• English
    • Login / Register

    இந்தியாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான Nissan Magnite கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன… புதிய நிஸான் ஒன் வெப் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    நிசான் மக்னிதே 2020-2024 க்காக பிப்ரவரி 13, 2024 06:50 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 30 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    நிஸான் ஒன் என்பது டெஸ்ட் டிரைவ் முன்பதிவு, கார் முன்பதிவு மற்றும் பல்வேறு சர்வீஸ்கள் முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் ஆன்லைன் இணையதளமாகும்.

    Nissan Magnite

    2020 ஆண்டில் இந்தியாவில் அறிமுகமான நிஸான் மேக்னைட் இப்போது 1 லட்சம் யூனிட்கள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது இந்தியாவில் நிஸான் நிறுவனத்தின் ஒரே தயாரிப்பாக மேக்னைட் உள்ளது. மேக்னைட்டின் 1 லட்சம் யூனிட்களை வழங்கும் மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், நிஸான் தனது புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்காக ‘நிஸான் ஒன்’ என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தியது.

    Nissan One

    NISSAN ONE என்பது, டெஸ்ட் டிரைவ் முன்பதிவு, கார் முன்பதிவு மற்றும் ரியல்-டைம் சர்வீஸ் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு வகையான சர்வீஸ் கோரிக்கைகளை வாடிக்கையாளர்களுக்கு அணுகுவதற்கு உதவும் ஒரு இணைய தளமாகும். பல்வேறு சேவைகளை நிர்வகிப்பதற்கு பல்வேறு இணையதளங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையை இதன் மூலமாக தவிர்க்கலாம்.

    இதையும் பார்க்கவும்: 2024 ரெனால்ட் டஸ்டர் வெளியிடப்பட்டது: என்ன எதிர்பார்க்கலாம்

    நிஸான் ஒன் திட்டத்தின் ஒரு பகுதியான ரெஃபரல் புரோகிராமையும் நிஸான் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் நிஸான் தயாரிப்புகளை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குப் பரிந்துரைக்க உதவுகின்றது, இதன் மூலம் அவர்கள் சில பலன்களைப் பெற முடியும்.

    இந்த மைல்கல்லை எட்டியிருப்பதை பற்றி நிஸான் தெரிவிக்கையில்  :

    வாடிக்கையாளர் அனுபவத்தை மாற்றியமைக்கும் நோக்கில் ‘நிஸான் ஒன்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    • நிஸான் ஒன் என்பது சிங்கிள் டிஜிட்டல் சைன்-இன்-ஆஃபரிங் ஆகும், இது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான முழுமையாக சர்வீஸ்களை வழங்குகிறது.

    • புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு ஒன் ஸ்டாப் சொல்யூஷன், அவர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும் வகையில் கஸ்டமைசேஷன்களை வழங்குகிறது

    • தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக பலன்களுடன் புதிய ‘ரெஃபர் & இயர்ன் ’திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    • ‘நிஸான் ஒன்’ அதன் பயணத்தின் புதிய கட்டத்தைக் குறிக்கும் வகையில் உள்நாட்டு சந்தைக்கு 100,000 வது மேக்னைட்டை அனுப்பும்.

    Nissan Magnite

    குருகிராம், 12 பிப்ரவரி 2024: நிஸான் மோட்டார் இந்தியா பிரைவேட். Ltd. (NMIPL) 100,000 மேக்னைட் வாடிக்கையாளர்களைக் கொண்டாடும் வகையில், அதன் 2024 வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக 'நிஸான் ஒன்' என்ற நிஸான் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிஸான் ஒன், ஒரு புதுமையான சிங்கிள் சைன்-ஆன் இணையதளமானது, வாடிக்கையாளர்களின் முழு வாடிக்கையாளர் பயணத்திலும் பல்வேறு வகையான சர்வீஸ்களை தடையின்றி அணுக அனுமதிக்கிறது.  இனிஷியல் என்கொயரி, டெஸ்ட் டிரைவ் முன்பதிவு, கார் தேர்வு மற்றும் முன்பதிவு, சர்வீஸ் வரை அனைத்தையும் இந்த தளம் மூலமாக பெறலாம். 

