உள்ளார். ஏனெனில், அடுத்து வர உள்ள புண்டோ அபார்த் காரின் மூலம் அபார்த் லீனியாவிற்கு ஒரு தரமான காரின் அடித்தளம் கிடைக்கலாம். புண்டோ அபார்த் காரில் உள்ள 145 PS 1.4-லிட்டர் T-ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினே, லீனியாவின் அபார்த் பதிப்பிலும் செயல்பட உள்ளது. இந்த ஆற்றல் கூடம், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயலாற்றும்.
புண்டோ அபார்த்தை போலவே, இந்த சேடனிலும் பின்புற டிஸ்க் பிரேக்கள் மற்றும் 20mm உயரம் குறைவு ஆகிய மாற்றங்களின் மூலம் ஏரோடைனாமிக்ஸில் மேம்பாடு மற்றும் காரை கையாளும் தன்மை ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும்.
லீனியா அபார்த் காரின் அழகியலை பொறுத்த வரை, ரேர் ஸ்பாயிலர், முரண்பாடான ஏற்றங்களை கொண்ட கிரில் மற்றும் விங் மிரர்கள், அபார்த் அலாய் வீல்கள் மற்றும் பாடி டெக்கல்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்டிருக்கலாம். முதல் முறை அறிமுகம் செய்யப்பட்ட போது, வாடிக்கையாளர்கள் இடையே லீனியாவிற்கு தகுந்த வரவேற்பு கிடைக்காத நிலையில், ஃபியட் ஆர்வலர்களின் மூலம் ஆறுதல் அடைந்தது. ஆனால் தற்போதுள்ள மிகவும் சக்தி வாய்ந்த பதிப்பு, அதன் வாடிக்கையாளர்களின் வட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு உதவும் என்று தோன்றுகிறது.