    இந்த துறையில் முன்னோடியாக இதுபோன்ற முதல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது, ஏனெனில் நிஸான் ஒன் பல்வேறு வாடிக்கையாளர் சேவைகளை ஒன்றிணைத்து வாடிக்கையாளர் தேவைகளை கருத்தில் கொண்டு இது யூஸர்-ஃபிரெட்ன்லி மற்றும் எளிதான நேவிகேஷன் அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கான நிஸான் மேற்கொண்ட தொடர்ச்சியான மாற்றம் மற்றும் வணிக முன்னேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது சமீபத்தில் புதிய மேக்னைட் வேரியன்ட் அறிமுகங்கள், நெட்வொர்க் விரிவாக்கம் மற்றும் தலைமை நியமனங்கள் ஆகியவற்றை பார்க்க முடிந்தது.

    நிஸான் மோட்டார் இந்தியாவின் சந்தைப்படுத்தல், தயாரிப்பு மற்றும் வாடிக்கையாளர் அனுபவ இயக்குனர் மோகன் வில்சன் இதைப் பற்றி கூறியதாவது: "இந்த மாதம் எங்கள் வாடிக்கையாளர்களின் 100,000 மேக்னைட் என்ற மைல்கல்லை கொண்டாடும் போது, புதிய நிஸான் ஒன் -தளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த வலுவான, புதுமையான இயங்குதளம் நிசானின் 'வாடிக்கையாளர் முதல்' தத்துவத்தின் பிரதிபலிப்பாகும். இது அனைத்து வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகள், திறன் மற்றும் ஏற்கனவே உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்ய தகவல், கஸ்டமைசேஷன் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த தளம் முதன்முதலாக, ரெஃப்ர்& இயர்ன் திட்டம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கும் நிஸான் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றியைக் காட்டுவதற்கும் நிஸான் நிறுவனத்தின் வழியாகும்.

    நிஸான் ஒன் திறமையான மற்றும் தடையற்ற வாடிக்கையாளர் பயணத்தை வழங்குகிறது, இதன் விளைவாக மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறது. நிஸான் ஒன் உடன், தற்போதுள்ள மற்றும் வருங்கால வாடிக்கையாளர்கள் இருவரும் நிறுவனத்துடன் தங்கள் பயணத்தை நிர்வகிக்க வெவ்வேறு இணையதளங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் எளிமையான தகவல்தொடர்புக்கு தளம் அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்கள் தங்கள் நிஸான் வாகனத்திற்கான சர்வீஸ் ரிமைண்டர் தொடர்பான தகவல்தொடர்புகளைப் பெற இதில் உள்ள வசதியை தேர்வு செய்யலாம். நிஸான் ஒன் தளமானது நிஸான் மோட்டார் இந்தியாவில் முதல் முறையாக நிகழ்நேர சேவை முன்பதிவை வழங்குகிறது, இது சர்வீஸ் ரிமைண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொடர்பு உட்பட மேம்பட்ட வாடிக்கையாளர் பயண மேலாண்மைக்கு உதவும்.

    Nissan Magnite Interior

    சமீபத்திய மைல்கல்லாக, நிஸான் மோட்டார் இந்தியா சென்னையில் உள்ள அலையன்ஸ் ஆலையில் (RNAIPL) இருந்து இந்திய சந்தைக்கு 100,000 மேக்னைட் யூனிட்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இந்தச் சாதனையானது, உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குதல், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதால் மற்றும் இந்தியாவின் முக்கிய வாகன உற்பத்தி மையமாகத் இருக்கும் நிஸானின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

    நிஸான் ஒன் திட்டத்தின் ஒரு பகுதியாக,”ரெஃபர் & இயர்ன்" திட்டத்தையும் நிஸான் அறிமுகப்படுத்தியுள்ளது, இது தற்போதுள்ள நிஸான் வாடிக்கையாளர்களுக்கு பல பிரத்யேக நன்மைகளுடன் வெகுமதி அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய "ரெஃபர் & இயர்ன்" திட்டத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் நிஸான் காரை வாங்க தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிந்துரைக்கலாம். இதன் மூலமாக பல சேவைகள் மற்றும் பலன்களை பெறும் வகையில் புள்ளிகளைப் பெறலாம்.

    மேலும் படிக்க: நிஸான் மேக்னட் AMT

    was this article helpful ?

    Write your Comment on Nissan மக்னிதே 2020-2024

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience